Skip to main content

Posts

Showing posts from February, 2009

நகைச்சுவை அரசன் நாகேஷ் NAGESH

நாயர் அறைக்கு வந்த அவனுக்கும் நாயருக்கும் நிகழ்ந்த சொல்லாடல்: அவன்: “எந்தா நாயர், நீ குழம்பு சாதம் சாப்பிட்டியா? நாயர்: “சாப்பிட்டேன்” அவன்: ”ரசம் சாதம்?” நாயர்: “ஆச்சு” அவன்: “தயிர் சாதம்?” நாயர்: “அதுவும் ஆச்சு” அவன்: “ அப்றம், பழம் சாப்டிருப்பியே?!” நாயர்: “ ரெண்டு பழம் சாப்பிட்டேன்” ரெண்டு நிமிஷம் மௌனம். பின்னர், “நான் உன்னை இது சாப்ட்டியா, அது சாப்ட்டியா, பழம் தின்னியா”ன்னு கேட்டேனே, நீ ஒரு தடவையாவது, என்னை சாப்பிட்டியா?”ன்னு கேட்டியா?” என்று நாயரைக் கேட்பான். நாயருக்கு அப்போது தான் உறைக்கும். நமது கண்களில் நீர் பெருக்கெடுக்கும். எத்தனை முறை எதிர்நீச்சலை பார்த்தாலும், என் கண்ணில் நீர் வழியும் ஒரு சிலிர்ப்பான காட்சி இது. இதுதான் நாகேஷ் ! தமிழ் சினிமாவிலேயே எனக்குப் பிடித்த ஒரே நடிகர் . அவர் தனது 76 வயதில் நேற்று முன் தினம் மயிலாப்பூரில் காலமானார் என அறிந்து வருத்தப்பட்டேன். எதிர்நீச்சல் ( "நான் மாது வந்திருக்கேன்”) , நீர்க்குமிழியில் சேதுவாக, நவக்கிருகம், சர்வர் சுந்தரம், தில்லானா மோகனாம்பாளில் வைத்தி, திருவிளையாடலில் தருமி, காதலிக்க நேரமில்லை (பாலையாவிற்கு கதை விவரிக்கும் காட...

Vaithisvaran Koil 01-02-2009 Sriram Mottai

SRIRAM 01-Feb-2009 Vaitheeswaran Koil அருணின் குழந்தை ஸ்ரீராம் (7-4-2008) தற்போது 10 மாசமாகப் போகிறது. அவனுக்கு முடி இறக்க ஃபிப்ரவரி 1-ஆம் தேதி நாள் பார்த்து, வேன் ஏற்பாடு பண்ணி, ரூம் ஏற்பாடு பண்ணி தயாராக இருந்தோம். முதலில், ரூம் எதுவும் கிடைக்காமல் கொஞ்சம் பதட்டமாக இருந்தபோதிலும், பின்னர் இடம் கிடைத்தது. நாங்கள் 8 பேரும் + 3 குழந்தைகளும் சேர்ந்து போவதாக திட்டம். கடைசி நிமிஷத்தில் அஷோக்கிற்கு காலில் அடிபட்ட காரணத்தினால், அவனும் நீரஜாவும் வர முடியவில்லை. கிருத்திகா-அர்விந்த் ஆகியோராலும் வர இயலவில்லை. எனவே, நான், விஜயா, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகிய 6 பேர் மட்டுமே கிளம்பினோம். அருண் தன் காரில், டிரைவர் (ரூ. 500/- ஒரு நாளைக்கு) ஏற்பாடு பண்ணிக்கொண்டு கிளம்பினோம். சனிக்கிழமை 31-01-2009 காலை 11-15க்கு சென்னையில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி, மரக்காணத்தில் 1/2 மணி நேரம் தங்கிவிட்டு, பின்னர் கடலூர் சென்றோம். அங்கு லேசாக டிஃபன் சாப்பிட்டுவிட்டு, குமார் வீட்டிற்கு (பாபுராவ் தெருவில்) சென்றோம். சுமார் 15 - 20 வருஷங்களுக்குப் பிறகு பாபுராவ் தெருவிற்குச் செல்கிறோம்....