Skip to main content

ஸ்ரீ ருக்மிணி கல்யாணம் - விஷாகா ஹரி

ஸ்ரீ ருக்மிணி கல்யாணம்

ருக்மிணிக்கும் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் நடந்த தெய்வீகக் கல்யாணம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் 10-வது ஸ்கந்தத்தில் 52-53-54 அத்தியாயங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நேரில் பலமுறை இந்த சங்கீத உபன்யாஸத்தை விஷாகா ஹரி பண்ணியிருந்தாலும், அவரது உபன்யாஸம் DVD வடிவில் இப்போது தான் வெளிவந்துள்ளது (Moser Baer, Rs 99/-)

விதர்ப்ப நாட்டின் அரசன் பீஷ்மகா (Bhishmaka) என்பவனுக்கு 5 ஆண் குழந்தைகள் (ருக்மி, ருக்மரதா, ருக்மாபஹு, ருக்மகேஸா, ருக்மமாலி). ஒரு அழகிய பெண் குழந்தை. ருக்மிணி (வைதர்ப்பி) எனப் பெயர் கொண்ட இவள் படிப்பு, சங்கீதம், பக்தி போன்றவற்றில் தேர்ந்து விளங்கினாள். பல ஸத் கதைகளைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது அளவற்ற அன்பு கொண்டாள். ஸ்ரீ கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக் கொள்ள உறுதி கொண்டாள். தந்தை ஒத்துக் கொண்டாலும், அண்ணன் ருக்மி மறுத்து விட்டான்; தன் நண்பன் சிசுபாலனைத் தான் கல்யாணம் பண்ணிகொள்ள வேண்டுமென நிச்சயித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தான்.

துவாரகையில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தன் நிலையை விளக்கி விரிவாக ஒரு கடிதம் எழுதி, அதை அரச சபைக்கு வந்த ஒரு பாகவதர் மூலம் துவாரகைக்கு அனுப்பினாள். மொத்தம் 7 ஸ்லோகங்களில் தன் நிலையை விளக்கினாள். (ஸ்ரீமத் பாகவதம், ஸ்கந்தம் 10 - அத்தியாயம் 52 - ஸ்லோகங்கள் 37 முதல் 43 வரை).

கல்யாணத்திற்கு முதல் நாள் தான் ஒரு குறிப்பிட்ட அம்பிகை கோயிலுக்கு போவது சம்ப்ரதாயம் என்றும், அங்கு வந்து தன்னை தூக்கிக் கொண்டுபோய் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லியும் கிருஷ்ணனுக்கு சொன்னாள்.

கடிதத்தைப் படித்த கிருஷ்ணன் உடனே விதர்ப்பா வந்து, ருக்மி, சிசுபாலன் போன்றோரை வெற்றி கொண்டு, ருக்மிணியை தேரில் ஏற்றி துவாரகைக்கு வந்து, அங்கு தன் பெற்றோர் முன்னிலையில் பிராட்டியை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.

எல்லாருக்கும் தெரிந்த கதை. இந்த சம்பவத்தை விஷாகா ஹரி தன் இனிய இசையாலும் தேன் குரலாலும் நமக்கு சொல்லுகிறார் . தியாகராஜ ஸ்வாமிகள், அன்னமாசார்யா, முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாபநாசம் சிவன் போன்றோரின் பாட்டுக்களைப் பாடி நம்மை பக்தியில் ஆழ்த்தி விடுகிறார்.

விதர்ப்பா வந்த கிருஷ்ணனை அந்த ஊர் ஜனங்கள் “ஸ்வாகதம், ஸூஸ்வாகதம், சரணாகதம், சரணாகதம்” எனப் பாடி வரவேற்றதை விஷாகா ஹரி பாடியுள்ளார்; கேட்டாலே மயங்கி பரவசமாகி விடுவீர்கள் - கேட்டுப் பாருங்கள்.

ராஜப்பா
காலை 11-05  மணி
16-08-2010

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...