Skip to main content

Our Bangalore Visit - Aug2013


Our Bangalore Visit – Aug-Sep 2013

விஜயாவும், நானும் 2013 ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 11-15 ரயிலில் பெங்களூர் புறப்பட்டோம். முதலில், அர்விந்த், கிருத்திகா. அதிதி, அர்ஜுன் எல்லோரும் ஒன்றாக கிளம்புவதாக திட்டமிட்டு, அர்விந்த டிக்கெட் வாங்கினான், ஆனால் அவர்களால் வர இயலவில்லை. எனவே நாங்கள் இருவர் மட்டுமே சென்றோம். ஏசி முதல் வகுப்பு. வாழ்க்கையில் முதன்முதலாக ஏசி முதல் வகுப்பில் பயணித்தோம்.
ஆகஸ்ட் 13 : விடியற்காலை 5 மணி சுமாருக்கு பெங்களூர் அடைந்தோம். அஷோக் வந்து, காரில் எங்களைக் கூட்டிச்சென்றான். காலையிலேயே ஒரு துக்க விஷயம் கேள்விப்பட்டோம். பம்பாயில், சுபத்ரா மன்னி 10:45க்கு காலமானார். கிட்னி பிரச்னை. கணேசன், ரவி, ஷோபா ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம்.

ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை ஸ்ரீவரலக்ஷ்மி பூஜை காயத்ரியும், நீரஜாவும் சேர்ந்து செய்தனர். விஜயா கலந்து கொள்ளவில்லை.

அடுத்த நாள் ஆக 17 அன்று ஆனந்த் வீட்டிற்கு சென்றோம்- அங்கு லஞ்ச். மாலை MG Road வரை Metro Train-l சென்று அங்குள்ள boulevard பார்த்தோம்மிகவும் அழகாக இருந்த்து. இரவு உணவை ஒரு ஹோட்டலில் முடித்துக் கொண்டு BTM வீடு திரும்பினோம்.
 
 
 
 
  
 
  

18ஆம் தேதியன்று அர்விந்த எங்கள் பம்பாய் ஏர் டிக்கெட்டுகளை வாங்கினான். ஆக 20 செவ்வாய் யஜுர் உபாகர்மா பண்ணினோம். 21 மற்றும் 22 தேதிகளில் அருண் வீட்டில் இருந்தோம். 22 மாலை அஷோக் வீட்டிற்கு வந்தோம்.

ஆகஸ்ட் 24 சனிக்கிழமை விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, விமான நிலையம் சென்றோம். அஷோக், நீரஜா எங்களை காரில் அழைத்து போனார்கள். வீட்டிலிருந்து 50 கிமீ தூரம் ! பம்பாய் விமானம் JET AIRWAYS காலை 6-10க்கு புறப்பட்ட்து. Bangalore International Airport உள்ளே முதல் முதலாக நுழைந்தோம் ! காலை சிற்றுண்டி வழங்கினார்கள். 7-40க்கு பம்பாய் அடைந்தோம். வெளியில் வந்து சாதாரண ஆட்டோ பிடித்து ரவி-கணேசன் வீடு சென்றோம். பம்பாயில் ஆட்டொவில் ஒரு கிமீ தூரத்திற்கு 10 ரூபாய் மட்டுமே! மீட்டரில் காண்பித்த 143.00 ரூபாய் (14.3 கிமீ தூரம்) கொடுத்தோம். சென்னைக்கும் பம்பாய்க்கும் என்ன ஒரு வித்தியாசம்!

அன்றைக்கு 12-ஆம் நாள் காரியம். ரமணி 12:30 மணிக்கும், இந்திரா, அகிலா இரவு 9:30க்கும் வந்தனர். கணேசன் 10-வது மாடியிலும், ரவி 5-வது மாடியிலும் இருக்கின்றனர். மன்னி காலமான் பிறகு கணேசனும் 5-வது மாடிக்கே வந்துவிட்டார். நாங்கள் யாவரும் 10-வது மாடியில்தான் தூங்கினோம்.

ஆகஸ்ட் 25, ஞாயிறு – சுபஸ்யம். ரவி வீட்டில் 5 வது மாடியில் நடந்தது. ரவி பண்ணினான். காலை 10 ம்ணிக்கு ஆரம்பித்தது. காமாக்ஷி, கிருஷ்ணராஜ், நிருபமா, உஷா, தினமணி, செல்வமணி, அவரது வீட்டுக்காரர், செல்லு, அவர் மனைவி இன்னும் பலர் வந்தனர். 10 வது மாடியில் Breakfast and Lunch ஏற்பாடு.
 




 


 


 

ஆகஸ்ட் 26 திங்கள் காலை 8:15க்கு நாங்கள் இருவர், ரமணி, இந்திரா, அகிலா ஆகியோர் தாணே புறப்பட்டோம்கிருஷ்ணராஜ் காரில். கிருஷ்ணாவின் வீடு மிக வசதியாக நன்றாக இருக்கிறது. மறுநாள், ஆகஸ்ட் 27 செவ்வாய் காலை உணவு சாப்பிட்ட பின்னர், விமான நிலையம் சென்றோம். கிருஷ்ணராஜ் காரில் எங்களை கூட்டிச் சென்றான். விமானம் JET KONNECT மதியம் 1-40க்கு பம்பாயை விட்டுக் கிளம்பி பெங்களூருக்கு 3-30க்கு அடைந்தது. வெளியில் வந்து சிட்டி பஸ் (AC VOLVO) இரண்டு மணி நேரம் பயணித்து வீடு வந்தோம். 

ஆகஸ்ட் 28 புதன்கிழமை காலை 10 மணிக்கு நான் மட்டும் பஸ்ஸில் ஹோசூர் சென்றேன். அன்றிரவு ரயிலில், விஜயா, அஷோக், நீரஜா ஆகியோர் ஸ்ருங்கேரி சென்றனர். இரண்டு நாட்கள் சாவித்திரியுடன் இருந்த பின்னர், ஹோசூரிலிருந்து ஆக 31 சனிக்கிழமை காலையில்  நான் பெங்களூர் திரும்பினேன். அன்று விடியற்காலம் விஜயா ஆகியோரும் பெங்களூர் திரும்பினர். அவர்கள் கொல்லூர் சென்று மூகாம்பிகை அம்மனை தரிசித்து வந்தனர்
ஆகஸ்ட் 31 சனிக்கிழமை இரவு 11 மணிக்கு அர்விந்த், கிருத்திகா, அதிதி, அர்ஜுன் ஆகியோர் சென்னையிலிருந்து வந்தனர்.
 செப்டம்பர் 1 ஞாயிறு காலை 11 மணிக்கு யாவரும் (அருண் குடும்பம் உட்பட) காவிரியும், அர்காவதி ஆறும் சங்கமிக்கும் இடத்திற்கு இரண்டு கார்களில் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 100 கிமீ தூரம். காவிரி நிறைய தண்ணீருடன் அகலமாக ஓடுகிறது. எல்லாரும் வட்ட வடிவமான் பரிசலில் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரை சென்றோம். (தலைக்கு 50 ரூ.)

அர்காவதி ஆறு நந்தி மலையில் உற்பத்தி ஆகி, கனகபுரா என்னுமிடத்தில் காவிரியுடன் சங்கமிக்கிறது. இந்த ஆறு பெங்களூரின் குடிநீர் வழங்குகிறது.





  
முதலில், கொண்டுவந்த புலவ், தயிர்சாதம் சாப்பிட்டோம்.

 
 

குழந்தைகள் நால்வரும் காவிரி ஆற்றில் குளித்து கும்மாளமிட்டனர். அர்ஜுன் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினான். அவனுக்கு ஒரே குஷி. மூன்று மணி நேரம் குளித்தும், வெளியே வருவதற்கு  இஷ்டமில்லாமல் வந்தனர்.

 


 



வீடு திரும்பும்போது மணி 7:30. அர்விந்த் ஆகியோர் அருண் வீட்டிற்கு நேராக சென்றுவிட்டனர். அவர்கள் மறுநாள் மாலை 4 மணிக்கு BTM திரும்பினர். அதற்கும் அடுத்த நாள் செப் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு அர்விந்த் கொச்சி சென்றான். விஜயா, நீரஜா, கிருத்திகா, அர்ஜுன், அதிதி ஆகியோர் ஆனந்த் வீட்டிற்கு சென்று வந்தனர்.

செப்டம்பர் 4, புதன்கிழமை நான், விஜயா, அதிதி முவரும் BIG BAZAAR சென்று குழந்தைகளுக்கு ட்ரெஸ்  வாங்கினோம்.

அடுத்த நாள் செப் 5 வியாழன் மாலை 4-30 ஷதாப்தி ரயிலில் நாங்கள் யாவரும் சென்னை திரும்பினோம்.

இவ்வாறாக எங்கள் பெங்களூர் ட்ரிப் நன்றாக இருந்தது.

ராஜப்பா
7-9-2013


 
 

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011