Skip to main content

சௌ. கிரிஜா



கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம ஐயர் - நாகலக்ஷ்மி தம்பதியர்க்கு, 5-வது மகளாக கிரிஜா சென்னையில் பிறந்தாள். கிரிஜாவிற்கு சபீதா, சாவித்திரி, ரமணா, பாபு என்று 4 அக்காக்கள் உண்டு. கிரிஜாவின் தகப்பனார் நரசிம்ம ஐயர் ஒரு businessman ஆக இருந்தார்.

கிரிஜா மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்துவிட்டாள். தாய்க்கு. பின்னர், கிரிஜாவை வளர்த்து, பெரியவளாக்கி, திருமணம் செய்து ஒரு மனுஷியாக்கிய பெருங்கடமையை அவளது அக்காக்கள், குறிப்பாக ரமணா மற்றும் பாபுவே செய்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை "கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி"யில் தனது பள்ளிப்படிப்பை முடித்த கிரிஜா Queen Mary's College-ல் PUC படித்தாள். Mint-ல் உள்ள Govt Arts College-ல் 1975-ம் வருஷம் BA டிகிரி வாங்கினாள். படித்த கையோடு, ஒரு தனியார் அலுவலகத்தில் ஸ்டெனோவாக ஆறு மாதங்கள் வேலை செய்தாள்.

1975-ம் வருஷம் டிசம்பர் 12 ஆம் தேதியன்று, கிரிஜாவிற்கும், நமது சுகவனத்திற்கும் திருக்கழுக்குன்றத்தில் திருமணம் நிகழ்ந்தது. இவர்களது திருமண வாழ்க்கை சென்னை திருவல்லிக்கேணியில் துவங்கியது. மகிழ்ச்சியின் அடையாளங்களாக முதலில் 1976 அக்டோபரில் சுதாவும், பின்னர் 1980 ஜூன் மாதத்தில் சுபாவும் பிறந்தனர். இருவருமே திருவல்லிக்கேணி Gosha hospital-ல் பிறந்தனர்.

இதுநாள் வரை சென்னையில் Ashok Leyland company-யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுகவனத்திற்கு, பதவி உயர்வும், இட மாற்றலும் கிடைக்க, 1980 ஜூலையில் கல்கத்தா சென்றனர். அங்கிருந்து 1983 டிசம்பரில் பாண்டிச்சேரிக்கும், 5 வருஷங்களுக்குப் பிறகு 1988 அக்டோபரில் புதுடில்லிக்கும் சென்றனர். டில்லியில் 5 ஆண்டுகள் வசித்த பின்னர் 1993 ஜூனில் சென்னைக்கே மீண்டும் திரும்பினர். முதலில் Luz Church Road-லும், பின்னர் 2000 செப்டம்பரில் திருவான்மியூர் இந்த இல்லத்திற்கும் வந்தனர். சுகவனம் தனது பணிகளிலிருந்து 2004-ம் வருஷம் ஓய்வு பெற்றான். சுகவனம் - கிரிஜாவின் சஷ்டி அப்த பூர்த்தி 2006 நவம்பர் 13 ஆம் தேதியில் மிக விமரிசையாக நடந்தேறியது.

32 வருஷங்களுக்கு முன்பு நம்முடைய GRS குடும்பத்திற்குள் வந்த கிரிஜா, இந்த 32 ஆண்டுகளில் குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கி, குடும்பத்தில் நடந்த ஒவ்வொரு சுக - துக்கங்களிலும் முழு ஈடுபாட்டுடன் இணைந்து பங்கு பெற்றாள். 1977 டிசம்பரில் நடந்த ஜெயராமன் - கல்யாணி திருமணம் தொடங்கி, இருபது தினங்கள் முன்பு (நவ 16 ஆம் தேதி) நடந்த சுபா - மகேஷின் கிரகப்பிரவேசம் வரை கிரிஜா கலந்து கொண்டு ஓடியாடி வேலை செய்து பங்கு பெற்ற வைபவங்கள் எத்தனை எத்தனையோ!

