Skip to main content

Posts

Showing posts from May, 2011

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

Dhanush Upanayanam

Upanayanam of Dhanush (Swaminathan) son of Chandar - Sudha was performed on 13th May 2011 at Chennai. The function was at the community hall, Sastrinagar, Adyar. Udaga Santhi and Naandhi functions were performed on the previous day, that is on 12th May at the same venue. Vijaya, I, and Aditi went at 8 AM that morning and attended. Gayathri, Sowmya, Sriram, Saroja, Athimber, Savithri, Karthik, Vasanth, Rama, Satyamurthy, Usha, Veena also attended. Sugavanam's family was in full attendance. The functions went off well; we returned home after the lunch. On the day of Brahmopadesam (13th) we reached the venue by 7 AM. Aditi and Arvind came later. Apart from yesterday's guests, there were Ramesh, Viji, Jayaraman, Kalyani, Poornima, Sruti, Satish, Ramana - Paul Thanickal (from Ahmedabad) and a host of other relatives and friends. Brahmopadesam was at 0945. The function was a grand one and well organised and attended. We had lunch at 11-45 and then dispersed. Chandar, Su...

கணபதி சுப்ரமணியம் கிருஹப் ப்ரவேஸம் - 06.05.2011

கிருத்திகாவின் பெற்றோர் (Mrs and Mr. TS கணபதி சுப்ரமணியம்) தங்களுடைய புது இல்லத்தின் கிருஹப் ப்ரவேஸத்தை நேற்று, வெள்ளிக்கிழமை, 06 மே 2011 அன்று நடத்தினார்கள். இவர்களது வீடும் அர்விந்த்-கிருத்திகாவின் புது வீடும் ஒரே கட்டிடத்தில் 2ஆம் மாடியில், முதல் மாடியில் உள்ளன. காலை 8-30க்கு கோ-பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் கிருஹப் ப்ரவேஸம். அடுத்து பால் காய்ச்சி குடித்தல். பின்னர் ஹோமம்.சுமார் 11-30க்கு விழா முடிவுற்றது. மிகக் குறைந்த பேர்களையே அவர் அழைத்திருந்தார். மொத்தமே 20-ஐ தாண்டவில்லை. காயத்ரி, குழந்தைகள் துறையூர் சென்றுள்ளனர்; அருண் மட்டும் வருவதாக இருந்தான்; கடைசி நேரத்தில் அவனால் வர இயலவில்லை. அதிதி தன் புது பட்டுப் பாவாடையில் ஜொலித்தாள். அவளுக்கு மிகவும் சந்தோஷம், பெருமை. பாவாடை சலசலக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாள். சாப்பாட்டிற்குப் பின்னர், வீட்டை ”ஒழித்து விட்டு” நாங்கள் 3 மணிக்கு பெஸண்ட்நகர் திரும்பினோம். விழா வைதீக காரியங்களில் நன்கு நடந்தது; ஆனால், காடரர் ஸ்ரீனிவாஸன் காலை வாரிவிட்டார்; காஃபியோ, மதியம் சாப்பாடோ சரியான சமயத்தில் வரவில்லை. அர்விந்த் போய் சாப்பாட...