Skip to main content

Posts

Showing posts from December, 2011

Vegetables Analysis

நாங்கள் வாங்கும் காய்கறிகளை வரிசைப்படுத்தி நான் ஜூலை 2011-ல் ஒரு அட்டவணை போட்டு அலச ஆரம்பித்தேன். மொத்தம் 51 விதமான் காய்கறிகள் (கீரைகளையும் சேர்த்து) காய்களின் விவரம் -- முளைக்கீரை, மணத்தக்காளி கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, புதினா, பாலக், வெந்தயக்கீரை, கீரைத்தண்டு (8) தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு, காரட், வெங்காயம், சின்ன வெங்காயம், எலுமிச்சம்பழம், பூண்டு (7); கொத்தவரங்காய், புடலங்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், காலிஃப்ளவர்,சின்ன உருளைக்கிழங்கு; கோவைக்காய்;(8) கத்தரிக்காய், வெண்டைக்காய், குடைமிளகாய், அவரைக்காய், முள்ளங்கி, பாகற்காய், நூல்கோல், மிதிபாகற்காய்; (8) முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, சௌசௌ, பரங்கிக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சுண்டைக்காய் (8) வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ; (3) சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு; (4) வெள்ளரிக்காய்,கொட்டைவகைகள், வேர்க்கடலை, சோளம், காராமணி (5) இவற்றில் எதை அதிக முறை வாங்கினோம் என அலசியதில், கீழ்க்கணட விவரங்கள் பதிந்தன:- ஜூலை 2011 _ல் அதிகம் வாங்கியவை. முள...

Marghazhi 2011 மார்கழி மாசம்

நேற்று மார்கழி மாசம் பிறந்தது.    விடியற்காலம் எழுந்து , பச்சைத் தண்ணீரில் குளித்து , தோய்த்து உலர்த்திய ஆடைகளை உடுத்திக் கொண்டு திருப்பாவை , திருவெம்பாவை பாடிய பின்னர் , அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்க ஆரம்பித்து விட்டேன் . இன்று [18-12-2011] காலை அருகிலுள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலுக்கும் , பிறகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று வந்தேன் . ராஜப்பா 18-12-2011 7-45 காலை.

சபரி மோக்ஷம் - விஷாகா ஹரி

சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூலில், குமாரராஜா முத்தையா ஹாலில் ஒவ்வொரு வருஷமும் JAYA TV நடத்தும் “மார்கழி மஹோத்ஸவம்” டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கி, 15 ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு வருஷமும் கடைசி நாளான டிச 15 ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல வருஷங்களாக விஷாகாவின் கதா காலக்ஷேபத்துடன் இந்த விழா முற்றுப் பெறுகிறது. போன வருஷம் (டிச 2010)  “ஸ்ரீகிருஷ்ண லீலா” நடந்தது.  (படிக்க) ஸௌம்யா, அதிதி போன்ற குழந்தைகளுக்கு ராமாயணம் கதை சொல்லும்போது, “ஸ்ரீராமருக்கு பழம் கொடுத்தாள்,” என சபரியைப் பற்றி கூறுவேன்; அத்தோடு சபரியின் பங்கு முடிந்தது. நேற்று (15-12-2011) செட்டிநாடு வித்யாஷ்ரம் குமாரராஜா முத்தையா அரங்கில் உபன்யாஸம் செய்த ஸ்ரீமதி விஷாகா ஹரி அப்படி நினைக்கவில்லை; இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல், அவர் தனது இனிமையான குரலில் சபரியைப் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்களை பாடல்கள், கதைகள் மூலம் சொன்னார். விஷாகாவின் நேற்றைய “ சபரி மோக்ஷம்” மிக அற்புதமாக, தெய்வீகமாக இருந்தது. சபரர் என்னும் ஆதிவாசி இனத்தில் மலைவாழ் பெண்ணாகப் பிறந்த சபரி, தன் தாயால் புறக்கணிக்கப்பட்டு, அநாதைய...

Back to School - After 46 years - The DAY

It was in the air for many weeks; I wrote about it in October 2011. The momentum gathered fast when the HINDU met 5 at Vadapalani and published the meet with a large photo. [ read ] The day was Sunday, the 4th Dec 2011. Vijaya got up by 4-30 AM and left house by 5-45. Arun dropped her at TNagar bus terminus. Boarded the bus at 0610 for Kanchipuram and she reached there by 8-15. Arrived in Sri Kamakshi Amman Koil and waited. Ladies of the 1965-class of Somasundara Kanya Vidyalaya (SSKV) Kanchipuram started arriving, and the next 30 minutes saw over 40 assembling. A few had seen the HINDU article and joined the group. After darshan of the Amman, and an archanai later, they ambled to their old alma mater nearby. It was an emotional meet, seeing one another after 46 years, not able to recognise anyone at the first sight. Time had transformed everyone, from bubbly, bouncing and beautiful young lasses of 16 and 17 years, to matured, grown-up and withered grandmothers of 62 and...

மயிலாப்பூரில் இன்று ...

இன்று (06 டிசம்பர் 2011) மாலை நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். பஸ் கட்டண உயர்விற்குப் பின்னர் நாங்கள் மயிலாப்பூருக்குச் செல்வது இதுவே முதல் முறை. பஸ் டிக்கெட் ரூ 13.00 ஆக உயர்ந்துள்ளது. இருவர் போய்விட்டு வர ரூ 52.00 ஆகிவிடுகிறது. மயிலாப்பூரில் முதலில் வடக்குமாட வீதி வழியாக கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். கோயிலுக்குச் சென்று ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. கோயிலில் நல்ல கூட்டம். இருப்பினும், ஸ்ரீ கற்பகாம்பாளையும், ஸ்ரீ கபாலீஸ்வரரையும் நன்றாக, கண்குளிர திருப்தியாக தரிஸனம் செய்தோம். இந்தக் கோயிலில் கிடைக்கும் மனநிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. மயிலாப்பூருக்கு இணை கிடையாது. பின்னர் கிரி டிரேடர்ஸுக்கும், மாமி மெஸ்ஸுக்கும் சென்றோம். தெற்கு மாடவீதியில் நுழைந்து சில சாமான்களை வாங்கினோம். பஸ் பிடிக்க போய்க் கொண்டிருக்கும் போது, விஜயாவிற்கு திடீரென தனது 1965-வகுப்பு தோழி (வயது 66) நாகலக்ஷ்மியின் நினைவு வந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்த 1965-வகுப்பு “ஸோமஸுந்த்ர கன்யா வித்யாலயா” மாணவிகள் பலர் 40க்கும் மேல் காஞ்சிபுரத்தில் தங்கள் பழைய பள்ளிக்க...

Back to School - After 46 years.

Forty students of SSKV School in Kancheepuram will meet after 46 years on December 4 at their alma mater It's a meeting with a few women from a 40-member group that has planned a reunion after 46 years at their alma mater, Somasundara Kanya Vidyalaya (SSKV) in Kancheepuram, and I arrive 15 minutes late. It's obvious I was not missed. Five grey-haired women, draped in saris, sit misty-eyed recollecting memories. Shanthi shakes her head in disbelief, as she tells V.S. Manonmani, “It's incredible I failed to recognise you — one of my best buddies!” Like a stump sprouting to life at the touch of water, faded memories return powerfully as they discuss their teachers, rivalries and pastimes at SSKV. Y. Vijaya reminds Ambika about their close competition in academics. “Often, just half a mark would separate us,” recalls Vijaya. Ambika nods in agreement. When Shanthi remembers their principal Yashoda Bai, her friends mention the admirable qualities the lady had. “Our SSLC e...