Skip to main content

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt 2

கோவிந்தபுரம் பகுதி 02

ஜூலை 26, செவ்வாய்க்கிழமை : விடியற்காலம் 4-45க்கு நான் எழுந்து, குளித்து, அருணாச்சலத்துடன் டாக்ஸியில் கும்பகோணம் ஸ்டேஷனுக்குக் கிளம்பினோம். கோவிந்தபுரத்திலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது. சாவித்திரி 6 மணிக்கு வந்தாள். அறைக்கு வந்தபோது எல்லாரும் குளித்து ரெடியாக இருந்தனர். உடனடியாக் சாவித்திரியும் குளித்து, எல்லாரும் 6-45க்கு கோயிலுக்குப் புறப்பட்டோம்.


கோயில் complex-லியே ரூம் இருக்கிறது. இரண்டு நிமிஷ நடைதான். சுமார் 25-30 படிகள் ஏறவேண்டும். காலை 6-45க்கு சுப்ரபாத சேவை என சொல்லியிருந்தனர். ஆனால், கதவை 7-15 க்கு தான் திறந்தனர். பளிச்சென்று ஒளிவீசும் ஸ்ரீவிட்டல்-ருக்மிணியை தரிஸித்தோம். என்ன தெய்வீகமான அழகு ! ஸ்ரீ அண்ணா (விட்டல்தாஸ் மஹராஜ் இப்படித்தான் அழைக்கப் படுகிறார்) பூஜை செய்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் பாடல்களும், பஜனைகளும் பாடிக்கொண்டே பூஜை செய்தார்.

அலங்காரங்களும், பூஜையும் முடிந்த பின்னர் எங்களை ஸ்வாமி அருகில் வந்து அவரது பாதங்களில் நம் தலையை வைத்து நமஸ்காரம் பண்ண இந்தக் கோயிலில் அனுமதிக்கிறார்கள். வட இந்திய வழக்கம் இங்கும் கடைப்பிடிக்க படுகிறது.

கோயிலின் பிரதான நுழைவாயில் [மஹாத்வார்] வேறு இடத்தில் இருக்கிறது. இங்கும் 25-30 படிகள் ஏறவேண்டும். முதலில் மிக விஸ்தாரமான மஹா மண்டபம் இருக்கிறது. இதை கடந்தால். 2-வது ஹால் வஸந்த மண்டபம் உள்ளது.  கோயிலுக்கு வரும் பக்தஜனங்கள் இங்கு உட்கார்ந்து பூஜையை பார்க்கலாம். அடுத்து, இதை விட கொஞ்சம் சிறிதான அர்த்த மண்டபம். நித்யபூஜை செய்யும் பக்தர்களை இங்கு உட்கார அனுமதிக்கிறார்கள். இதற்கும் அடுத்ததுதான் கர்ப்ப கிருஹம். இங்கு ஒரு மணிமண்டபத்தில் ஸ்ரீ ருக்மிணி ஸமேத ஸ்ரீ விட்டல் இருக்கிறார். பார்க்க கண் கோடி வேண்டும்.


நித்யபூஜை செய்பவர்கள் 4-கால பூஜைகளையும் அருகில் அமர்ந்து பார்க்கலாம். அடுத்த பூஜை 11 மணிக்கு என அறிவித்தபடியால், காலை டிஃபனை முடித்துக் கொண்டு, அருகிலுள்ள சில இடங்களுக்கு காரில் சென்றோம். முதலில் ஸ்ரீமத் போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் அதிஷ்டானத்திற்கு சென்றோம் (அதிஷ்டானம் = ஸமாதி). இவர் காஞ்சி காமகோடி மடத்தின் 58-வது பீடாதிபதி. [1638 - 1692]. இந்த இடத்திற்கு ஸ்ரீமடம் ஸமஸ்தானம் எனப் பெயர்.

அடுத்து, ஸ்ரீசைதன்ய குடீரம். ஸ்ரீசைதன்ய மஹாபிரபு நினைவு மடம். பூரி ஜகந்நாதர் கோயில் போன்ற இதை, ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் நிறுவினார். ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் நாம ஸங்கீர்த்தனத்தின் மஹிமையை நிரூபித்த ஸ்தலம் இது.

அடுத்து காஞ்சி காமகோடி மடத்தின் 68-வது பீடாதிபதியின் [ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (மஹா பெரியவாள்)]. அதிஷ்டானம் சென்றோம். மடத்தின் எல்லா பீடாதிபதிகளின் உருவப் படங்கள் இங்கு இருக்கின்றன. ஸ்ரீமடம் என அழைக்கப்படுகிறது.

பின்னர் விட்டல் கோயிலிற்கு திரும்பினோம். இங்கு ஒரு அழகிய பெரிய கோ-சாலா உள்ளது. 400-க்கும் மேலான் பசுக்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. பாரதத்தின் பல பாகங்களிலிருந்தும் பசுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இடம் மிக சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறது.

அருகிலேயே காவிரி ஆறு (வாய்க்கால்?) ஓடுகிறது. காவிரியில் கால் நனைத்துக் கொண்டு விட்டல் கோயிலினுள் சென்று 11-00 மணி பூஜையை தரிசித்தோம். 12 மணிக்கு கோயிலின் நடையை சாத்தி விட்டார்கள். இனி மாலை 7-15 மணிக்கு வந்தால் போதும் என அறிவித்தார்கள்.

அடுத்து பகல் உணவு. வரும் நித்யபூஜைக்காரர்களுக்கும் பல ஊழியர்களுக்கும் இந்தக் கோயிலில் காலை டீ, சிற்றுண்டி, பகல் சாப்பாடு, மாலை டீ, இரவு உணவு என எல்லாம் இலவசமாக தருகிறார்கள். சிம்பிளாகவும், மிக ருசியாகவும் இருந்தது. 3-30 வரை ஓய்வு எடுத்தபின்னர், அருகிலுள்ள சில கோயில்களுக்கு - திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் - சென்று வந்தோம்.

7-30லிருந்து 8-15 வரை மீண்டும் விட்டல் பூஜைகள் தரிசித்தோம். காலையிலிருந்து நிறைய தடவை பாத சேவை செய்தோம். 8-30க்கு இரவு உணவிற்கு பிறகு, டோலோத்ஸவ சேவைக்கு 9 மணிக்கு வந்தோம். ராத்திரி போஜனத்திற்கு பின்னர் ஸ்வாமியையும் தாயாரையும் ஆடி, பாடி பூப்பந்து விளையாடி சேவை செய்தார். ஸ்ரீஅண்ணாவின் சிஷ்யர்களும் மற்றவர்களும் விடாமல் பஜனை, பாடல்கள் பாடிக் கொண்டேயிருந்தனர். நடுநடுவில் ஓட்டமும் துள்ளலுமாக டான்ஸ் வேறு.

ஸ்வாமி-தாயாரின் அலங்காரங்களை களைந்து, இரவு நித்திரைக்கு அவர்களை தயார் செய்து, தெய்வீக ஹம்ஸ தூளிகாவை (பள்ளி அறையை) அலங்காரம் பண்ணி, உத்ஸவ மூர்த்திகளை மானஸீகமாக இங்கு அழைத்துவந்தார். கர்ப்பகிரஹத்தையும், அந்த 3-வது ஹாலையும் சுத்தம் பண்ணி, கதவை சாத்தினர். ஹம்ஸதூளிகா இருக்கும் 2-வது ஹாலில், ஸ்வாமி-தாயாரை மானஸீகமாக இருப்பதாக பாவித்து, எல்லா சடங்குகளையும் செய்து, பள்ளி அறையின் கதவை மூடி, வாசல் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீஅண்ணா சுமார் 45 நிமிஷங்கள் பாடினார். எல்லாம் முடியும்போது இரவு மணி 11-45. ரூமிற்கு திரும்பினோம்.





அடுத்த 3-வது (கடைசி) பகுதி

ராஜப்பா
காலை 1000 மணி
29 ஜூலை 2011

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...