Skip to main content

Gruha Pravesam - Vasu and Srikanth

க்ருஹ ப்ரவேசம். 29-04-2017

கேளம்பாக்கம் - வண்டலூர் ரோட்டில், கண்டிகை என்னுமிடத்திற்கு அருகில், UNITEC COவின் வீடுகள் புக் பண்ணி சுமார் 7-8 ஆண்டுகளுக்கு பின்னால், 2017 ஏப்ரல் மத்தியில் வீடுகளை முடித்து, சாவியை வாசு / ஸ்ரீகாந்த் இருவரிடமும் கொடுத்தார்கள்.

கணபதி ஹோமம் மட்டும் செய்யலாம் என வாசு முடிவெடித்தான். ஏப் 29 சனிக்கிழமை செய்ய எண்ணினான். வாசு, ராஜி, ஜெயஸ்ரீ, ஆனந்த், ஸ்ரீநாத் ஆகியோர் 27 (ஏப்ரல் 2017) காலை 11-30 க்கு தில்லியிலிருந்து வந்தனர்.

நம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, 1 மணி சுமாருக்கு, அவர்கள் யாவரும் மடிப்பாக்கம் சென்றனர். மாலை 7 மணிக்கு வாசுவும் ஆனந்தும் யூனிடெக்கிலிருந்து திரும்பினர். 7-45க்கு ராஜி, ஜெயஸ்ரீ, ஸ்ரீநாத் தி.நகர் போய்விட்டு, புடைவை வாங்கிக் கொண்டு திரும்பினர்.

28-07-2017 வெள்ளிக்கிழமை :

விஜயா, ஜெயஸ்ரீ, ராஜி, வாசு ஆகியோர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். பின்னர், நிறைய சாமான்கள் வாங்கி வந்தனர். சாப்பிட்ட பிறகு, எல்லாரும் யூனிடெக் சென்றனர். நேற்றும், இன்றும் அருண் கார்தான். இரவு 7-30க்கு திரும்பினர். அரவிந்த், ஸ்ருதி இருவரும் 7-15க்கு இங்கு வந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் மடிப்பாக்கம் திரும்பினர். ஸ்ரீகாந்த், மற்றும் சுஜனி இரவு 1-45க்கு தில்லியிலிருந்து வந்தனர்.

29-07-2017 சனிக்கிழமை : க்ருஹ பிரவேஸம்.

காலை 4 மணிக்கு எழுந்து எல்லாரும் குளித்த பிறகு இரண்டு கார்களில் யூனிடெக் கிளம்பினோம், அருண் காரில் வாசு, ராஜி, ஜெயஸ்ரீ, விஜயா ஆகியோரும், இன்னோவா காரில், ஸ்ரீகாந்த், ஆனந்த், ஸ்ரீநாத், சுஜனி, நான் ஆகியோரும் சென்றோம்.

அங்கு, இரண்டு வீடுகளிலும் பால் காய்ச்சி குடித்தோம். வாத்யார்கள் 4 பேர் 7-30க்கு ஹோமத்தை ஆரம்பித்தனர். அருண், காயத்ரி, சௌம்யா, ஸ்ரீராம், அர்விந்த், அதிதி, அர்ஜுன் ஆகியோர் 8-45க்கு அர்விந்த் காரில் வந்தனர். ஸ்ருதி, அரவிந்த், சுந்தர், மாமி ஆகியோர் வந்தனர், அரவிந்த் அக்கா புவனா, அவளது கணவர், இரண்டு குழந்தைகள், ராஜியின் அம்மா, தம்பி, அவரது மனைவி, ஒரு பெண் ஆகியோரும் வந்தனர்.


09-45க்கு க்ருஹ ப்ரவேஸம் / ஹோமம் இரண்டு வீடுகளிலும் நல்ல முறையில் நடந்து முடிந்தது. பின்னர் சாப்பாடு (கேடரர்). 30-35 பேர் சாப்பிட்டனர். 1-30 மணிக்கு நான், விஜயா ஆகியோர் அர்விந்த் காரிலும், அருண் குடும்பத்தினர் அவர்கள் காரிலும் வீடு புறப்பட்டோம்.

வாசு ஆகியோர் ஒரகடம் சென்றுவிட்டு 8-30க்கு திரும்பினர். அவர்களுக்கு அருண் வீட்டில் இரவு சாப்பாடு. எல்லாரும் (நாங்கள் இருவர் நீங்கலாக) இரவில் பீச் சென்றார்கள்.

29-04-2017 ஞாயிறு.

நான், விஜயா, ஸ்ரீகாந்த், ஜெயஸ்ரீ, ஆனந்த், ஸ்ரீநாத் ஆகியோர் இன்னோவா காரில் மயிலாப்பூர் சென்றோம். கோயில் பார்த்து விட்டு தெற்கு மாட வீதியில் காஃபி பவுடர், மாகாளி கிழங்கு, மாவடு வாங்கி, வீட்டிற்கு திரும்பினோம். முன்னதாக, ஸ்ரீகாந்தும், ஜெயஸ்ரீயும் சரோஜா அக்கா வீட்டிற்கு போய் வந்தார்கள். அவர்களுக்கு மதியம் சாப்பாடு சுதா வீட்டில்.

வாசு, ராஜி, சுஜனி மூவரும், மடிப்பாக்கம் சென்றனர் (10 மணிக்கு) அங்கேயே பகல் / இரவு உணவு. மாலை 6 மணிக்கு அரவிந்த், ஸ்ருதி இருவரும் ப்ரிஸ்டல் புறப்பட்டனர். வாசு 10-30க்கு வீடு வந்தான். ஸ்ரீகாந்த் ஆகியோர் 5 மணிக்கு இன்னோவாவில் ஏர்போர்ட் கிளம்பி 7-30 ஃப்ளைட்டில் தில்லி புறப்பட்டனர்.

30-04-2017  திங்கள் கிழமை :

காலை 9 மணிக்கு வாசு, ராஜி, சுஜனி மூவரும் பெருங்குடி சென்று ராஜியின் தம்பி வீட்டில் சாப்பிட்ட பின்னர், மடிப்பாக்கம் சென்றனர். மாலை தில்லி ஃப்ளைட்.

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011