Skip to main content

காலை நடைப் பயிற்சி

மழை காரணமாக சென்ற ஆறு நாட்களாக காலையில் நடைப் பயிற்சி போக முடியவில்லை; நேற்றுதான் மீண்டும் ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்தேன்.

இன்று (11-11-2009) காலை இந்த புதிய இடத்திற்கு சென்றேன்; வீட்டிலிருந்து 12 நிமிஷ தூரத்தில், RA Puram சாந்தோம் நெடுஞ்சாலையில் பட்டினப்பாக்கம் (Foreshore Estate) போகும் வழியில் உள்ளது.

CENTRAL INSTITUTE OF BRACKISH WATER AQUACULTURE  (brackish water = having somewhat a salty taste from a mixture of seawater and fresh water), a UN-supported FAO institute for fish, prawns and shrimp culture, managed by Indian Council of Agricultural Research.

நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 300 மீட்டர் உள்ளே ஆஃபீஸ் இருக்கிறது. இந்த 300 மீட்டர் தூரத்திற்கும் மிக அழகான, சுத்தமான, இருவழி தார் ரோடு போடப்பட்டுள்ளது. நடுவில் median ம், ஓரங்களில் அழகிய 4 அடி அகல நடைபாதைகளும் உள்ளன.

சாலையின் இரு பக்கங்களிலும் நிறைய வேப்ப மரங்கள்; நிறைய செடி, கொடிகள். ஜன சந்தடி கிடையாது, பஸ், கார்கள் இரைச்சலும் கிடையாது. காலை வேளையின் இனிமையான இதமான சூழலும், வேப்பங்காற்று தரும் புத்துணர்வும் நடப்பதற்கு சுகமாக இருக்கிறது. இன்று 40 நிமிஷங்கள் நடந்தேன்.

இதற்கு பக்கத்தில் QUIBBLE ISLAND உள்ளது. அடையாறு நதி (Adyar River estuary) கடலில் சங்கமிக்கும் இடத்தில், இந்தத் தீவு உருவானது (1798ல்). பல வருஷங்களுக்குப் பிறகு இங்கு கிறித்துவர்களுக்கு CEMETERY ஆரம்பிக்கப்பட்டது. நடக்கும்போதே  இந்தக் கல்லறைகளை இடது பக்கத்தில் பார்க்கலாம்.

நடப்பதற்கு நல்ல ஒரு இடம். இவ்வளவு நாட்கள் இந்த இடம் என் கண்களில் எப்படி படாமல் இருந்தது ?!

ராஜப்பா
10:00 மணி
11 நவம்ப்ர் 2009

Comments

Kannan said…
மிகவும் அருமை
வணக்கமுங்க.உங்க பதிவுக்கு இண்ணைக்குத்தான் வந்திருக்கனுங்க.நாம கொஞ்சம் ஒத்துப்போவமுன்னு நினைக்கறனுங்க. ஏதாச்சும் பதில் போடுங்க

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...