ஏற்பாடுகள் குறித்து இங்கு படித்தோம் . இனி விழா. ஞாயிறு, 20-09-09 காலை 11-30 மணிக்கு அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் வந்தனர்; பகல் 3-45க்கு ஸ்ருதி வந்தாள். பூந்தமல்லியிலிருந்து தனியாகவே வந்துவிட்டாள். இரவு 7-30க்கு சாவித்திரி, ரமேஷ், விஜி, கார்த்திக், வசந்த் வந்தனர். வெளியில் சாப்பாட்டிற்கு ஆர்டர் பண்ணியிருந்தோம் - சப்பாத்தி, டால், ஸப்ஜி, சாப்பிட்டு விட்டு, ரமேஷும், விஜியும் வீட்டிற்குத் திரும்பினர். திங்கள், 21-09-2009 விழா. விடியற்காலை 4-30 க்கு நானும், க்ருத்திகாவும் எழுந்துகொண்டோம். பின்னர் விஜயா முதலானோர் ஒவ்வொருவராக எழுந்து, குளித்தனர். 7-45 க்கு இந்திரா, அகிலா, ராஜா, ஜ்யோத்ஸ்னா வந்தனர். காலை டிஃபன் பொங்கல் - க்ருத்திகா பண்ணினாள். சாஸ்திரிகள் 5 பேர் வந்தனர்; 9-15 க்கு ஆரம்பித்தனர். சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி, சரோஜா, அத்திம்பேர், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, மங்களம், சுதன், விஜி, ஜனனி, பாலு மாமா, TSG மாமா, மாமி, பிரகாஷ், ராஜேஸ்வரி, லக்ஷ்மி, மேல்வீட்டு சுரேகா ஆகியோர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். ஹோமங்கள் 11 மணிக்கு நிறைவடைந்தன. ...