Skip to main content

46 வருஷங்களுக்குப் பிறகு ....

ஸ்ரீமதி பிரேமா லக்ஷ்மிநாராயணன், வேலூர்
ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி, பெங்களூர்
ஸ்ரீமதி கோகிலா, நங்கநல்லூர், சென்னை
ஸ்ரீமதி சந்திரிகா, காஞ்சிபுரம்
ஸ்ரீமதி மனோன்மணி,போரூர், சென்னை
ஸ்ரீமதி அம்பிகா, வடபழனி, சென்னை
ஸ்ரீமதி (டாக்டர்) மல்லிகேஸ்வரி, காஞ்சிபுரம்.

இவர்கள் ஏழு பேருக்குள்ளும் ஒரு ஒற்றுமை உண்டு; முதலில் இந்த ஏழு பேரும் யார்?

இவர்கள் யாவருமே அறுபது வயதை தாண்டியவர்கள்; பேரன், பேத்திகளோடு இருப்பவர்கள். ஒற்றுமை இது மட்டுமல்ல.

யாவருமே காஞ்சிபுரம் ஸோமசுந்தர கன்யா வித்யாலயாவில் 11-வது (எஸ் எஸ் எல் ஸி)  வரை ஒன்றாகப் படித்தவர்கள்.

ஒற்றுமை இது மட்டுமல்ல.

யாவருமே விஜயாவுடன் ஒன்றாகப் படித்த மாணவிகள் / தோழிகள். இதுதான் முக்கியமான ஒற்றுமை.

11-வது முடித்ததும் (1965) யாவரும் பிரிந்து விட்டனர். தொடர்பே இற்று விட்டது.

நாங்கள் 2001-ல் சென்னை வந்ததும், விஜயா ஒருமுறை காஞ்சிபுரம் சென்றாள். அங்கு, பிரேமா என்னும் தோழி நினைவுக்கு வர அவர்கள் வீட்டிற்கு சென்றாள்.  பிரேமாவின் அம்மாதான் இருப்பார், அவரிடம் பிரேமாவின் அட்ரஸை கேட்கலாம் என சென்ற விஜயா அங்கு பிரேமாவையே அதிர்ஷ்டவசமாக பார்த்தாள். நட்பு மீண்டும் துளிர்த்தது.

டெலிஃபோன் மூலம் நட்பு வலுத்தது. இரண்டு முறை விஜயா வேலூருக்கு பிரேமா வீட்டிற்கும்,  பிரேமா சென்னைக்கு எங்கள் வீட்டிற்கு ஒரு முறையும் வந்து தங்கி இந்த ஒன்பது ஆண்டுகளாக நட்பை தொடர்ந்தனர்.

பிரேமா சென்னை வந்தபோது ..

பதினைந்து தினங்களுக்கு முன்பு பிரேமா ஃபோன் பண்ணி இன்னொரு தோழியின் டெலிஃபோன் எண்ணை கொடுக்க, விஜயாவும் அந்த தோழியும் பேச, வட்டம் பெருகியது. விஜயா மீண்டும் வேலூர் சென்று ஒரு இரவு தங்கினாள் - 3 பேரும் 46 வருஷ செய்திகளை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் திடீர், திடீரென்று 2452 5465 ஒலிக்க ஆரம்பித்தது - “நான் xxxxx பேசுகிறேன்; Y VIJAYA இருக்காங்களா?” -- இப்படியாக வட்டம் பெருகி வளர்ந்து தற்போது விஜயாவும் ஏழு தோழிகளும் நிறைய பேசி, தொடர்பு கொண்டுள்ளனர். கூடிய விரைவில், SSKV-1965 வட்டம் இன்னும் பெருகட்டும் என பிரார்த்திக்கிறேன்.

ஒரு GET-TOGETHER சீக்கிரமே ஏற்பாடு பண்ண இருக்கிறோம் - சென்னையில் அல்லது காஞ்சிபுரத்தில்.

46 வருஷங்கள் முன்பு பள்ளியில் படித்தவர்கள் மீண்டும் சேரும்போது எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி.

விஜயாவையும் சேர்த்து இந்த எட்டு பேரில், விஜயா, பிரேமா, அம்பிகா மூவரும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து 11-வது வரை SSKV ஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள். மற்றவர்கள் 4, 5 வகுப்பில் வந்து சேர்ந்தவர்கள்.

ராஜப்பா
பகல் 1-15
02-10-2011

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...