Skip to main content

Paamara Geethai - by Ja Ra Su

எழுத்தாளர் ஜ ரா சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் தற்போது பாமர கீதை என எழுதிக் கொண்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கொண்டு அவனுக்கு உபதேசித்த கீதையை (அதன் சாராம்சத்தை) எளியவர்களுக்கும் புரியும்படி, அவர்களது மொழியில் எழுதியுள்ளார். மிக அருமை, அருமையிலும் அருமை.

கிஷ்டன், பார்த்தன் இருவரும் சென்னை வாழ் ரிக்‌ஷாக்காரர்கள். பார்த்தனுக்கு வரும் சந்தேகங்களை போக்கி அவனுக்கு நல்வழி கூறுபவன் கிஷ்டன்.

ஆடி மாசத்தில் ஆத்தாவிற்கு (காளி அம்மனுக்கு) கூழ் ஊற்ற காசு போதவில்லை என்பது பார்த்தனின் வருத்தம், ஆற்றாமை. அதற்கு கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்) என்ன சொல்லி பார்த்தனை தேற்றுகிறான் --- படியுங்கள் ....

”கூழ் ஊற்றுவதும் பக்திதான். அது நம்ம சக்திக்கு முடியாதென்றால்” ....  இனி மேற்கொண்டு.
-----******-----

கிஷ்டன் : அவசரப்படா​தே. ஒரு நல்ல மனுஷன் ​சொல்ற புத்திமதிப் ​பேச்​சைக் ​கேட்கறது... இப்ப வாரியார் சாமி ​பேச்சு மாதிரி எங்ஙனா நடக்குது. இல்​லே. எங்கனாச்சும் யாராச்சும் ராமியாணம், பாரதம் படிக்கறாங்க... அங்​கே ​போய்க் குந்திக்கிணு ​கொஞ்ச ​நேரம் ​கேளு. அதுக்கு உடம்பா​லே பூ​சை பண்ற மாதிரிதான் அருத்தம்.

”தேவத்விஜ குரு ப்ராக்ஞ பூஜனம் சௌசம் ஆர்ஜவம் | ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச சாரீரம் தப உச்யதே ||  >> கீதை அத் 17 ஸ்லோகம் 14.      இதன் அர்த்தம் ::: தேவர், ப்ராம்மணர், குருமார், ஞானிகள் ஆகியவர்களை போற்றுவதும், தூய்மையும் நேர்மையும் ப்ரம்மசர்யமும் அஹிம்ஸையும் தேகத்தால் செய்யும் தவம் எனப்படுகிறது.
-----******-----

பார்த்தி : அப்​போ இந்த ​மெல்லி​சை அது இதுன்னு ஏற்பாடு பண்ற​தெல்லாம் ​வேணாங்க​றே?

கிஷ்டன் : அவுங்களும் நாலு சாமி பாட்டுப் பாடினா நல்லது. அந்த மாதிரி நிகழ்ச்சி​யெல்லாம் ஏற்பாடு பண்ண சவுகரியப்படலியா? கவ​லைப்படா​தே. இந்த ஆடி மாசம் பூரா எல்லார்கிட்டயும் சந்​தோசமா, இனி​மையா, மருவாதியா, அடக்க ஒடுக்கமாய் ​பேசறதுன்னு ​வெரதம் ​வெச்சுக்கிட்டு அ​தே மாதிரி ​பேசு... அதுவும் ஒரு பூ​சைதான். அது வாக்கா​லே பண்ணற பூ​சை.

இனி கீதை என்ன சொல்கிறது,

ஸ்ரீகிருஷ்ண பகவான் என்ன பதில் சொல்கிறார், பார்ப்போம் ....
“அனுத்வேக கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்|  ஸ்வாத்யாய அப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே||    அத் 17 ஸ்லோ15.    அர்த்தம் >> எவரையும் துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும் நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல் --- இது வாக்கு மயமான தபசு என்று சொல்லப்படுகிறது.
-----******-----

பார்த்தி : என்னா​லே, அப்படி​யெல்லாம் ​பேச முடியுமா நம்ம ​தொழி​ல்​லே?

