ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை. இன்று ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை - ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை. எல்லார் வீடுகளிலும் நடந்தது போலவே எங்கள் வீட்டிலும் பூஜை சிறப்பாக நடந்தது. நேற்று மாலை மயிலாப்பூர் (வேறு எங்கு, தெற்கு மாட வீதிக்குத்தான் !) சென்று பழங்கள், புஷ்பங்கள் (விலையை மட்டும் கேட்டு விடாதீர்கள் - தாழம்பூ 50 ரூ !!) வாங்கி வந்தோம். அம்மனை அலங்கரித்து மற்ற ஏற்பாடுகளையும் விஜயா , காயத்ரி இருவரும் செய்தனர். அவர்களுக்கு கூடமாட ஒத்தாசையாக இரண்டு குட்டிகளும் இருந்தார்கள் (ஒத்தாசையாக .. ??) இன்று விடியற்காலை சீக்கிரமே எழுந்து, ஸ்நானம் முடித்து, பூஜைக்கான ஏற்பாடுகள், இட்லி வடை, பாயசம், இரண்டு வித கொழுக்கட்டைகள் இன்ன பிற செய்து, பூஜையை ஆரம்பிக்கும் போது மணி 9-30. நான் மந்திரம் சொல்ல, விஜயாவும் காயத்ரியும் பூஜை செய்தனர். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து பூஜை முடியும்போது 10-45 ஆகி விட்டது. வீட்டிலே பூ, பழம், போன்று நெறய்ய சாமான்கள் இருந்தது, ரெண்டு குட்டிகளுக்கும் ஒரே குஷி. எல்லாவற்றையும் வாரி கொட்டி, சந்தன கிண்ணத்தில் குங்குமத்தை கொட்டி, ஆப்பிள்களை DUKES பந்துகளாக நினைத்து பௌன்சர்கள் போட்டு...