முருங்கைக் கீரை யில் (drumstick) நிறைய இரும்புச்சத்து, கால்ஷியம், பொட்டாஷியம் இன்னும் பல தாதுக்கள் நிரம்பியிருப்பதை அறிவோம். மிக முக்கியமான் மருந்து சத்துக்கள் அடங்கியது. ஆனால் --- முருங்கைக் கீரையை வாங்கி அதை "ஆய" ஆரம்பித்தால், அனுமார் வால் மாதிரி நீண்....டு கொண்டே போகும். காம்புகளை எடுத்து, ஒவ்வொரு இலையாக ஆய்வதற்குள் ... "அப்பாடா" என்று ஆகிவிடும். " ஏண்டா வாங்கினோம் " என்று கூட தோன்றும். ஒருவழியாக (ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குப் பின்னர்) ஆய்ந்து முடித்து, அலம்பி பாத்திரத்தில் போட்டு சமைக்க ஆரம்பித்தால், சமைக்கவும் நீண்....ட நேரம் ஆகும். ஆனால் --- சமைக்கும்போதே கீரையின் மணம் எட்டு ஊருக்கு பரவும். சமைத்த பின்னர் இதன் அளவு மிகவும் கொஞ்சமாக குறைந்துவிடும். 5 - 6 மணி ஆய்ந்த உழைப்பிற்கு பலன் இவ்வளவுதானா எனக் கேட்கத்தோன்றும். ஆனால் --- தட்டிற்கு அது வந்த உடனேயே காலியாகிவிடும். என்ன அருமையான ருசி. எனக்கு மிகவும் பிடித்த கீரை முருங்கைக்கீரை. ப.பருப்பு போட்டு பண்ணும் மசியல், அடைமாவில் ஒரு கைப்பிடி முருங்கை இலையைப் போட்டு அடை வார்ப்பது, நெய் காய்...