Skip to main content

Posts

Showing posts from October, 2012

Padma Akka - Remembrance

பத்மா அக்கா நினைவு அஞ்சலி நம் அப்பா-அம்மா (ஸ்ரீ GR சுப்ரமணிய அய்யர் - ஸ்ரீமதி சம்பூரணம்) அவர்களின் குமாரத்தியாக சௌ பத்மாவதி 04-04-1936 சனிக்கிழமை (ஞாயிறு விடியற்காலம் 02-15 மணிக்கு), யுவ வருஷம் பங்குனி 23-ஆம் தேதியன்று சுக்ல சதுர்த்தசி திதியும், உத்திரம்(1) நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சேலத்தில் பிறந்தாள். சேலத்தில் பல வருஷங்கள் வசித்த பிறகு, நம் அப்பா-அம்மா 1948-வாக்கில் கடலூர் வந்தனர். அங்கு புதுப்பாளையம் St Anne's Girls High School-ல் பத்மா அக்கா படித்தாள். வந்த புதிதில் புதுப்பாளையம் போன்ற இடங்களில் வசித்து வந்த நம் குடும்பம், 1954ம் வருஷம் அப்பா சொந்த வீடு வாங்கியதும், திருப்பாப்புலியூருக்கு 17 பாபுராவ் தெருவிற்கு நம் சொந்த வீட்டிற்கு அக்டோபர் – நவம்பரில் குடியேறினோம். [1993 வரை இந்த வீட்டில் இருந்தோம்] அவள் SSLC முடித்ததும்,. கொஞ்ச நாட்கள் நம் அம்மாவிற்கு வீட்டு வேலை, சமையல் வேலைகளில் உறுதுணையாக இருந்து வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டாள். ஈயச் சொம்பில் பத்மா அக்கா பண்ணும் ரஸத்தை டம்ளர் டம்ளராக குடிக்கலாம் – அவ்வளவு ருசியாக இருக்கும். 1955-ம் வருஷம் ...

பத்மா அக்கா இறுதிக் காரியங்கள்

10 ஆம் நாள் காரியங்கள் 2012 செப் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 06:05க்கு பத்மா அக்கா காலமானதை முன்பே எழுதினேன். இடியென காதில் விழுந்த செய்தி அது. புரட்டாசி, சுக்ல சதுர்த்தசி திதி. பிரகாஷ் தன் அம்மாவின் காரியங்களை தினம் தினம் செய்தான். பத்தாம் நாள் காரியம் அக்டோபர் 08ம் தேதி வந்தது. அதற்கென அஷோக்கும் நீரஜாவும் பெங்களூரிலிருந்து அக் 7-ஆம் தேதி (ஞாயிறு) வந்தனர். முன்னாதாக அக் 2ம் தேதி அருண், காயத்ரி பெங்களூரிலிருந்து வந்து உடனே அம்பத்தூர் சென்றனர். காயத்ரியின் அப்பாவும் சென்றார். 8 ஆம் தேதி (திங்கள்) காலை 7-15க்கு 10 ஆம் நாள் காரியத்திற்காக அருண் காரில் விஜயா, நான், அஷோக், நீரஜா கிளம்பினோம். அஷோக் ட்ரைவிங். சுகவனத்தையும் கூட்டிக் கொண்டு போனோம். மங்களம், கோபி, சரோஜா, அத்திம்பேர், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, (ரமேஷ் மனைவி) விஜி, மற்றும் லலிதா, குமார், ராஜேஸ்வரியின் பெற்றோர் வந்தனர். எங்களையும் சேர்த்து 17 பேர். பிரகாஷ், ராஜேஸ்வரி, ஸ்ரீவித்யா, அவள் பெண் ஐஸ்வர்யா சேர்த்து 21 பேர். காலை 10-20க்கு 10 ஆம் நாள் காரியங்கள் தொடங்கின. எல்லா பெண்மணிகளும் “பத்து” கொட்டினர். 11-30 க்கு அருகிலுள்ள்...

Padma akka Passed Away

பத்மா அக்கா மறைவு. அம்பத்தூரில் பத்மா அக்கா சிறிது உடல் நலம் இல்லாமல் இருக்கிறாள் என கேள்விப்பட்டு, விஜயாவும், நானும் செப்டம்பர் மாஸம் (2012) 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7-45க்கு பஸ்ஸில் கிளம்பினோம். அம்பத்தூருக்கு 6-45 க்கு சென்றடைந்தோம். அக்கா மிகவும் மெலிந்து காணப்பட்டாள். பார்க்கவே கஷ்டமாக இருந்தது. நாங்கள் சாப்பிடும்போது அவளையும் கையைப்பிடித்து மெதுவாக அழைத்துப் போய், டேபிளில் உட்கார வைத்து கொஞ்சம் சாப்பிட வைத்தேன். ”வாந்தி வருகிறது,” என அவள் சாப்பிட மறுத்தாள். பலவந்தமாக மூன்று சிறு கவளங்கள் சாப்பிட வைத்தேன். பகல் 3-30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு திரும்பினோம். வீட்டிற்கு வந்து, சரோஜா, சாவித்திரி, சுகவனம், ஜெயராமன், மங்களம் (தி.மலை) எல்லாருக்கும் போன் பண்ணி பத்மா குறித்து விஷயம் சொன்னேன். மறுநாள் ஞாயிறு (23) ஜெயராமன் குடும்பத்துடன் அங்கு சென்றான். திங்கட்கிழமை (24-ஆம் தேதி) ரமேஷ் குடும்பமும், சரோஜா, அத்திம்பேரும், சுகவனமும் சுதாவும் சென்றனர். ஆக எல்லாரும் சென்றுவிட்டனர். எல்லாரும் பத்மா அக்காவை உயிருடன் பார்ப்பது இதுதான் கடைசியாக இருக்கும் என்பதோ, இன்னும் ஆறே ...