கோவிந்தபுரம் 03வது பகுதி. ஜூலை 27, புதன்கிழமை : காலை 5 மணிக்கு எழுந்து, குளித்து ஸ்ரீவிட்டல்-ருக்மிணி தாயாரின் சுப்ரபாத சேவையின் முன்பகுதியை இன்று தரிஸித்தோம். மஹாராஷ்டிர பாணியில் ஆடை உடுத்திக் கொண்டு ஸ்ரீ அண்ணா பூஜை செய்தார். அவர் அலங்காரம் பண்ணுவதை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். பின்னர் அவர் உஞ்சவிருத்தி செய்தார். விஜயா, சாவித்திரி, மாமி மற்றும் அங்கிருந்த பெண்மணிகள் அவருக்கு அரிசி பிக்ஷை போட்டனர். கடைசியாக பாத சேவை நமஸ்காரம் பண்ணிக்கொண்டு, காரில் ஏறினோம். அப்போது மணி காலை 8-30. இந்தக் கோயிலில் ப்ரஸாதம் என ஒன்றுமே தருவதில்லை. கோயில் மிக அழகாக, புனிதமாக இருக்கிறது. பார்க்க வேண்டிய கோயில். மயிலாடுதுறையில் சிற்றுண்டி முடித்து, கடலூர் வரும்போது மணி 11-45. அங்கு பஸ் ஸ்டாண்டில் திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் சாவித்திரியை ஏற்றிவிட்டேன். சாவித்திரி அங்கிருந்து ஹோசூர் செல்வாள். (ஹோசூருக்கு அவள் மாலை 7-15க்குப் போய்ச் சேர்ந்தாள்.) புதுச்சேரி ஸர்குரு ஹோட்டலில் அருமையான மதிய சாப்பாடு. சென்னை வீட்டிற்கு மாலை 4-30 க்கு வந்து சேர்ந்தோம். இவ்வாறாக எங்கள் கோவிந்தபுரம் பயணம் மிக திர...