சாவித்திரி - ஸ்ரீனிவாஸன் மகன் கணேஷிற்கு 1979-லும், சுந்தரேசன் - பட்டு மன்னி மகன் சுதாகருக்கு 1983-லும், எங்கள் மகன் அஷோக்கிற்கு 1984-லும் உபநயன ப்ரம்மோபதேசம் செய்தனர். 1997-ல் நடந்த சந்துரு அண்ணா - மன்னியின் மகன் ஸ்ரீகாந்த் கல்யாணத்தில் மணையில் உட்கார்ந்து, ஜெயஸ்ரீயை பாணிக்கிரகணம் செய்வித்துக் கொண்டனர்.

2002- பிப்ரவரியில் மூத்த மகள் சுதாவின் திருமணத்தை, திருச்சி ஸ்ரீ விஜயராகவன் - சாரதா தம்பதியின் மகனான ராமச்சந்திரன் என்கிற சந்தருடன் நடத்தினர். சுதா - சந்தருக்கு 2002 - நவம்பரில் தனுஷ் பிறந்தான். அடுத்து, இரண்டாவது பெண் சுபாவின் திருமணத்தை 2005 - ஏப்ரலில், திருநெல்வேலியை சேர்ந்த ஸ்ரீ ராஜாமணி - சீதாலக்ஷ்மி தம்பதியின் மகனான மகேஷுடன் நடத்தினர். சுபா - மகேஷிற்கு 2006 மே மாதம் சுகோஷ் பிறந்தான். இரண்டு பிரசவங்களையும் கிரிஜா மிகவும் பொறுப்புடனும், பொறுமையுடனும் பார்த்துக்கொண்டாள். அவள் பட்ட சிரமத்திற்குப் பரிசாக, இரண்டு பேரன்களும் தங்கள் அன்புப் பாட்டியை விட்டு பிரியவே மாட்டார்கள். அவர்களது பிஞ்சு முகங்களைப் பார்த்து, கொஞ்சு மழலைகளைக் கேட்டு, கிரிஜா பாட்டியும் ஆனந்த பரவசமடைவாள்.

17 பாபுராவ் தெருவில் 1979-ம் வருஷம் நடந்த நம் அப்பா - அம்மாவின் சதாபிஷேக வைபவம் தொட்டு, சென்ற (2007) ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் நடந்த அஷோக் - நீரஜாவின் கிரகப்பிரவேசம் வரை எந்த ஒரு விழாவையும் விட்டுக் கொடுக்காமல், கிரிஜா வந்திருந்து கலந்து கொள்வாள். "கலந்து கொள்வது" என்றால் பேருக்கு கலந்து கொள்வது இல்லை - முழு ஈடுபாட்டுடன் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வாள். சின்னதோ பெரியதோ, எல்லா வைபவங்களிலும் முதல் ஆளாக attendance கொடுப்பது கிரிஜாவாகத்தானிருக்கும். அதேபோன்று, விழா முடிந்ததும் அந்த இடத்தை ஒழுங்குபடுத்தி, நேராக்கி விட்டு, வீட்டுக்காரர்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்துவிட்டு, கடைசி கடைசியாக வீடு திரும்புவதும் கிரிஜாதான். பரோபகார சிந்தனை மிகுந்தவள்.

நம் குடும்ப வைபவங்கள் தவிர, மற்ற உறவினர்கள், நண்பர்கள் போன்றோரின் வீட்டு விழாக்களிலும் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டு எல்லா ஒத்தாசைகளையும் , கிரிஜா இனிய முகத்துடன் செய்து கொடுப்பாள். விருந்தினர்களை உபசரிப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் அன்புடன் அரவணைத்துப் போவது, யாரையும் பார்த்தவுடன் மிக எளிதில் அவர்களை கவர்ந்து, நட்பு பாராட்டி தோழிகளாக் ஆக்கிக்கொள்வது, அந்த நட்பை இறுதி வரை விடாமல் தொடர்ந்தது, எல்லாரையும் அவர்கள் மனம் கொஞ்சம் கூட கோணாமல் தன் கனிவான் பேச்சாலும், இனிய பழக்க வழக்கங்களாலும் நல்ல தோழிகளாக ஆக்கிக் கொள்வது - இவை கிரிஜாவின் ப்ரத்யேக குணங்கள்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருந்த நம் கிரிஜா இன்று வானத்தவர்க்கு நல்விருந்தாகி விட்டாள்.

