Skip to main content

விஜயாவின் 60-ஆம் பிறந்த நாள் - ஏற்பாடுகள் Vijaya's 60th birthday

விஜயாவின் பிறந்த நாள் 23-09-1949. இந்த வருஷம் 60 முடிவடைகிறது. நக்ஷத்திர (சித்திரை) பிரகாரம் பிறந்த நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி வந்தது. அன்று கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணியிருந்தோம். விஷயத்தை அறிந்த அருண்-காயத்ரி, அஷோக்-நீரஜா, அர்விந்த்-க்ருத்திகா ஆகியோர் இதை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்தனர்.

சனிக்கிழமை, 12-09-2009 அன்று சாஸ்திரிகளிடம் கேட்டேன் - ஆயுஷ்ஹோமமும், ம்ருத்யுஞ்ச ஹோமமும் பண்ணலாம் என்றார். சாமான்கள் பட்டியலை தந்தார்.

ஞாயிறு, 13-09-09 எல்லாருக்கும் நானும், க்ருத்திகாவும் ஃபோன் செய்து அழைத்தோம். அன்று மாலை நானும் விஜயாவும் புரசைவாக்கம் ஸ்ரீகிருஷ்ணா கலெக்‌ஷன் கடைக்குச் சென்று அருண், அஷோக், அர்விந்த் மூவருக்கும் ஷர்ட், சதீஷுக்கு ஒரு டி-ஷர்ட், மூன்று குழநதைகளுக்கும் தலா இரண்டு ட்ரெஸ்கள் வாங்கினோம். மொத்தம் 4502.00+1960.00

மறுநாள் (திங்கள், 14-09-2009) மத்தியானம் 12 மணிக்கு நான், விஜயா, க்ருத்திகா, அதிதி ஆகியோர் காரில் தி.நகர் சென்றோம்; காயத்ரி அங்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். RmKV யில் பார்த்து விட்டு, குமரன் சென்று காயத்ரி-நீரஜா-க்ருத்திகாவிற்கு புடைவைகள், வேஷ்டி, துண்டு வாங்கினோம்.

GRT க்கு சென்றோம்; இங்கு விஜயாவிற்கு ஒரு வைரமோதிரம் 0.24 காரட்டில் (காரட் விலை 52,500.00) வாங்கினோம். 20,500.00 பில் வந்தது. பின்னர் நல்லி-100க்கு சென்று, பட்டுப்புடைவையும் (5586.00) , எனக்கு 799.00ல் ஷர்ட்டும் வாங்கினோம். Purchase முடிந்து, அடையார் சங்கீதாவிற்கு சென்று சாப்பிட்டோம். (அப்போதே அதிதிக்கு உடம்பு சரியாக இல்லை).

செவ்வாய், 15-09-09 அன்று caterer க்கு க்ருத்திகா ஏற்பாடு பண்ணினாள். நபருக்கு 110.00 வீதம் 35 பேருக்கு சொன்னாள்

புதன், 16-09-09 மாலை விஜயாவும், நானும் மயிலாப்பூர் வடக்கு மாட வீதிக்குச் சென்றோம். Nathella Anchaneya Chetty (jewellers) கடையில் ரூபி பதித்த வளையல்கள் பார்த்தோம். விஜயாவிற்குப் பிடித்த ஜோடி வளையல்களை 64500.00 கொடுத்து வாங்கினேன் 32.93 கிராம் தங்கமும் (1480.00 per gram) 7 carat ruby (carat 950.00), செய்கூலி 9385.00. ஒரு பழைய இரட்டைவட சங்கிலியைப் போட்டு (58000.00 கிடைத்தது), ரூபி வளையலை வாங்கினோம்.

வெள்ளி, 18-09-09 மயிலாப்பூர் ஸ்ரீரங்காச்சாரி கடைக்குச் சென்று, விஜயாவிற்கு இரண்டு 9-கஜ புடைவைகள் (1065.00 + 375.00) வாங்கினோம்.

சனிக்கிழமை, 19-09-09 காலை அஷோக்-நீரஜா பெங்களூரிலிருந்து வந்தனர். 11 மணிக்கு நாங்கள் நால்வரும் மயிலாப்பூர் சென்று வைதீக (ஹோமம்) சாமான்கள், பரிசுப் பொருட்கள், நெய் போன்றவை வாங்கினோம்.

ஞாயிறு, 20-09-09 அர்விந்த்-க்ருத்திகா மயிலாப்பூர் சென்று, மாலை, புஷ்பம், வாழை இலை, பழம் போன்றவற்றை வாங்கினர்

ஏற்பாடுகளும், வாங்க வேண்டியவைகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன; இனி விழா கொண்டாட வேண்டியதுதான்.

தொடர்கிறது ....

ராஜப்பா
11:30 AM, 24-09-2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை