Skip to main content

மயிலாப்பூரில் நாங்கள் 31-1-2012

நேற்று (31 ஜனவரி) எங்கள் [41-வது] திருமண ஆண்டு நாள். மாலை 4-15 க்கு வீட்டிலிருந்து கிளம்பி, மயிலாப்ப்பூர் மசூதி தெருவிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சாத்திக் கொண்டு தரிஸனம் அளித்தார். அவரையும், ஸீதா சமேத ஸ்ரீ ராமரையும் சேவித்து விட்டு, ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்கு நடந்தோம்.

ஸ்ரீ அலமேலு தாயார் ஸமேதராக ஸ்ரீநிவாஸப் பெருமாள் இங்கு எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் புன்னகை தவழும் முகத்தோடு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்; அவரது அழகில் நம் மனசு கொள்ளை போய்விடுகிறது. மிக அருகில் நின்று பெருமாளை நீண்ட நேரம் சேவித்தோம்.
250 வருஷங்களுக்கு முன்னால் முதலில் இங்கு வேதாந்த தேஸிகர் கோயில் மட்டும் தான் இருந்தது; பின்னர் சமீபத்தில் 1924-ல் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் நிறுவப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்ரீ வேதாந்த தேஸிகரின் “உபாஸன தெய்வம்”; மிக சக்தி வாய்ந்தவர். கோயிலில் சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ நரஸிம்ஹர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

அடுத்து, ஸ்ரீ ஆதிகேஸவ பெருமாள் கோயில். மிகவும் பழமையானது. 12 ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ பேயாழ்வார் அவதரித்த இடம் மயிலாப்பூர். இந்தக் கோயிலில் பேயாழ்வாருக்கு ஒரு சன்னதி இருக்கிறது.

ஆதி கேஸவ பெருமாள்
ஆதிகேஸவப் பெருமாளையும் அருகில் நின்று தரிஸனம் செய்தோம். தாயார் மரகதவல்லித் தாயார். மயூரவல்லி தாயார் என்ற பெயரும் உண்டு.

ஆதி கேஸவப் பெருமாள்

மயூரவல்லித் தாயார்

ஹயக்ரீவர், கோதண்டராமர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், நரஸிம்ஹர், ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. யாவரையும் சேவித்து வணங்கினோம். இந்தக் கோயிலின் தீர்த்தக் குளம் சர்வதீர்த்தம், ஹரிஹரதீர்த்தம் என்கிற பெயர்களுடன், தற்போது “சித்திரைக் குளம்” என புகழ்பெற்றது. ஆதி கேஸவப்பெருமாளின் தெப்போத்ஸவம் போன வாரம்தான் (26-01-2012) நடந்தது; உத்ஸவம் மிக அழகாக இருக்கும்.

மயிலாப்பூர் பழமையும் பெருமையும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம். புகழ்பெற்ற ஏழு சிவாலயங்கள், நிறைய பெருமாள் கோயில்கள், கணக்கற்ற விநாயகர் கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்கள், ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழி அம்மன் முதலான அம்மன் கோயில்கள், சாயிபாபா கோயில், ஸ்ரீராமகிருஷ்ணர் மடம், ஸ்ரீவிவேகானந்தர் இல்லம் போன்றவை மயிலாப்பூரில் உள்ளன. முதலில், தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலுக்குப் போனோம்.

விஷ்ணுவின் வாமன அவதாரத்தில் கண்பார்வை இழந்த சுக்ராச்சாரியார் இழந்த தம் பார்வையை மீண்டும் பெறுவதற்கு, சிவனை வேண்டி தவம் பண்ண மயிலைக்கு வந்தார். சிவனை வணங்கி வழிபட்டு தன் கண்பார்வையை சுக்ராச்சாரியார் மீண்டும் பெற்ற தலம். சுக்ராச்சாரியாரின் பெயரிலேயே ஈஸ்வரன் “ஸ்ரீசுக்ரீஸ்வரர்” என்றும், தமிழில் “ ஸ்ரீவெள்ளீஸ்வரர்” என்றும் அழைக்கப்படுகிறார்.  கோயில் மிகவும் பழமையான, அழகான திருக்கோயில்.

கோயிலில் நுழைந்ததும் முதலில் நமக்கு காக்ஷி கொடுப்பது ஸித்தி-புத்தி ஸமேத செல்வ விநாயகர். மூலவர் வெள்ளீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்பிகை காமாக்ஷி அம்மன். மிகவும் அழகிய அம்பிகை. நாள் முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். முத்துக் குமாரஸ்வாமி என்ற பெயரில் முருகனுக்கு சன்னதி. ஸூரியன், வீரபத்ரன், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பிகை, நால்வர், சேக்கிழார், காசி விஸ்வநாதர், நடராஜர், பைரவர் ஆகியோர் இங்கு எழுந்தருளியுள்ளனர். தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும் உள்ளனர். வெளிப்புற பிராகாரத்தில் சனி பகவானுக்கு சன்னதியும், நவகிரஹங்களும் இருக்கின்றன.

சனி பகவானுக்கு நேர் எதிரே சுக்ராச்சாரியார் சிவனை வழிபடும் காக்ஷி தென்படுகிறது. ஐந்து நிலைகொண்ட ராஜ கோபுரத்துடன், ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் கம்பீரமாக திகழ்கிறது.

அங்கிருந்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத கபாலீஸ்வரர் கோயிலிற்கு சென்றோம். இரண்டு சன்னதிகளிலும் நல்ல தரிஸனம் கிடைத்தது. நேற்று அம்மனுக்கு ஏகதின லக்ஷார்ச்சனை பண்ணினார்கள். இதே போன்று, வெள்ளீஸ்வரர் கோயிலிலும் காமாக்ஷி அம்மனுக்கு ஏகதின லக்ஷார்ச்சனை நடைபெற்றது. இரண்டையும் சிறிது நேரம் பார்த்தோம்.

இவ்வாறாக, எங்கள் 41-ஆம் ஆண்டு கல்யாண நாள் பக்தியில் கழிந்தது; ஒரு சுகானுபவம்.

கற்பகாம்பாள் மெஸ்ஸில் டிஃபன் முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.

ராஜப்பா
1-2-2012
காலை 9 மணி



Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011