Skip to main content

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை
         இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
        மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின் மவுன
        நிலைவந் திடநீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது;
       இவையும் தரநீ கடவாய்!

பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல்.

சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள்.

ராஜப்பா
10:55
20-05-2011

Comments