Skip to main content

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி?

எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம்.

பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம்.

கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் குறிப்பதே பஞ்சாங்கத்தின் முக்கிய பணியாகும். எனவே 'மேஷம்' முதல் 'மீனம்' வரையிலான ராசி மண்டலத்தின் 12 கட்டங்களில் சில கட்டங்கள் தவிர மற்ற கட்டங்களில் இந்த க்ரஹங்கள் சேர்ந்தோ தனித்தோ காணப்படும்.

க்ரஹங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கட்டம் "சுத்தம்" என்று குறிப்பிடப்படும்.

ஸ்தான சுத்தம்:-

உபநயனம், சீமந்தம், க்ருஹப்ரவேசம், விவாஹம் ஆகிய மிக முக்கிய காரியங்களைப் பண்ண தேர்ந்தெடுக்கும் லக்னத்திலிருந்து (அதையும் சேர்த்து) ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கொண்டு வரும்போது சில குறிப்பிட்ட இடங்கள் க்ரஹங்களின்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது சாஸ்த்ரம். அவ்விதிகளின்படி விவாஹத்திற்கு 7மிடம், உபநயனத்திற்கும் சீமந்தத்திற்கும் 8மிடமும், க்ருஹப்ரவேசத்திற்கு 12மிடமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே லக்னம் அமைக்க முற்படும்போது எந்த க்ருஹத்தில் க்ருஹங்களின்றி சுத்தமாக இருக்கிறதோ அதை பற்றிக்கொண்டு பின்நோக்கி எண்ணி லக்னத்தை அமைக்கவேண்டும்.

க்ரஹங்களின் வேகம் மற்றும் இடமாற்றம்:- பஞ்சாங்கங்களில் உள்ள மாதாந்திர ராசிக் கட்டத்தில் சந்திர தவிர மற்ற அனைத்துக் க்ரஹங்களையும் போட்டிருப்பார்கள். சந்திரன் மிகவும் வேகமான க்ரஹம் ஒரு மாதத்திற்குள் சுமார் 12 வேறு வீடுகளுக்கு மாறிவிடுவான். புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய க்ரஹங்களும் ஒரு மாதத்திற்குள் வீடு மாறிவிடுவார்கள். அவர்கள் மாறும் தேதியை ராசிக்கட்டத்தின் மையத்தில் உள்ள கட்டத்தில் குறிப்பிடுவது வழக்கம். எனவே மாதத்தின் முதல் தேதியில் க்ரஹங்கள் உள்ள நிலைக்கு வரையப்பட்ட ராசிக் கட்டத்தில் உள்ளபடியே மாதம் முழுவதும் கட்டங்கள் காலியாக இருக்கும் என்று எண்ணாமல், நாம் பார்க்கும் தேதிக்கு க்ரஹங்கள் மாறுதல் அடைந்துள்ளனவா என்பதற்கும் அன்றைய தேதியில் சந்திரன் எங்கிருக்கிறான் என்பதையும் பார்த்து ஸ்தான சுத்தத்தைத் தீர்மானிக்கவேண்டும்.

சந்திரனை அறிதல்:-

சந்திரனை அறிவதற்கு நக்ஷத்திரங்களைப் பற்றியும் பாதங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். கீழுள்ள ராசிக் கட்டத்தில் நக்ஷத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் உண்டு என்பது பெரும்பாலோருக்குத் தெரியும். ஒரு ராசியில் மொத்தம் ஒன்பது பாதங்கள் மட்டுமே அடங்கும். ஏனென்றால் ஒரு ராசி என்பது 30 டிகிரி. மொத்தம் உள்ள 360 டிகிரியும் 30 டிகிரி கொண்ட 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டதுபோல், ஒவ்வொன்றும் 4 பாதங்களைக் கொண்ட 27 நக்ஷத்திரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு பாதத்திற்கு சுமார் 3.33 டிகிரி. எனவே முதல் ராசியில் மூன்றாவது ராசயின் முதல் பாதம் மட்டுமே அடங்குகிறது.

அஸ்வினி 1-2-3-4, பரணி 1-2-3-4, கார்த்திகை 1 ==== ====== மேஷம் 0 - 30 டிகிரி


கார்த்திகை 2-3-4, ரோஹிணி 1-2-3-4, ம்ருகசீர்ஷம் 1-2 === = ரிஷபம் 30-60 டிகிரி

ம்ருகசீர்ஷம் 3-4, திருவாதிரை 1-2-3-4, புனர்வஸு 1-2-3 === மிதுனம் 60-90 டிகிரி

புனர்வஸு 4, பூசம் (புஷ்யம்) 1-2-3-4, ஆயில்யம் 1-2-3-4 === = கடகம் 90-120 டிகிரி

மகம் 1-2-3-4, பூரம் 1-2-3-4, உத்ரம் 1, === === === === === === சிம்மம் 120-150 டிகிரி

உத்ரம் 2-3-4, ஹஸ்தம் 1-2-3-4, சித்திரை 1-2, ==== === = ==== கன்னி 150-180 டிகிரி

சித்திரை 3-4, ஸ்வாதி 1-2-3-4, விஷாகம் 1-2-3 ========= === துலா,   180-210 டிகிரி

விஷாகம் 4, அனுஷம் 1-2-3-4, கேட்டை 1-2-3-4 ======= விருச்சிகம், 210-240 டிகிரி

மூலம் 1-2-3-4, பூராடம் 1-2-3-4, உத்ராடம் 1 ==== === === ==== தனுசு, 240-270 டிகிரி

உத்ராடம் 2-3-4, திருவோணம் 1-2-3-4, அவிட்டம் 1-2 ====== மகரம், 270-300 டிகிரி

அவிட்டம் 3-4, சதயம் 1-2-3-4, பூரட்டாதி 1-2-3 === === === = கும்பம், 300-330 டிகிரி

பூரட்டாதி 1, உத்ரட்டாதி 1-2-3-4, ரேவதி 1-2-3-4 === === ===  = மீனம் 330-360 டிகிரி

பஞ்சகம் மிக முக்கியம்:-  சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நக்ஷத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம் இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். ப்ரதமை -1, த்விதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்விநி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நக்ஷத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என லக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவ எண் (4 லக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டி பின் 9 ஆல் வகுக்கு வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய பஞ்சகங்களுக்கும் முறையே ரத்னம், சந்தனம், எலுமிச்சை, தீபம், தானியம் இவற்றை தானமாக அளித்து பரிகாரம் செய்து கொண்டு சுபங்கள் செய்யலாம் என்று பல பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகு காலம் எம கண்டத்தில் கவனம் வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கணித்துவிட்டு கடைசியில் ராகு, காலம் எம கண்டத்தை மறந்துபோய்விடுகிறவர்கள் உண்டு. எனவே நாம் தேர்ந்தெடுத்த லக்னத்தில் ராகு, அல்லது எமகண்டம் வந்தால், ராகு - எமகண்ட காலம் முடிந்த பிறகு லக்னத்தில் பாக்கி உள்ள நேரத்தைக் கொண்டு முஹூர்த்தம் நிர்ணயிக்கவேண்டும்.

சந்த்ராஷ்டம தினங்களில் சுப காரியங்களில் ஈடுபடக்கூடாது.
முஹூர்த்தம் யாருக்காககப் பார்க்கிறோமோ அவருக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரம் உள்ள நாளில் வரும் முஹூர்த்தங்களை விலக்கிவிட்டு மற்ற நாட்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

முஹூர்த்த நிர்ணய க்ரமம் (வரிசை):-

டக் டக்கென்று சுலபமாக முஹூர்த்தம் நிர்ணயம் செய்ய வழி முறைகள்:-

1. எந்தத் தமிழ் மாதத்தில் முஹூர்த்தம் பார்க்கவேண்டுமோ அந்த மாதத்தில் மரணயோகம், செவ்வாய், சனி ஆகியவை உள்ள நாட்களை விடுத்து மற்ற நாட்களை எடுத்து எழுதிக் கொள்க.

