விஜயாவின் தங்கை லலிதாவிற்கு இந்த வருஷம் 2011 ஆகஸ்டு 20 -ஆம் தேதியன்று 60 வயது பூர்த்தியானது. நக்ஷத்திரம் 21-ஆம் தேதியன்று வருகிறதா, இல்லை 20-ஆம் தேதியே வந்து விடுகிறதா என ஒரு சிறு குழப்பம். என்னைப் பொறுத்தவரையில் 21-ஆம் தேதி என்பதில் எனக்கு குழப்பமில்லை; ஆனால் அவர்கள் 20-ஆம் தேதியே ஹோமம் பண்ண இருப்பதாக சொன்னவுடன், நான் என் வாயை இறுக்க மூடிக்கொண்டு விட்டேன். 20-08-2011 சனிக்கிழமை காலை 7-10க்கு நான், விஜயா, அதிதி, இந்திரா, அர்விந்த் ஆகியோர் ஆவடி கிளம்பினோம். கிருத்திகாவால் வர இயலவில்லை. 8-15க்கு ஆவடி போய் சேர்ந்தோம். காலை சிற்றுண்டி இட்லி சாப்பிட்டோம். சாஸ்திரிகள் 8-45 சுமாருக்கு வந்து பூஜையை ஆரம்பித்தார்; கணபதி ஹோமமும், புண்யாகவசனமும் பண்ணினார். அருண், காயத்ரி, குழந்தைகள் 10 மணிக்கு வந்தனர். ஹோமம் முடியும்போது 10-15 இருக்கும். பின்னர் சாப்பாடு (காடரிங்). குமார்-லலிதா, ஜனனி, ராம், ப்ரத்யுன், பிரபாகர், மாமி, நாங்கள் 5 பேர், இந்திரா, அகிலா, ஜ்யோத்ஸ்னா, கோபு, சரோஜா, விஜய், குழந்தைகள், குமாரின் அக்கா, அக்கா பையன்கள், குடியிருந்த மாமா-மாமி என சுமார் 28 பேர் சாப்பிட்டோம். பின்னர் 1-30 மண...