Skip to main content

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் - பகவத் கீதை Sri Velukkudi krishnan

சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலுக்கு சென்றிருந்தோம். அங்கு இரண்டு பெரிய போஸ்டர்களை பார்த்தோம், படித்தோம்.

யாரோ ஒரு "வேளுக்குடி கிருஷ்ணன்" (Sri Velukkudi Krishnan) என்பவர் தினமும் பொதிகை டிவியில் காலை 6-30 முதல், 6-45 வரை பகவத் கீதை (Bhagavad Gita) உபன்யாசம் செய்ய இருக்கிறார் எனப் படித்தோம். அப்போது இந்த ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. காலையில் எழுந்து ஒரு நாள் கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்துக் கொண்டோம்.

2007, ஜனவரி 18, வியாழக்கிழமையும் வந்தது. 6-15க்கு எழுந்துகொண்டு டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டோம்; 6-30 ஆயிற்று. வேளுக்குடி வந்தார். கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். என்ன ஒரு கம்பீரமான குரல்! தெளிவான நடை. இனிய, எளிய தமிழ் தங்குதடையின்றி நீரோட்டமாக ஓடி வருகிறது. மேற்கோள் காட்ட பலப்பல பாசுரங்கள், ஸ்லோகங்கள்.

மகுடி கேட்ட நாகம் என்று சொல்வார்களே, அது போன்று நானும், விஜயாவும் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனின் (Velukkudi Krishnan) பரம ரசிகர்களாகி விட்டோம். இதோ, ஒரு வருஷம் ஆகப்போகிறது - பம்பாயில் இருந்த 10-12 நாட்களைத் தவிர, நாங்கள் இருவரும் இவரது கீதை உபன்யாசத்தை ஒரு நாள் கூட விடாமல் தினந்தோறும் காலையில் கேட்டு வந்துள்ளோம்.

முதல் இரண்டு நாட்களுக்கு, குளிக்காமல் இந்த உபன்யாசத்தைக் கேட்டேன். பின்னர் சென்ற ஒரு வருஷமாகவே தினமும் 5-45க்கே எழுந்து, குளிர்நீரில் நீராடி விட்டுத்தான் டிவியின் முன்னால் உட்காருகிறேன். சென்ற இரண்டு மாசங்களாக இது 5-15 என மாறியுள்ளது. 5-30 க்கே குளித்து விடுகிறேன்.

இந்தமாதிரி ஒரு நியமமும், மனக்கட்டுப்பாடும் எனக்கு எப்படி வந்தது? யார் அருளியது? ஸ்ரீ கண்ண பரமாத்மாவும், ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனும் தான் !! அவர்கள் பாதாரவிந்தங்களில் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.

Srinivasa Kalyanam
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் 01-01-2008 அன்று காலை ஸ்ரீ ஸ்ரீநிவாஸக் கல்யாணம் என்ற தலைப்பில் ஒரு உபன்யாசம் மயிலாப்பூரில் நிகழ்த்தினார். அதைப் பற்றி இங்கே படிக்கவும்.

ராஜப்பா
12:30, 18-01-2008

Comments

svisweswaran said…
we could now enjoy watching oration of sree vELukkudi krishNan in kumudam's Web TV as well, FYI....

With sincere prayers and unconditional growing love,
Visweswaran A Subramanyam
[theproudindian_2000@yahoo.co.in]

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை