Skip to main content

சபரி மோக்ஷம் - விஷாகா ஹரி

சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூலில், குமாரராஜா முத்தையா ஹாலில் ஒவ்வொரு வருஷமும் JAYA TV நடத்தும் “மார்கழி மஹோத்ஸவம்” டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கி, 15 ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு வருஷமும் கடைசி நாளான டிச 15 ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல வருஷங்களாக விஷாகாவின் கதா காலக்ஷேபத்துடன் இந்த விழா முற்றுப் பெறுகிறது. போன வருஷம் (டிச 2010)  “ஸ்ரீகிருஷ்ண லீலா” நடந்தது.  (படிக்க)


ஸௌம்யா, அதிதி போன்ற குழந்தைகளுக்கு ராமாயணம் கதை சொல்லும்போது, “ஸ்ரீராமருக்கு பழம் கொடுத்தாள்,” என சபரியைப் பற்றி கூறுவேன்; அத்தோடு சபரியின் பங்கு முடிந்தது.

நேற்று (15-12-2011) செட்டிநாடு வித்யாஷ்ரம் குமாரராஜா முத்தையா அரங்கில் உபன்யாஸம் செய்த ஸ்ரீமதி விஷாகா ஹரி அப்படி நினைக்கவில்லை; இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல், அவர் தனது இனிமையான குரலில் சபரியைப் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்களை பாடல்கள், கதைகள் மூலம் சொன்னார். விஷாகாவின் நேற்றைய “சபரி மோக்ஷம்” மிக அற்புதமாக, தெய்வீகமாக இருந்தது.

சபரர் என்னும் ஆதிவாசி இனத்தில் மலைவாழ் பெண்ணாகப் பிறந்த சபரி, தன் தாயால் புறக்கணிக்கப்பட்டு, அநாதையாக, மனித தொடர்பே இல்லாத ஒரு ஜடமாக இருந்து வந்தாள். பச்சை மாமிஸத்தை உட்கொண்டு, ஒருவிதமான குறிக்கோளும் இல்லாத சிறுமியாக இருந்த இவள் ஒருமுறை பம்பா நதி தீரத்திற்கு வந்தாள். அங்குதான் மாற்றங்கள் நிகழ்ந்தன. உலகின் அழகுகளை, இயற்கையை ரசிக்க அவளுக்கு ஆர்வம் தோன்றியது.; மாமிஸம் சாப்பிடுவதை நிறுத்தி, காய் கனிகளை மட்டுமே சாப்பிட ஆரம்பித்தாள். ஸ்ரீ மதங்கர் என்னும் மஹரிஷி அங்கு இருந்தார்.

அவருக்குத் தெரியாமலேயே சபரி அவரது ஆஷ்ரமத்திற்கு தேவையான பணிகளை செய்ய தொடங்கினாள். இது ரிஷி முனிவருக்குத் தெரிய வந்ததும், அவளை அன்போடு அருகில் அழைத்து, ஞானத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். விரைவிலேயே அவளது குரு பக்தியினால் சபரி பகவான் குறித்த பல விஷயங்களைப் பற்றி அறிந்துகொண்டாள். வயதும் கூடி, அவள் கிழவியானாள். ஸ்ரீவைகுண்டம் போக ரிஷிக்கு சமயம் வந்தபோது, சபரியை அழைத்து, “ஸ்ரீராம, ராம, ராம” என்னும் தாரக மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார்.

ராம, ராம, ராம என்னும் நாமாவை காலையோ, பகலோ, மாலையோ, இரவோ,எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், ஒன்றோ, பத்தோ, லக்ஷமோ, எத்தனை முறையானாலும், படுத்துக் கொண்டோ, உட்கார்ந்தோ, நின்று கொண்டோ எப்படியானாலும் சொல்லலாம். ராம என்னும் இரண்டெழுத்தினால் நன்மையும் செல்வமும் வரும், தின்மையும் பாவமும் அகலும்.

