Skip to main content

மயிலாப்பூரில் தமி்ழ்ப்புத்தாண்டு

தமி்ழ் வருஷப்பிறப்பு - 14 4 2007 அன்று காலை 10 40 மணிக்கு. ஸர்வஜித் என்னும் பெயர்கொண்ட இந்த வருஷத்தில் பெயருக்கு தகுந்தாற்போல், அனைவருக்கும் அனைத்திலும் வெற்றி கிட்டும்.எல்லாருக்கும் என்னுடைய வருஷப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.

பண்டிகை என்றாலே மயிலாப்பூர் களை கட்டிவிடும் - எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, எத்தனை முறை எழுதினாலும் சலிக்காத ஒரு இடம் மயிலாப்பூர் தெற்கு மாட வீதி.

இன்றும் அப்படித்தான் :- வெ. அக்ரஹாரம் + ராமகிருஷ்ண மடம் சாலை முனையிலிருந்தே தெற்கு மாட வீதி களைகட்டி விட்டது. மல்லிகை, முல்லை, தாமரை, சாமந்தி என குவியல் குவியலாக பூக்களைக் குவித்திருந்தனர்.பழங்களைப் பற்றி எழுதவே தேவையில்லை - வண்டி வண்டியாக பழங்கள். மலை மலையாக தேங்காய்கள் !சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அத்தனை வேப்ப மரங்களையும் "மொட்டை அடித்து" விட்டார்களோ என வியக்கும் வண்ணம் வேப்பம்பூவான வேப்பம்பூ !! மாவிலை கொத்துக்கள். தோரணங்கள். பச்சடிக்கு ஆயிரக்கணக்கான மாங்காய்கள்.

பூஜைக்கு வேண்டிய கல்பூரம், சாம்பிராணி, ஊதுவத்திகள் என தெருவே ஒரு பக்தி மணத்துடன் வாசம் வீசியது. மக்கள் கூட்டமும் நிறைய. இந்தக் கோடியிலிருந்து அந்தக்கோடி வரை சுமார் முக்கால் கிமீ தூரமுள்ள தெற்கு மாட வீதி என்றைக்குமே என்னுடைய மி்கப்பிடித்த தெரு. இன்று மாலை என் மகிழ்ச்சி பல மடங்காகியது.

எல்லாருக்கும் புது வருஷ வாழ்த்துக்கள்.

ராஜப்பா
14-4-2007

Mylapore

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...