Skip to main content

முருங்கைக் கீரை


முருங்கைக் கீரையில் (drumstick) நிறைய இரும்புச்சத்து, கால்ஷியம், பொட்டாஷியம் இன்னும் பல தாதுக்கள் நிரம்பியிருப்பதை அறிவோம். மிக முக்கியமான் மருந்து சத்துக்கள் அடங்கியது.



ஆனால் --- முருங்கைக் கீரையை வாங்கி அதை "ஆய" ஆரம்பித்தால், அனுமார் வால் மாதிரி நீண்....டு கொண்டே போகும். காம்புகளை எடுத்து, ஒவ்வொரு இலையாக ஆய்வதற்குள் ... "அப்பாடா" என்று ஆகிவிடும். "ஏண்டா வாங்கினோம்" என்று கூட தோன்றும். ஒருவழியாக (ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குப் பின்னர்) ஆய்ந்து முடித்து, அலம்பி பாத்திரத்தில் போட்டு சமைக்க ஆரம்பித்தால், சமைக்கவும் நீண்....ட நேரம் ஆகும்.


ஆனால் --- சமைக்கும்போதே கீரையின் மணம் எட்டு ஊருக்கு பரவும். சமைத்த பின்னர் இதன் அளவு மிகவும் கொஞ்சமாக குறைந்துவிடும். 5 - 6 மணி ஆய்ந்த உழைப்பிற்கு பலன் இவ்வளவுதானா எனக் கேட்கத்தோன்றும்.

ஆனால் --- தட்டிற்கு அது வந்த உடனேயே காலியாகிவிடும். என்ன அருமையான ருசி.

எனக்கு மிகவும் பிடித்த கீரை முருங்கைக்கீரை.

ப.பருப்பு போட்டு பண்ணும் மசியல், அடைமாவில் ஒரு கைப்பிடி முருங்கை இலையைப் போட்டு அடை வார்ப்பது, நெய் காய்ச்சும்போது, கடைசியில் கொஞ்சம் இலைகளைப் போடுவது -- இவற்றைத் தவிர, வேறு ரெசிபிக்கள் எழுதவும்.

இன்று (25-11-2008) காலை ஒரு கட்டு கீரை வாங்கினோம் (10/-) மூன்று மணி நேரம் ஆகிவிட்டது; இன்னும் 30% கூட ஆய்ந்தபாடில்லை.




குழந்தை அதிதியும் மிக உற்சாகமாக கீரை ஆய்ந்து கொடுத்தாள் - இன்று கீரையின் ருசி இன்னும் அதிகமாக இருக்கப்போகிறது.


ராஜப்பா
25-11-2008 காலை 11 மணி

Comments

Chittappa, you have increased my appetite though I just finished my lunch. Please send some... I do not remember when I had last... Probably at Cuddalore three years back prepared by Kalyani (Vaishali's Sister)from their Kitchen Garden....

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...