Skip to main content

நகைச்சுவை அரசன் நாகேஷ் NAGESH

நாயர் அறைக்கு வந்த அவனுக்கும் நாயருக்கும் நிகழ்ந்த சொல்லாடல்:
அவன்: “எந்தா நாயர், நீ குழம்பு சாதம் சாப்பிட்டியா?
நாயர்: “சாப்பிட்டேன்”
அவன்: ”ரசம் சாதம்?”
நாயர்: “ஆச்சு”
அவன்: “தயிர் சாதம்?”
நாயர்: “அதுவும் ஆச்சு”
அவன்: “ அப்றம், பழம் சாப்டிருப்பியே?!”
நாயர்: “ ரெண்டு பழம் சாப்பிட்டேன்”

ரெண்டு நிமிஷம் மௌனம். பின்னர், “நான் உன்னை இது சாப்ட்டியா, அது சாப்ட்டியா, பழம் தின்னியா”ன்னு கேட்டேனே, நீ ஒரு தடவையாவது, என்னை சாப்பிட்டியா?”ன்னு கேட்டியா?” என்று நாயரைக் கேட்பான். நாயருக்கு அப்போது தான் உறைக்கும். நமது கண்களில் நீர் பெருக்கெடுக்கும். எத்தனை முறை எதிர்நீச்சலை பார்த்தாலும், என் கண்ணில் நீர் வழியும் ஒரு சிலிர்ப்பான காட்சி இது.

இதுதான் நாகேஷ்! தமிழ் சினிமாவிலேயே எனக்குப் பிடித்த ஒரே நடிகர். அவர் தனது 76 வயதில் நேற்று முன் தினம் மயிலாப்பூரில் காலமானார் என அறிந்து வருத்தப்பட்டேன்.

எதிர்நீச்சல் ("நான் மாது வந்திருக்கேன்”), நீர்க்குமிழியில் சேதுவாக, நவக்கிருகம், சர்வர் சுந்தரம், தில்லானா மோகனாம்பாளில் வைத்தி, திருவிளையாடலில் தருமி, காதலிக்க நேரமில்லை (பாலையாவிற்கு கதை விவரிக்கும் காட்சி), மகளிர் மட்டும், ஊட்டி வரை உறவு, இன்னும் 1000 படங்களில் சிறப்பாக நடித்து நம் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவர் நாகேஷ்.

நாகேஷ் படம் என்றால் எனது பகல் தூக்கம் போயிற்று. எத்தனை முறை பார்த்திருந்தாலும், மீண்டும், மீண்டும், மீண்டும் அலுப்பு இல்லாமல் பார்ப்பேன். நாகேஷ் ஈடுஇணையற்ற நகைச்சுவை அரசன். அவரைப் போல் இனியொரு காமெடி நடிகர் யார் வருவார்?

சோ சொல்லுகிறார்: “He could rework a scene in many different ways and perhaps had the most perfect dialogue delivery. During the 60's and 70's, he was an integral part of Tamil commercial cinema as audiences came to see Nagesh the comedian and for big MGR or Sivaji films he was a must for the distributors.”

NAGESH IS / WAS THE GREATEST. Tamil cinema’s pride, Nagesh, will be missed, and very dearly. MAY HIS SOUL REST IN PEACE.

ராஜப்பா
2-2-2009 இரவு 9 மணி

Comments

I still come to terms with the news of Nagesh Death. Recently, I happen to see "Pancha Thanthiram". Though his role is small, he performed it to perfection. Like you mentioned "Neerkumizhi", "Ethir Neechal", "Sarvar Sundaram", "Kathalikka Neramillai" & "Thiruvilaiyadal" are some of his evergreen movies of Nagesh which will live in our memory fresh for ever.
Nagesh was reigning like a monarch and he had no equals whom we can think of. His timing was superb in every movie. More than his comedy, he was such a great charecter artist. Was he there in "Vietnam Veedu" also? I vaguely remember..

Thanks for reliving the memory with a great piece of dialogue.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை