Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 1

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. 10 வது ஸ்கந்தம் 90 அத்தியாயங்கள் கொண்டது, மிக முக்கியமானது,  மிக நீளமானது. இதை நான் மூன்று பகுதிகளாக பிரித்து, எழுதப் போகிறேன்.

மதுரா நகரில் தேவகிக்கும், வஸுதேவருக்கும் கண்ணன் எட்டாவது குழந்தையாகப் பிறந்தான். தேவகியின் அண்ணன் கம்ஸனுக்கு “எட்டாவது குழந்தை” மூலம் இறப்பு என சாபம் இருந்தபடியால், கம்ஸன் தேவகி-வஸுதேவரை சிறையில் அடைத்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொன்றாக கொன்று முடித்தான்.

ஏழாவது கர்ப்பத்தை வெளியில் இழுத்து, அதை கோகுலத்திற்கு  கொண்டு போய் அங்கு வசித்த [வஸுதேவரின் இன்னொரு மனைவியான] ரோஹிணியின் கர்ப்பத்தில் பகவான் செலுத்தினார். இந்தக் குழந்தை பலராமன். [கர்ப்பத்தில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டதால், பலராமனுக்கு ஸங்கர்ஷ்ணன் என்ற இன்னொரு பெயரும் உண்டு.] ரோஹிணிக்குப் பிறந்த பெண் குழந்தையை தேவகியோடு சிறையில் விட்டார்.

எட்டாவது குழந்தையாக ஆவணி மாஸம் அஷ்டமி திதி, ரோஹிணி நக்ஷத்திரத்தில் கண்ணன் அவதரித்தார். இந்தக் குழந்தையை வஸுதேவர் தூக்கிக் கொண்டு, யமுனையை கடந்து, கோகுலத்தில் வசித்த நந்தகோபன் - யஸோதா தம்பதியரிடம் சேர்த்து விட்டு, அவர்களுக்குப் பிறந்த பெண்குழந்தையை (யோக மாயா) மாற்றி எடுத்து வந்தார்.

கண்ணனும் கோகுலத்தில் “ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர” ஆரம்பித்தார். குழந்தை கண்ணனை அழிக்க பூதனை, த்ருணவர்த்தன், சகடாஸுரன் போன்ற பல ராக்ஷஸர்களை கம்ஸன் அனுப்பினான். எல்லா அரக்கர்களையும் கண்ணன் அழித்தான்.  “பொன்றச் சகடம் உதைத்தாய், புகழ் போற்றி! கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி! குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!” என ஆண்டாள் போற்றி பரவஸப்பட்டாள்.

மண்ணை உண்ட வாயைத் திறந்து யஸோதாவிற்கு அண்ட சராசரங்களையும் தன் வாயினுள் காட்டினான்.  யஸோதாவிற்கு மகனாக இருந்து, இடைச்சிறுவர்களோடு மாடு கன்றுகளை மேய்த்து, வெண்ணெய், பால், தயிர் போன்றவற்றை திருடி தின்றான்.  இவன் வெண்ணெய் திருடியதால் கோபம் கொண்ட யஸோதா இவனை உரலில் கட்டிப் போட தாமோதரன் என்ற பெயரைப் பெற்றான்; இரண்டு மரங்களாக இருந்த ரிஷி குமாரர்களுக்கு சாப விமோசனத்தையும் கொடுத்தான்.

பின்னர் எல்லாரும் கோகுலத்தை விட்டுக் கிளம்பி யமுனை நதிக்கரையில் உள்ள வ்ருந்தாவனத்திற்கு புறப்பட்டு சென்றனர். இங்குதான் கோவர்தன் மலை உள்ளது. வ்ரஜபூமியில் வசித்து இடைச்சிறுவர்களோடு மாடு கன்று மேய்த்து பொழுது போக்கினான். பகாஸுரனையும் அவன் தம்பி அகாஸுரனையும் அழித்தான்.ப்ரஹ்மாவின் கர்வத்தை முடித்தான். கழுதை வடிவத்தில் வந்த தேனுகாஸுரனை அழித்தான்.

யமுனை நதியில் இருந்த காளியன் என்ற நச்சுப் பாம்பின் மீது நடனம் ஆடி பாம்பை அதனுடைய இடத்திற்கே திருப்பி அனுப்பினான்(10:16) பலராமன் ப்ரலம்பன் என்னும் ராக்ஷசனை கொன்று முடித்தான். கோவர்தன மலையைத் தூக்கி பசு கன்றுகளை காத்தான்.(10:25)

கோபிகா ஸ்தீரிகளுடன் ராஸலீலை நடனம் ஆடினான்.(10:33)

காளை உருவில் வந்த அரிஸ்டாஸுரனையும் (10:36), குதிரை வடிவிலிருந்த கேசியையும், மாயாரூபத்தில் வந்த வ்ளம்பாவையும் அழித்தான்(10:37)

கோகுலத்தையும், நந்த கிராமத்தையும், யஸோதா-வஸுதேவரையும், இடைச் சிறுவர்களையும், கோபிகா ஸ்தீரிகளையும் விட்டு விட்டு மீண்டும் மதுரா செல்ல ஸங்கல்பித்துக் கொண்டான். கண்ணனை அழிக்க தன்னுடைய கடைசி முயற்சியாக கம்ஸனும் அவனை மதுராவிற்கு வரவழைத்து அழிக்க எண்ணினான்.

தன் மாமா அக்ரூரரை நந்த க்ராமத்திற்கு (வ்ரஜ பூமிக்கு) அனுப்பி கண்ணனை கூட்டி வரச் சொன்னான். வ்ரஜ பூமியில் அக்ரூரர் கண்ணனை ப்ரார்த்தித்து சொல்லிய ஸ்லோகங்கள் மிக முக்கியமானவை (10:40) முடிந்தால் ஸ்கந்தம் 10 அத்தியாயம் 40ஐ படிக்கவும்.

கம்ஸனை ஒரேயடியாக அழித்து விட எண்ணி கண்ணனும் பலராமனை கூட்டிக் கொண்டு அக்ரூரருடன் மதுரா புறப்பட்டான்.

மதுராவில் ஒரு வண்ணானிடம் ராஜ உடைகளைப் பெற்று அணிந்து கொண்டான்;  சுதாமா என்னும் பூ வியாபாரியிடம் நிறைய புஷ்ப மாலைகளையும் பூக்களையும் பெற்று அணிந்து கொண்டான். (10:41)

சந்தனம் விற்கும் த்ரிவக்ரா என்னும் ஒரு கூனியிடமிருந்து சந்தனம் மற்றும் பல வாஸனை திரவியங்களை வாங்கி கொண்டு, அவளது கூனை நிமிர்த்தி மீண்டும் அழகிய பெண்ணாக மாற்றினார்.பிறகு இந்திரனின் வில்லை ஒடித்தார். (10:42)

இரவோடு இரவாக கம்ஸன் கனூரா, முஷ்டிகா, கூடா, ஸாலா, தோஷாலா என்னும் 5 மல்லர்களை தயாராக்கி கண்ணனுடன் மறுநாள் மற்போர் புரிய ஏற்பாடு செய்தான்.(10:42)

மறுநாள் காலை கம்ஸனுடைய அரண்மனை சென்றபோது அங்கிருந்த குவலயாபீடம் என்னும் பெருத்த யானையை வீசி எறிந்து முடித்தான்.   பின்னர் 5 மாமல்லர்களையும் அழித்து முடித்தான். (10:43)

கண்ணனின் கதை இன்று (08-07-2011) இந்த இடத்தில் முடிந்தது. திங்கட்கிழமை (10:44) கம்ஸன் வதம் கதை சொல்லப்படும். தொடர்ந்து கேளுங்கள். கண்ணனின் அருளாசிகளைப் பெறுங்கள்.

ராஜப்பா
11:15 காலை
08-07-2011

இதன் தொடர்ச்சி பகுதி 2

பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று 433 வது பகுதி ஒளிபரப்பாகியது.

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...