Skip to main content

Padma akka Passed Away


பத்மா அக்கா மறைவு.

அம்பத்தூரில் பத்மா அக்கா சிறிது உடல் நலம் இல்லாமல் இருக்கிறாள் என கேள்விப்பட்டு, விஜயாவும், நானும் செப்டம்பர் மாஸம் (2012) 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7-45க்கு பஸ்ஸில் கிளம்பினோம். அம்பத்தூருக்கு 6-45 க்கு சென்றடைந்தோம். அக்கா மிகவும் மெலிந்து காணப்பட்டாள். பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

நாங்கள் சாப்பிடும்போது அவளையும் கையைப்பிடித்து மெதுவாக அழைத்துப் போய், டேபிளில் உட்கார வைத்து கொஞ்சம் சாப்பிட வைத்தேன். ”வாந்தி வருகிறது,” என அவள் சாப்பிட மறுத்தாள். பலவந்தமாக மூன்று சிறு கவளங்கள் சாப்பிட வைத்தேன்.

பகல் 3-30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு திரும்பினோம். வீட்டிற்கு வந்து, சரோஜா, சாவித்திரி, சுகவனம், ஜெயராமன், மங்களம் (தி.மலை) எல்லாருக்கும் போன் பண்ணி பத்மா குறித்து விஷயம் சொன்னேன்.

மறுநாள் ஞாயிறு (23) ஜெயராமன் குடும்பத்துடன் அங்கு சென்றான். திங்கட்கிழமை (24-ஆம் தேதி) ரமேஷ் குடும்பமும், சரோஜா, அத்திம்பேரும், சுகவனமும் சுதாவும் சென்றனர். ஆக எல்லாரும் சென்றுவிட்டனர். எல்லாரும் பத்மா அக்காவை உயிருடன் பார்ப்பது இதுதான் கடைசியாக இருக்கும் என்பதோ, இன்னும் ஆறே நாட்களில் அக்கா காலமாகி விடுவாள் என்பதோ எங்களுக்கு அப்போது தெரியாது.

பத்மாவை செப் 26 ஆம் தேதி போரூரில் ஸ்ரீராமச்சந்திரா ஹாஸ்பிடலில் பிரகாஷ் - ராஜேஸ்வரி சேர்த்தனர். முழு உடல் பரிசோதனைக்காக சேர்த்தனர். EMERGENCY பிரிவில் முதற் சோதனை செய்த டாக்டர்கள், அவளது ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டு, அவளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து ரத்தம் 2 யூனிட்கள் ஏத்தினர்.

26, 27, 28 தேதிகளில் ICU வில் இருந்த பத்மாவின் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் காணப்பட்டதால், அவளை இரண்டாம்-நிலை ICU விற்கு மாற்றினர். 28-ஆம் தேதி ஸ்ரீவித்யா வந்தாள். இன்னும் 4 - 5 தினங்களில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என நம்பிக்கை தெரிவித்தனர். எல்லாருக்கும் இந்த செய்தியை பிரகாஷ் தெரிவித்தான். மூன்று நாட்களும் ராஜேஸ்வரி ஹாஸ்பிடலிலேயே 24 மணி நேரமும் இருந்தாள்.

சனிக்கிழமை, 2012 செப் 29 ஆம் தேதி காலை 6-16க்கு எங்கள் போன் அழைத்தது. “அம்மா போய்விட்டாள்,” என அழுதுகொண்டே ராஜேஸ்வரி சொன்னாள். எங்களால் நம்பவே முடியவில்லை. எல்லாருக்கும் நான் தான் போனில் விஷயம் சொன்னேன். பிறகு நாங்கள் இருவரும் அர்விந்துடன் 8-45க்கு அம்பத்தூர் கிளம்பினோம். சுகவனமும் எங்களுடன் வந்தான்.

பத்மாவின் உடலை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் 10 மணிக்கு வீட்டிற்கு வந்தது. FREEZER குளிர் பெட்டியில் உடலை வைத்திருந்தனர். பார்க்கவே கண்ணீர் பெருகியது.

கிருத்திகாவின் பெற்றோர் சரோஜா-அத்திம்பேரை கூட்டிக் கொண்டு வந்தனர். ஜெயராமன், கல்யாணி, விஜய், பூர்ணிமா ஏற்கனவே வந்துவிட்டனர். ராஜேஸ்வரியின் பெற்றோரும் முன்னதாகவே வந்து விட்டனர். 2 மணி சுமாருக்கு சாவித்திரி ஹோசூரிலிருந்து வந்தாள் - ரமேஷ், கார்த்திக், வஸந்த் மூவரும் வந்தனர்.

அன்று மாலை 4-15க்கு அக்காவின் இறுதி காரியங்கள் ஆரம்பித்தன. பிரகாஷ் அழுது கொண்டே பண்ணினான். மாலை 5-30க்கு அர்விந்தின் காரில் அவனுடன் அம்பத்தூரில் உள்ள மின்சார மயானத்திற்கு சென்றோம். 3 கிமீ தூரத்தில் உள்ளது.

இறுதி காரியங்கள் அங்கு முடிந்ததும் மாலை 6-15க்கு பத்மாவின் உடல் தஹனம் பண்ணப்பட்டது. ஒரு சகாப்தம் முடிவுற்றது. அம்பத்தூர் வீட்டிற்கு திரும்பி, அங்கு குளித்து, சாப்பிட்டு நாங்கள் யாவரும் வீடு திரும்பினோம்.


ராஜப்பா
காலை 10 மணி
09-10-2012







Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011