”பாமர கீதை”யில் கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்), பார்த்தனிடம் (அர்ஜுனன்) கூறுகிறான். நீ யாருக்கேனும் ஒரு சிறு உதவி செய்தால் கூட, அது ஸ்வாமிக்கு செய்யும் பூஜைக்கு நிகர். எனவே எப்போது முடிகிறதோ நீ சிறு உதவியாவது செய். காலத்தினால் செய்யும் சிறு உதவி, இந்த ஞாலத்தை விட மிகப் பெரிது என்பது வள்ளுவர் வாக்கு. உனக்கு சென்னை குறித்த geography எவ்வளவு தெரியும் என்பது நான் அறியேன். இன்று காலை எங்கள் வீட்டிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் சித்தியும் நானும் இருந்தோம். வெயில் கடுமை - 38, 39 டிகிரி இருக்கும், பகல் 12 மணி. அப்போலோ கடையில் மருந்து வாங்க இதோ நுழைய போகிறோம். ஒரு எளியவர், வயதானவர் என் அருகில் வந்து, “பாம்பன் ஸ்வாமி கோயில் எப்படிங்க போகணும்?” என கேட்டார். 2 1/2 கிமீ தூரம் இருக்கும் அந்தக் கோயில்; அதற்கு அங்கிருந்து வழி எப்படி சொல்வது என இருவரும் முழித்தோம். "left, right, left, left ....." அந்த எளியவர்க்கு எப்படி சொல்வது?? “இங்கிருந்து ரொம்ப தூரம்,” என்று சொல்லி விட்டு, “எதற்கு இப்போது பாம்பன் ஸ்வாமி கோயில் ....?” என இழுத்தேன். மெல்லிய குரலில் பதில் வந்தது, “அங்கு சாப்பாடு போடு...