Skip to main content

யுத்த காண்டம்

யுத்த  காண்டம். வால்மீகி ராமாயணம்.

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார்.

பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆக ஐந்து காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக சுந்தர காண்டத்தை 17-04-2014 அன்று நிறைவு பண்ணினார்.

18-04-2014 வெள்ளிக்கிழமை முதல் யுத்த காண்டம் தொடங்கினார். [பகுதி 531] ஸ்ரீ ராமாயணத்தின் ஆறாவது காண்டம் இது. கடைசி காண்டமும், நீளமான காண்டமும் இது.

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தோடு 128 ஸர்கத்தோடு யுத்த காண்டம்  நிறைவு பெறும்.

ஸ்ரீராமர் ஹனுமானை ஒரு நல்ல காரியம் செய்து முடித்தற்காக மகிழ்கிறார். இனி லங்காவிற்கு எப்படி செல்வது என எல்லாருடனும் கலந்து ஆலோசிக்கிறார்,

சுக்ரீவன் ஆலோசனைகளைக் கேட்டு, ராமன் ஹனுமானை அழைத்து லங்காவை விவரிக்குமாறு கேட்கிறார். ஹனுமானும் விளக்க, ராமன் கடலை கடப்பதற்கு நல்ல முஹூர்த்தம் குறிக்கிறார். [ ஸர் 4]

லங்காவில் ராவணனும் இதேபோன்று ஆலோசித்து ராமனை எப்படி தடுப்பது என்பதை எண்ணுகிறான். ப்ரஹஸ்தா, துர்முகா, வஜ்ரதம்ஷ்ட்ரா, நிகும்பா, வஜ்ரஹானு போன்ற சேனைத்தலைவர்கள் ராவணனுக்கு தைரியம் சொல்லுகிறார்கள். [ஸர் 8]

அயோத்யாவில் கௌஸல்யாவிற்கு சுமந்திரன் ஆறுதல் கூறுகிறார். லங்காவில் பல துர்நிமித்தங்களை  பார்த்த விபீஷ்ணன் ராவணனுக்கு ஸீதையை திருப்பி கொடுக்கும்படி புத்திமதி சொல்கிறான்.

சேனைத்தலைவனை அழைத்து லங்காவை பாதுகாக்க சொல்ல அவனும் தன் சைன்யங்களை கொண்டு செல்கிறான். முதலில் ராவணனுக்கு புத்திமதி கூறிய அவன் தம்பி கும்பகர்ணன், கடைசியில் ராமனையும் லக்ஷ்மணனையும் தானே அழிப்பதாக சொல்கிறான். விபீஷணன் மீண்டும் மீண்டும் ராமனின் சக்தியை கூறி ஸீதையை திரும்ப அனுப்ப சொல்கிறான். [ஸர் 14]

ராவணின் மகனான இந்தர்ஜித் விபீஷணனை ஏசுகிறான். விபீஷணனை ராவணனும் ஏச, விபீஷணன் ராவணனை விட்டுப் பிரிந்து ராமனிடம் செல்கிறான். [ஸர் 16]

தன் துணைவர்கள் நாலு பேருடன் ராமனிடம் சென்று, சரணாகதி கேட்கிறான். தன் ஆலோசகர்களை ராமன் வினவ Angada, sharabha, Jambavan and Mainda  ஆகியோர் கூடாது என்கின்றனர். ஆனால் ஹனுமான் விபீஷணனை ஆதரித்து பேசுகிறான். [ஸர் 17] ராமனும் இதை ஆமோதிக்கிறார். சுக்ரீவன் முதலில் இதை விரும்பாவிட்டாலும் கடைசியில் ராமனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இறுதியில் விபீஷணன் ராமனுடன் சேர்கிறார். [ஸர் 18]

கடல் அரசனை ராமர் வணங்குகிறார். இதற்கிடையில் சுகன் என்பவனை ராவணன் ராமரிடம் தூதுவனாக அனுப்புகிறான். [ஸர் 20 ] முதலில் வழிவிட மறுத்த கடல் அரசன், ராமர் விட்ட பாணங்களுக்கு பயந்து, அவரிடம் நளன் என்பவரை கூப்பிட்டு கடலுக்கு குறுக்காக ஒரு பாலம் அமைத்து, அதன் மூலம் கடலை கடக்க ராமருக்கு ஆலோசனை சொல்கிறார். நளனும் அவ்வாறே வானரங்களின் உதவியோடு, பாலம் அமைக்கிறார். [ஸர் 22]

ராமரும் லக்ஷ்மணன் போன்றோரும் சைன்யங்களும் கடல் கடந்து லங்கையை அடைகின்றனர். [ஸர் 25]

யுத்தம் துவங்குகிறது. [ஸர் 29 - 35 ] சுவேலா மலை மீது நின்று ராமரும் லக்ஷ்மணரும் லங்கையின் அழகை ரசிக்கின்றனர். [ஸர் 40]

Indrajit fought with Angeda, Sampati with Prajangha, Hanuman with Jambumali, Vibhishana with the demon Shatrughna, Gaja with Tapana, Nila with Nikumbha, Sugreeva with Praghasa, Lakshmana with Virupaksha, Agniketu and others with Rama, Vajramsushit with Mainda, Ashaniprabha with Divivda, Pratapana with Nala and Sushena with Vidyunami  [ஸர் 43]

இந்தர்ஜித் விட்ட நாக பாணங்களால் கட்டுண்டு ராமரும் லக்ஷ்மணரும் மயங்கி விழுகின்றனர். ஹனுமானும் அங்கதனும் சோகப்படுகிறார்கள். [ஸர் 45 ]  Nila, Mainda, Dvivida, Hanuman, Gavaksha and Angada ஆகியோரையும் இந்தர்ஜித் நாக பாசத்தால் கட்டி விடுகிறான். [ஸர் 46]

விபீஷணன் கேட்டுக் கொண்டவாறு கழுகு அரசன் கருடன் அங்கு வந்து ராமர், லக்ஷ்மணர், மற்றவர்கள் எல்லாரையும் நாக பாசத்திலிருந்து மீட்கிறார்; எல்லாரும் மயக்கம் தெளிந்து எழுகிறார்கள். [ஸர் 50]

Dhumraksha fights with Hanuman; ராக்ஷசனை ஹனுமான் அழிக்கிறார். [ஸர் 52] Vajradamstra, என்ற மற்றொரு அரக்கனை அங்கதன் அழிக்கிறான். [ஸர் 54] அடுத்து வந்த அகம்பனா என்னும் அரக்கனை ஹனுமான் வீழ்த்துகிறார். [ஸர் 56] அடுத்து வந்த ப்ரஹஸ்தா என்னும் அரக்கனை நீலா அழிக்கிறார். [ஸர் 58]
Akampana, Indrajit, Atikaya, Mahodara, Pishacha, Trishiras, Kumbha, Nimkumbha and Narantaka the foremost of demons. After a tough fight with Sugreeva, Lakshmana, Hanuma and Nila, Ravana encounters Rama in battle, and sustaining an ignominious defeat at the latter's hands and escaping with his life, withdraws to Lanka. [ஸர் 59]

Ravana returns to Lanka and asks some demons to go to the abode of sleeping Kumbhakarna, to wake him up and request him to come to him. The slumbering Kumbhakarna is roused by the demons under orders of their king. Kumbhakarna, giant in form, sets out on the high way to see Ravana and the monkeys get alarmed to see the giant demon. [ஸர் 60]

கோரமான யுத்தம் புரிந்து, கும்பகர்ணனும் ராமன் கையால் மாண்டு போகிறான் [ஸர் 67]

நராந்தகா என்னும் அரக்கனும், மஹோதரா, த்ரீஷிரா என்னும் அரக்கனும் அங்கதன் கையால் மாள்கிறார்கள். [ஸர் 70]

அடுத்து ராவணன் மகனான இந்தர்ஜித் வந்து கோர யுத்தம் செய்கிறான். அவனது அம்புகளால் அடிபட்டு, ராமனும் லக்ஷ்மணனும் மயக்கமுற்று கீழே விழுகிறார்கள் (அது போன்று நடிக்கிறார்கள்)   [ஸர் 73]

ஹனுமான் சஞ்சீவினி மலையை பெயர்த்து எடுத்து வந்து, அதிலுள்ள மூலிகைகள் மூலம், ராமன் - லக்ஷ்மணனின் மயக்கத்தை தெளிவிக்கிறார்கள்.  [ஸர் 74]

கும்பகர்ணனின் குமாரர்களான கும்பா, நிகும்பா ஆகிய அரக்கர்களை அங்கதன் அழிக்கிறான்.  [ஸர் 76]   நிகும்பனை ஹனுமான் அழிக்கிறார். [ ஸர் 77]

மீண்டும் இந்தர்ஜித் வந்து யுத்தம் புரிகிறான்  [ ஸர் 80] நீண்ட யுத்தத்திற்கு பின்னர், லக்ஷ்மணன் விட்ட இந்திர தனுஷினால் இந்தர்ஜித் மாள்கிறான்.  [ஸர் 90]

இந்தர்ஜித்தின் மரணத்தை கேட்டு ராவணன் மிகவும் விசனப்படுகிறான்; கடைசியில் ராவணனே யுத்த பூமிக்கு வந்து சண்டை செய்ய ஆரம்பிக்கிறான்.  [ஸர் 95] நடுவில் விருபாக்ஷன் என்னும் அரக்கனையும், மஹோதரன் என்னும் அரக்கனையும் சுக்ரீவன் அழிக்கிறான்.   [ஸர் 97]

மஹாபார்ஷ்வா என்னும் அரக்கனை அங்கதன் கொல்கிறான்.  [ஸர் 98]

ராவணனுக்கும் ராமனுக்கும் கோர யுத்தம் துவங்குகிறது. அகஸ்திய முனிவர் “ஆதித்ய ஹ்ருதயம்” என்னும் ஸூரிய பகவானுக்கான ஸ்லோகத்தை சொல்ல ராமனுக்கு அறிவுறுத்துகிறார். ராமனும் அவ்வாறே சொல்கிறான்.   [ஸர் 105]

ஏழு நாட்களுக்கு யுத்தம் நடக்கிறது. [ஸர் 107] பின்னர் ராமன் தனக்கு ப்ரஹ்மா கொடுத்த ஆயுதத்தை விட, ராவணன் மாண்டு போகிறான்.  [ஸர் 108]

விபீஷணன் தன் அண்ணனுக்கு இறுதி சடங்குகள் செய்கிறான். [ஸர் 109] மண்டோதரி முதலான ராணிகள் ராவணன் இறந்ததை அறிந்து மிகவும் அழுகிறார்கள். [ ஸர் 111]

அடுத்து, விபீஷணனுக்கு லங்கா அரசனாக லக்ஷ்மணன் முடி சூட்டுகிறான்.  [ஸர் 113]

விபீஷணனிடம் ஸீதையை கூட்டி வருமாறு விபீஷணனிடம் ராமன் கூற, அவ்வாறே ஸீதை அழைத்து வரப்படுகிறாள்.  [ஸர் 114]

ஸீதையிடம் ராமர் சொல்லுகிறார் : உனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு தக்க தண்டனையை ராவணன் பெற்று விட்டான். அவன் தோற்கடிக்கப் பட்டு, இறந்தும் போனான். இருந்தாலும், உன்மீது மற்றவர்கள் சொல்லக்கூடிய களங்கத்திலிருந்து விடுபட நீ தனியாக போய் விடு என சொல்கிறார். [ ஸர் 115]


ஸீதை லக்ஷ்மணனிடம் நெருப்பு மூட்டுமாறு கேட்டு, அந்த தீயில் குதிக்க முற்படுகிறாள். [ஸர் 116]

தேவர்கள் வந்து ராமன் யார் (மஹாவிஷ்ணுவின் அவதாரம்) என்பதை சொல்கிறார்கள். [ஸர் 117]

அக்நி பகவான் தீயிலிருந்து ஸீதையை தூக்கி வந்து அவள் சுத்தமானவள் என சொல்லி ராமரிடம் அவளை ஒப்படைக்கிறார். [ஸர் 118]

சிவன் நேரில் தோன்றி, ராமரின் தகப்பனார் தசரதன் வந்திருப்பதாக கூற, ராமரும், லக்ஷ்மணரும் தங்கள் தகப்பனாரை வேண்டி வணங்குகின்றனர். [ஸர் 119]

இந்திரன் தன்னிடம் ஏதேனும் வரம் கேட்குமாறு ராமரிடம் சொல்ல, ராமரும் யுத்தத்தில் மாண்ட அத்தனை வானரங்களுக்கும் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுகிறார். அவ்வாறே வானரங்களும் உயிர் பெற்று எழுகின்றன. [ஸர் 120]

புஷ்பக விமானத்தில் ஏறி ராமர் முதலானோர் அயோத்யா புறப்படுகின்றனர். போகும் வழியில் இருந்த எல்லா பிரதேசங்களையும் ராமர் ஸீதைக்கு விளக்கி சொல்கிறார். கடைசியில் அயோத்யா பட்டினம் போய் சேர்கிறார்கள். [ ஸர் 123]

ஹனுமானை பரதனிடம் அனுப்பி தாங்கள் திரும்பி விட்ட செய்தியை சொல்ல சொல்கிறார். ஹனுமானும் அவ்வாறே சென்று விளக்கி சொல்கிறார். [ஸர் 126]

பரதனும் சத்ருக்நனும் சேர்ந்து பட்டாபிஷேகத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்கின்றனர். [ஸர் 127]

ராஜரிஷி வஸிஷ்டர் பட்டாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். ராமர் முடி சூட்டலுடன், வால்மீகி பகவானின் ஸ்ரீமத் ராமாயணம் நிறைவு பெறுகிறது. [ஸர் 128]

ராஜப்பா
வெள்ளிக்கிழமை
26-9-2014

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் இதுநாள் வரை நிகழ்த்திய ஸ்ரீராமாயணம், இன்றோடு (வெள்ளிக்கிழமை 26-09-2014) நிறைவு பெற்றது.  

01-04-2012 அன்று ஆரம்பித்தார். மொத்தம் 644 உபன்யாஸங்கள். மிக அருமையாக சொன்னார். 7, 8 உபன்யாஸங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விடாமல் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை நானும், விஜயாவும் கேட்டோம்.

பொதிகை டீவிக்கு எங்கள் நன்றி. உபன்யாஸம் சொன்ன ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு நமஸ்காரங்கள். 

லக்ஷ்மண, ஹனுமான், ஸீதா ஸமேத ஸ்ரீ ராமருக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.












Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...