யுத்த காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆக ஐந்து காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக சுந்தர காண்டத்தை 17-04-2014 அன்று நிறைவு பண்ணினார். 18-04-2014 வெள்ளிக்கிழமை முதல் யுத்த காண்டம் தொடங்கினார். [பகுதி 531] ஸ்ரீ ராமாயணத்தின் ஆறாவது காண்டம் இது. கடைசி காண்டமும், நீளமான காண்டமும் இது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தோடு 128 ஸர்கத்தோடு யுத்த காண்டம் நிறைவு பெறும். ஸ்ரீராமர் ஹனுமானை ஒரு நல்ல காரியம் செய்து முடித்தற்காக மகிழ்கிறார். இனி லங்காவிற்கு எப்படி செல்வது என எல்லாருடனும் கலந்து ஆலோசிக்கிறார், சுக்ரீவன் ஆலோசனைகளைக் கேட்டு, ராமன் ஹனுமானை அழைத்து லங்காவை விவரிக்குமாறு கேட்கிறார். ஹனுமானும் விளக்க, ராமன் கடலை கடப்பதற்கு நல்ல முஹூர்த்தம் குறிக்கிறார். [ ஸர் 4] லங்காவ...