சமீப காலத்தில் சில உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்; இருந்த போதிலும், அவற்றை வெளியே காட்டிக் கொள்ளாமல், அன்றலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு குறையாமல், மாறாமல், புன்னகை தவழும் அந்த இனிய முகத்துடன் கடைசி விநாடி வரை அவள் வளைய வந்தாள். பல வருஷங்களாகவே அவள் மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தாள். உப்பில்லாமல், உறைப்பில்லாமல், எண்ணெய் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வந்த அவளது அந்த மன உறுதி உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது. மிக மிகப் பொறுமையுடன் தன்னுடைய எல்லா உடல் கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு வந்தாள்.

என்னுடைய, மற்றும் விஜயாவினுடைய சொந்த அனுபவத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1993-ல் Catering Technology படிப்பு முடித்ததும், அருணுக்கு சென்னையில் வேலை கிடைத்தது. அவனை இங்கு கிரிஜாவின் பொறுப்பில் விட்டு விட்டோம். பெற்ற தாயைப் போலவே, மிக அன்புடனும், பாசத்துடனும் எங்கள் அருணை தன்னுடைய மூத்த மகனாகவே நினைத்து, ஒன்றல்ல இரண்டல்ல, ஆறு வருஷங்கள் அவனை கிரிஜா பார்த்துக் கொண்டாள். பின்னர் அர்விந்தையும் ஆறு மாதங்களுக்குப் பார்த்துக் கொண்டாள். இந்த விஷயங்களை எங்களால் என்றுமே மறக்க முடியாது.

மயிலாப்பூர் நவசக்தி விநாயகரின் ஆழ்ந்த பக்தையான கிரிஜா இன்று நம்மிடையே இல்லை. ஒரு சீரிய மனைவியாக, அற்புதமான ஒரு அம்மாவாக, பாசமிகு பாட்டியாக விளங்கிய கிரிஜாவின் நற்குணங்கள் நீங்காத நினைவுகளாக நம் எல்லாருடைய இதயங்களிலும் ஒளி வீசிக் கொண்டிருக்கும். "அண்ணா, அண்ணா" என்று என்னை வாய் நிறைய பாசமுடன் கூப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இனிய உள்ளம் என் நினைவில் என்றும் இருக்கும்.

அந்த நல்ல ஆத்மா சாந்தியடைய நாம் எல்லாரும் மனப்பூர்வமாகப் பிரார்த்திப்போம்.

அதே சமயம், மனைவியை இழந்து வேதனைப்படும் சுகவனத்திற்கும், அன்பு அம்மாவை இழந்து மனம் தவிக்கும் சுதா, சுபாவிற்கும், கிரிஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாத வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பேரிழப்பாகும். அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றும் போதே, இந்த பேரிழப்பை, பெரிய இடியை தாங்கிக்கொண்டு, வாழ்க்கையை மேற்கொண்டு தொடர, வேண்டிய மன உறுதியையும், உடல் நலத்தையும் அவர்களுக்குத் தர நவசக்தி விநாயகரை வேண்டி வழிபடுவோம்.

----------- 25 நவம்பர் 2007 அன்று மாலை 5-15 மணிக்கு சென்னையில் உயிர் நீத்த கிரிஜாவின் 13-ஆம் நாள் சுபஸ்யத்தன்று (7 டிசம்பர் 2007, வெள்ளிக்கிழமை) ராஜப்பா தன்னுடைய நினைவுகளை, எண்ணங்களை மற்ற உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு, எழுதி படித்த இரங்கல் செய்தி. இலக்கணப் பிழை மற்றும் கருத்துப் பிழைகளை சுகவனம் நிச்சயம் பொறுத்துக் கொள்வான்.

ராஜப்பா
திருவான்மியூர், சென்னை
7 - 12 - 2007.

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011