Skip to main content

விஜயாவின் 60 ஆம் பிறந்த நாள் விழா

ஏற்பாடுகள் குறித்து இங்கு படித்தோம். இனி விழா.

ஞாயிறு, 20-09-09 காலை 11-30 மணிக்கு அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் வந்தனர்; பகல் 3-45க்கு ஸ்ருதி வந்தாள். பூந்தமல்லியிலிருந்து தனியாகவே வந்துவிட்டாள். இரவு 7-30க்கு சாவித்திரி, ரமேஷ், விஜி, கார்த்திக், வசந்த் வந்தனர். வெளியில் சாப்பாட்டிற்கு ஆர்டர் பண்ணியிருந்தோம் - சப்பாத்தி, டால், ஸப்ஜி, சாப்பிட்டு விட்டு, ரமேஷும், விஜியும் வீட்டிற்குத் திரும்பினர்.

திங்கள், 21-09-2009 விழா.

விடியற்காலை 4-30 க்கு நானும், க்ருத்திகாவும் எழுந்துகொண்டோம். பின்னர் விஜயா முதலானோர் ஒவ்வொருவராக எழுந்து, குளித்தனர். 7-45 க்கு இந்திரா, அகிலா, ராஜா, ஜ்யோத்ஸ்னா வந்தனர். காலை டிஃபன் பொங்கல் - க்ருத்திகா பண்ணினாள்.






சாஸ்திரிகள் 5 பேர் வந்தனர்; 9-15 க்கு ஆரம்பித்தனர். சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி, சரோஜா, அத்திம்பேர், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, மங்களம், சுதன், விஜி, ஜனனி, பாலு மாமா, TSG மாமா, மாமி, பிரகாஷ், ராஜேஸ்வரி, லக்ஷ்மி, மேல்வீட்டு சுரேகா ஆகியோர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்.












ஹோமங்கள் 11 மணிக்கு நிறைவடைந்தன. பின்னர் கார்த்திக் “கேக்” வெட்டினான்; அவனுக்கும் இன்று பிறந்த நாள். (கணேஷுக்கும் கூட !). பின்னர் சாப்பாடு. ஹாலிலும், dining table-லிலும் போட்டோம். பால் பாயாஸம், குலோப் ஜாமூன், தயிர்வடை, சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், வெள்ளை சாதம், பருப்பு, ரஸம், உருளைக் கறி, வெண்டைக் கறி, அப்பளம், வடாம், தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, தயிர் சாதம், ஊறுகாய், மோர்மிளகாய் - சாப்பாடு நன்றாக இருந்தது.

சாப்பாட்டிற்குப் பின்னர் ஒவ்வொருவராக கிளம்பினர். ஸ்ருதி மாலை 4-15க்கு பஸ் பிடித்தாள்.  மாலை 5-15க்கு சாவித்திரி, விஜி, குழந்தைகள் மயிலாப்பூர் கோயிலுக்குச் சென்றனர். நாங்கள் யாவரும் இரண்டு கார்களில் மாலை 6-30க்கு கோயிலுக்குச் சென்றோம். கோயிலிலும், வீதிகளிலும் ஒரே கூட்டமான கூட்டம். (park பண்ண இடம் கிடைக்காததால், அருண் வீடே திரும்பிவிட்டான்).

மாலை 6-30க்கு ரமேஷ் வந்தான். இரவு உணவிற்கு பின்னர் அவன், சாவித்திரி ஆகியோர் அண்ணாநகர் திரும்பினர்.  இரவு 10 க்கு அருண் குடும்பத்தினர் கிளம்பினர். 1045 மணி ரயிலில் அஷோக்-நீரஜா பெங்களூர் புறப்பட்டனர். வீடு வெறிச்சோடியது.

மிக எளிமையாக பண்ணலாம் என்றிருந்த இந்த 60-ஆம் பிறந்த நாள் விழா, இவ்வாறாக மிக கோலாகலமாக in a very grand scale நடந்து முடிந்தது. 45 பேர்களுக்கு சாப்பாட்டுடன் மிக பிரமாதமாக நடந்தது. HATS OFF TO ARUN - GAYATHRI, ASHOK - NEERAJA, ARVIND - KRITHIKA ! Thank you children, thank you for a great, grand function. We enjoyed it.

ஒரு பெரிய நெருடல் - குழந்தை ஸௌம்யா உடல்நலம் குன்றி, ஜூரத்தோடு படுத்துக் கொண்டே இருந்தாள். ஸௌம்யாவின் இந்த நிலையைப் பார்த்து, அதிதி மிக மிக வேதனைப்பட்டாள், அழவே ஆரம்பித்து விட்டாள்.

ராஜப்பா
12:20 மணி, 24-09-2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011