Skip to main content

Lalitha Sashti abtha poorthy

விஜயாவின் தங்கை லலிதாவிற்கு இந்த வருஷம் 2011 ஆகஸ்டு 20-ஆம் தேதியன்று 60 வயது பூர்த்தியானது. நக்ஷத்திரம் 21-ஆம் தேதியன்று வருகிறதா, இல்லை 20-ஆம் தேதியே வந்து விடுகிறதா என ஒரு சிறு குழப்பம். என்னைப் பொறுத்தவரையில் 21-ஆம் தேதி என்பதில் எனக்கு குழப்பமில்லை; ஆனால் அவர்கள் 20-ஆம் தேதியே ஹோமம் பண்ண இருப்பதாக சொன்னவுடன், நான் என் வாயை இறுக்க மூடிக்கொண்டு விட்டேன்.

20-08-2011 சனிக்கிழமை காலை 7-10க்கு நான், விஜயா, அதிதி, இந்திரா, அர்விந்த் ஆகியோர் ஆவடி கிளம்பினோம். கிருத்திகாவால் வர இயலவில்லை. 8-15க்கு ஆவடி போய் சேர்ந்தோம். காலை சிற்றுண்டி இட்லி சாப்பிட்டோம்.

சாஸ்திரிகள் 8-45 சுமாருக்கு வந்து பூஜையை ஆரம்பித்தார்; கணபதி ஹோமமும், புண்யாகவசனமும் பண்ணினார். அருண், காயத்ரி, குழந்தைகள் 10 மணிக்கு வந்தனர். ஹோமம் முடியும்போது 10-15 இருக்கும். பின்னர் சாப்பாடு (காடரிங்). குமார்-லலிதா, ஜனனி, ராம், ப்ரத்யுன், பிரபாகர், மாமி, நாங்கள் 5 பேர், இந்திரா, அகிலா, ஜ்யோத்ஸ்னா, கோபு, சரோஜா, விஜய், குழந்தைகள், குமாரின் அக்கா, அக்கா பையன்கள், குடியிருந்த மாமா-மாமி என சுமார் 28 பேர் சாப்பிட்டோம்.

பின்னர் 1-30 மணிக்கு எல்லாரும் கிளம்பினோம். இவ்வாறாக லலிதாவின் சஷ்டி அப்த பூர்த்தி விழா நன்கு நடைபெற்றது.

ராஜப்பா
21-08-2011
10 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011