ஸ்ரீராமர் உன்னைத் தேடி வருவார்,” என சபரியிடம் சொல்லி விட்டு ரிஷி வைகுண்டம் ஏகினார். எப்போது வருவார் என சொல்லவில்லை. அன்றுமுதல் தினம் தினம் புதுசு புதிசாக பழங்கள் பறித்து வந்து, ராமரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை, ஒரு மாசம் இரண்டு மாசம் இல்லை, பன்னிரண்டு (12) வருஷங்கள் காத்திருந்தாள். தன்னுடைய குருவின் வார்த்தை என்றும் பொய்க்காது என்னும் அசையாத நம்பிக்கை அவளுக்கு. ராமரும் வந்தார், லக்ஷ்மணனோடு.

பகவானை நேரில் தரிஸித்ததும், சபரிக்கு பேச்சே எழவில்லை. மௌனியாக, பக்தி பரவஸத்தோடும், அன்பு மேலீட்டாலும் சபரி ராமருக்கு பழங்களை தந்தாள். ஸ்ரீராம பிரானும் அந்த எளியவளின் சிறிய குடிசையில் கீழே தரையில் அமர்ந்து, அவள் அளித்த பழங்களை சாப்பிட்டார். சபரியின் கையால் கனிகளை உண்டபின்பு, இராமர் கூறுவதாக துளசிதாசர் வர்ணிப்பதாவது: “என் அரண்மனை, குருகுலவாசம் புரிந்த ஆசிரமம், நண்பர்களின் இல்லம், ஜனக மகாராஜாவின் மாளிகை இங்கெல்லாம் விருந்து உண்டிருக்கிறேன். ஆனால் சபரி அளித்த கனிகளின் சுவைக்கு எதுவும் இணையில்லை.” என்று இராமர் கூறினாராம்.

பகவானை பார்த்துக் கொண்டே, அவரை சாக்ஷியாக வைத்துக் கொண்டு, சபரி முக்தியடைந்தாள்.  பூதவுடல் அக்னியில் மறைந்த பின்பு சபரி, மிகவும் பிரகாசமான திவ்ய வடிவுடன் அக்னியிலிருந்து வெளியேறினாள். அவள் மேனியில் ஆபரணங்கள் ஜொலித்தன. மாலைகள் அணிந்து, சந்தனம் பூசியிருந்தாள். அழகான உடையணிந்து மின்னலைப் போல, பரமபதத்தை அடைந்தாள். அங்கே தன் ஆசார்யர்களாக விளங்கும் புண்ணியாத்மாக்களுக்கு என்றென்றும் சேவை புரிவதற்காகவே சபரி அழிவற்ற புண்ணியலோகம் சென்றாள்.

மணி 8-30, விஷாகா ஹரியும் தன் இனிய உபன்யாஸத்தை முடித்தார். ஹிந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், என பல மொழிகளிலும் ஸ்ரீராமர் குறித்த பாடல்களை பாடினார். தியாகய்யர் விசேஷமாக பரிமளித்தார். சுகானுபவம். அரங்கில் இருந்த 2500 பேரும் பக்தியில் மூழ்கினர், நேரம் போவதே தெரியாமல்.

வீடு திரும்பும்போது, பஸ்ஸில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் திடீரென, “நீங்கள் விஷாகா ஹரியை கேட்க வந்தீர்களா?” எனக் கேட்டார். ஆமாம் என்றேன். தான் 25 கிமீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்து வருவதாகவும், இன்னும் இரண்டு பஸ் மாறி வீடு போகவேண்டும் என்று சொன்னார். விஷாகா ஹரியின் சக்தி அது, அவரது இன்னிசை, உபன்யாஸம் செய்யும் நேர்த்தி இவற்றின் ஈர்ப்பு!

ராஜப்பா
08:45 காலை
16-12-2011





Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011