Skip to main content

ராஜாஜியின் ராமாயணம்

வால்மீகி, துளஸிதாஸர், கம்பர் ஆகியவர்களைத் தவிர வேறு நிறைய பேர் ராமாயணத்தை (ராம காதையை) எழுதியுள்ளார்கள். குறிப்பாக, தமிழில் “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதிய ராமாயணம் மிக பிரசித்தம். இந்த புஸ்தகம் இல்லாத வீடே அந்த கால கட்டத்தில் இருந்திருக்காது.

“ராம சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ... எல்லாரும் படிக்க வேண்டும். படித்தால் நல்ல பயனையும், பகவான் கருணையையும் பெறுவார்கள்” என்று 1967-ல் குறிப்பிட்ட ராஜாஜி மிக எளிமையான தமிழில் - சிறுவர்கள், சிறுமிகள் கூட படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு - ராமாயணத்தை எழுதியுள்ளார்.

“சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் 3-3-1956ல் முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழகம் முழுதும், CRAZE என்று சொல்வார்களே அது போன்று புஸ்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. ஒன்பது பதிப்புகள் வந்தன (வானதி பதிப்பகம்). சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது.

பல லக்ஷம் பிரதிகளுக்கு மேல் விற்ற இது, ராஜாஜியின் விருப்பத்தின் பேரில் பின்னர் தலைப்பு மாற்றப் பட்டு “ராமாயணம்” என்னும் புதிய தலைப்பில் ஜனவரி 1973ல் வெளிவந்தது. இதுவரை 33 பதிப்புகள் இந்த  தலைப்பில் வெளிவந்துள்ளன.

வீட்டில் வைத்து படிக்க வேண்டிய பொக்கிஷம்.

ராஜப்பா
10:45 மணி
5-4-2010

Comments

Bangalore said…
I never know much about that. This kind of information really helps the next generation.
Please tell these kind of information for the younger generation. Course of time, the next generation people doesn't have the opportunity or time to know this. It's appreciable to get the information from elder like you.
These kind of blogs and the blogs you have written in Sampoornam vilas ( Mangali pondugal, samaradhanai) are the best example how you would like to be the pioneer to the next generation.
Gudo's uncle.

( I will write my comments by the name Bangalore. I don't want to reveal my name. I think only opinion matters than name.)
Rajappa said…
Thank you Mr Bangalore.

Yes, my idea is also similar to you - to pass on info that we know to others, particularly younger generation. Please rest assured that I will try my best to continue writing for youngsters.

Your comments are inspirational and as you say "opinion matters more than name". Continue sending your valuable comments.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை