மழை காரணமாக சென்ற ஆறு நாட்களாக காலையில் நடைப் பயிற்சி போக முடியவில்லை; நேற்றுதான் மீண்டும் ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்தேன். இன்று (11-11-2009) காலை இந்த புதிய இடத்திற்கு சென்றேன்; வீட்டிலிருந்து 12 நிமிஷ தூரத்தில், RA Puram சாந்தோம் நெடுஞ்சாலையில் பட்டினப்பாக்கம் (Foreshore Estate) போகும் வழியில் உள்ளது. CENTRAL INSTITUTE OF BRACKISH WATER AQUACULTURE (brackish water = having somewhat a salty taste from a mixture of seawater and fresh water) , a UN-supported FAO institute for fish, prawns and shrimp culture, managed by Indian Council of Agricultural Research . நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 300 மீட்டர் உள்ளே ஆஃபீஸ் இருக்கிறது. இந்த 300 மீட்டர் தூரத்திற்கும் மிக அழகான, சுத்தமான, இருவழி தார் ரோடு போடப்பட்டுள்ளது. நடுவில் median ம், ஓரங்களில் அழகிய 4 அடி அகல நடைபாதைகளும் உள்ளன. சாலையின் இரு பக்கங்களிலும் நிறைய வேப்ப மரங்கள்; நிறைய செடி, கொடிகள். ஜன சந்தடி கிடையாது, பஸ், கார்கள் இரைச்சலும் கிடையாது. காலை வேளையின் இனிமையான இதமான சூழலும், வேப்பங்காற்று ...