2. பஞ்சாங்கத்தில்  தினப்பொருத்தம் உள்ள நக்ஷத்திரங்களில் ஆகாத நக்ஷத்திரங்கள் போக பாக்கி நக்ஷத்திரங்கள் உள்ள தினங்கள், ஆகாத திதிகள் உள்ள தினங்கள், மற்றும் சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள் உள்ள தினங்களை நீக்கிவிடுக. 50 சதவீதம் முடிந்தது.

3. பாக்கித் தேறிய தினங்களில் வளர் பிறையில் உள்ள தினமாகவும், இரு கண்ணுள்ள (புதன், வியாழன், வெள்ளி) நாளாகவும் உள்ள ஒரு நாளை எடுத்துக்கொண்டு, அந் நாளை தமிழ், ஆங்கில தேதிகளுடன் ஒரு பேப்பரில் எழுதிக்கொள்க.

அன்றைய தினத்திற்கு சூர்ய உதயம் பார்த்து வலது கடைசியில் மணி - நிமிடம் என்ற தலைப்பின் கீழ் எழுதிக் கொள்க. அன்றைய தினத்திற்கு பஞ்சாங்கத்தில் "ராசி இரு" என்பதற்குக் கீழ் உள்ள மணி - நிமிடத்தை எடுத்து பேப்பரில் அந்த மாதத்தின் பெயருடன் இருப்பு என (மேஷ இருப்பு -- ரிஷப இருப்பு என்பதுபோல) சேர்த்து எழுதி முன் சூரிய உதய மணி நிமிடங்களுக்கு கீழ் கூட்ட வசதியாக எழுதிக் கொள்ளவும். தற்போது இவை இரண்டையும் கூட்டி 60க்கு மேல் வரும் நிமிடங்களை ஒன்று என்று மணியுடன் ஒன்றைக் கூட்டி 60க்குக் குறைவான நிமிடங்களை நிமிடங்களின் கீழ் எழுதி, மணியைக் கூட்டி மணியின் கீழ் எழுத, ஆரம்ப லக்னம் எத்தனை மணி வரை இருக்கிறது என்ற நேரம் கிடைக்கும். இந்த ஆரம்ப லக்னத்திற்கு ஸ்தான சுத்தம் இருந்து, பஞ்சகம் இருந்து, ராகு, எமகண்டம் நீக்கி போதுமானதாக இருந்தால் இதையே லக்னமாக வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் 21ம் பக்கம் உள்ள ராசிகளுக்கான கால அட்டவணையில் இருந்து அடுத்த லக்னத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள மணி நிமிடங்களை எடுத்து எழுதிக்கொண்டு கூட்டினால் அடுத்த லக்னத்தின் முடிவு நேரம் கிடைக்கும். இது போல் தேவையான லக்னம் கிடைக்கும் வரை எடுத்து எழுதிக்கொண்டு கூட்டிக் கொள்ள வேண்டும்.

4. தோராயமாக லக்னத்தை நிர்ணயித்தபின், லக்னத் துருவம் உள்ள லக்னங்களுக்கு துருவ எண் கூட்டி லக்ன எண், திதி எண், கிழமை எண், நக்ஷத்திர எண் இவற்றைக் கூட்டி 9 ஆல் வகுத்து மீதி 0, 3, 5, 7, 9 ஆகிவற்றில் ஒன்றாக உள்ளதா என்று பார்க்கவேண்டும். பஞ்சகம் இவற்றில் ஒன்றாக அமையாவிட்டால் வேறு லக்னம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா என பார்க்கவேண்டும்.

பகல் 12 மணிக்குப் பிறகு க்ருஹப்ரவேசம் தவிர மற்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. வேறு லக்னத்திற்கு வாய்ப்பின்றி, வேறு நாளிலும் செய்ய வழியில்லாத போது பஞ்சகப் ப்ரீதி பண்ணி சுபம் பண்ணலாம்.

நாழிகைக் கணக்கு இனி தேவையே இல்லை. நாழிகையில் குறிப்பிட வேண்டும் என்று சம்பிரதாயமோ சாஸ்திரமோ இல்லை.


ராஜப்பா 30-5-2012 காலை 9 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை