Skip to main content

மீண்டும் மயிலாப்பூர் Mylapore

இதுக்கு முன்னாலேயே சொல்லிட்டேன் - மயிலாப்பூரை, கோயில் மாடவீதிகளை, கிரி டிரேடிங்ஸ் (Giri Tradings), பத்தி திரும்ப திரும்ப எழுத, எனக்கு அலுக்காது, எப்பவும் சலிக்காதுன்னு.

நேற்று (30 டிசம்பர் 2007) மாலையும் சென்றேன் (விஜயாவுடன்). வாசுவிற்கு ஒரு சில சாமான்கள் தேவைப்பட்டதால் அவற்றை வாங்கலாம் எனப் போனோம். நேற்று என்ன விசேஷம்னு தெரியலே, வெள்ளீஸ்வரர் கோயிலிலே ஒரே கூட்டம். வழக்கமான மார்கழி மாச கூட்டம்தானோ?

அங்கிருந்து இடது பக்கம் திரும்பி, ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் கோபுரம் வழியாகப் போனோம். ரெண்டு மாசங்களுக்கு முன்பு இடியால் சேதமுற்ற கோபுரத்தை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது - கோபுரத்தை தென்னங்கீற்றுகளால் மூடியிருந்தார்கள்.

கோயிலின் உள்ளே போகவில்லை - போலாமா, கூடாதா எனக் குழப்பம். "கோபுர தரிசனம், கோடி பாப விமோசனம்" என அமைதிப்படுத்திக் கொண்டு, கிரி கடையில் நுழைந்தோம். இந்தக் கடையில் நுழையும் ஒவ்வொரு முறையும் ஆனந்தம், பரவசம்தான்.

2-ம் மாடியில் பாட்டு CDக்களை கேட்க, வாங்க ஒரே கூட்டம். ஸ்ரீமதி விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) உபன்யாச CD / DVDக்களான "சுந்தர காண்டம்" மற்றும் "சீதா கல்யாணம்" (latest வெளியீடு Moser Baer - விலை 89/- each) - சுடச்சுட விற்றுக்கொண்டிருந்தன. (ஸ்ரீமதி விஷாகா ஹரியைப் பற்றி இன்னொரு நாள்).

3-ம் மாடிக்கு ஏறினோம். வைதிகஸ்ரீ மாத இதழின் (Vaithika Sri) ஆசிரியர் எழுதிய "ஸந்தேஹ நிவாரணி" பாகம் 1 முதல் 4 வரை வாங்கினோம். பின்னர், சமையல் உலகின் LEGENDARY யான ஸ்ரீமதி மீனாக்ஷி அம்மாள் (Meenakshi Ammal) எழுதிய "சமைத்துப் பார்" (Samaiththu Paar)பாகம் 1 முதல் 3 வரை, வாங்கினோம்.

இந்த புஸ்தகங்களை வாங்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. வைப்பதற்கு சரியான இடம் இல்லாததால், இதுநாள் வரை வாங்கவில்லை --- தற்போதுதான் பெரிய புஸ்தக அலமாரி வாங்கி விட்டோமே !

ஸ்ரீமதி மீனாக்ஷி அம்மாளைப் பற்றி நினைக்கும்போதே அசாத்திய வியப்பாக இருக்கிறது. அடுத்த BLOG இந்த LEGEND குறித்துத்தான்.

கடைக்கு வெளியே, சன்னதி தெருவையே அடைத்துக் கொண்டு பெரிய பந்தல், விளக்கு ஒளியில். ஸ்ரீசாஸ்தா ஐயப்பன் ஸ்வாமிக்கு லக்ஷார்ச்சனை. ஐயப்ப பக்தர்கள் கூட்டம். ஸ்ரீ ஜேசுதாஸின் தேன் குரலில் சில நிமிஷங்கள் நனைந்தோம்.

செவிக்கும், மனசுக்கும் உணவு ஆன பின்னர், சிறிது வயிற்றுக்கும் ஈய வேண்டாமா? கால்கள் தாமாகவே கற்பகாம்பாள் மெஸ் நோக்கிச் சென்றன. Oh God, அங்கும் ஒரே கூட்ட நெரிசல். சில நிமிஷங்கள் "அடை அவியல், நெய் ரோஸ்ட்" மணத்தை மூக்கால் ரசித்து விட்டு, வீடு திரும்பினோம்.

அடுத்த வாரம் (ஜன 4 முதல்) இந்த இடத்தில் "மயிலாப்பூர் விழா" கோலாகலமாக நடக்க உள்ளது - அது குறித்து பின்னால் பேசுவோம், என்ன?

ராஜப்பா
12:10 on 31 DEC 2007

Comments

Anonymous said…
Sir,

I am also from Mylapore... but not living there currently... Ur post gave nostalgic memories. U've a great way of expressing urself... pinreengha, sir... Keep it coming. I will be waiting to read more from you.

--arvind.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...