கிஷ்டன் : அட, பண்ண முடிஞ்சா பண்ணு. ​செரி. அத்​தெ வுடு. ​லொட ​லொடன்னு ​பேசாம மவுனமா, வா​யை மூடிக்கினு கம்முனு ​கெட. ஒரு நா​ளைக்கு ​ரெண்டு மணி ​நேரம் ​பேசாம இரு.

பார்த்தி : மவுன ​வெரதம்னு ​சொல்றாங்க​ளே, அதுவா?

கிஷ்டன் : அதுதான். குமுறிக்கினு ஆத்திரமா வருது. திட்டணும் ​போலிருக்கு. வம்பு ​பேசணும் ​போல ஆ​சையா கீது. அப்​போ கம்முனு அமுக்கமா வா​யைத் ​தெறக்காம இருந்துரு. ​

ரொம்ப ​நேரத்துக்கு இல்​லே. ​ரெண்டு மணி ​நேரத்துக்கு அதுவும் கூட பூ​சை மாதிரிதான். வாயி​லே ​பேச்சு இல்​லே. மனசு​லே 'காளியாத்தா... எனக்கு ​பொறு​மை​யைக் ​கொடு'ன்னு அந்த சமயத்தி​லே ​நெ​னைச்சுக்​கோ... அதுவும் ஒரு பூ​சைதான். மனசா​லே பண்ற பூ​சை.

ஒருத்தருக்கு எதுனா சின்னதா உதவி ​செய்தா அதுகூட ஒரு தவசுதான். பூ​சைதான். அன்​னைக்கி ஒரு ​பெரீவரு, 'தாக்குர் சத்திரம் எங்கிருக்கிது'ன்னப்ப ​கை​யைப் புடிச்சுக்கினு கூட்டிகினு ​ரோ​டை கிராஸ்  பண்ணி பஸ் ஸ்டாண்டு​லே வுட்டு, இருபத்தாறாம் நம்பர் பஸ்ஸு வந்ததும் ஏத்தி வுட்டியே! ஆத்தாளுக்கு ஆடி மாசத்துக் கூ​ழை அன்னிக்​கே நீ ஊத்திட்​டே...

இனி கீதை .... “மனஸ் ப்ரஸாத ஸௌம்யத்வம் மௌனம் ஆத்மவிநிக்ரஹ: |  பாவ ஸம்சுத்திர் இதி ஏதத் தபோ மானஸம் உச்யதே ||”  அத் 17 ஸ்லோ 16.      அர்த்தம் >>>> மன அமைதி, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம்,  தூய நோக்கம் ... இது மானஸ (மனசினால் செய்யப்படுகிற) தபசு எனப்படுகிறது.
-----******-----

கிஷ்டன் : பாவி! பாவி! கழுநீர்ப் பா​னையி​லே ​கை​யை வுட்டுட்டாப்ப​லே அந்த மாதிரிக் காரியம் பண்ணிடா​தே. இன்னும் வசூலாகல​யேன்னு பறக்காமல், என்ன வசூல் பண்ணியிருக்கி​யோ அ​தைக் ​கொண்டு அம்மனுக்கு மனசாரப் பூ​சை பண்ணு​வோம். ஆத்தா சந்​தோசப்படுவா. அந்தக் ​கோயில்​லே ​வெளக்கு​ ​போடறாங்க, இந்தக் ​கோயில்​லே சினிமாப் பாட்டுக்காரங்க கச்​சேரி ​வெக்கிறாங்கன்னு ​போட்டி ​வேணாம். நல்ல ​சொல்லு ​சொன்னா பூ​சைதான். நல்லது ஒண்​ணைப் ​பெரியவங்ககிட்டயிருந்து ​கேட்டுகினா அதுவும் பூ​சைதான். ஒரு சின்ன உபகாரம், அவன் திருப்பி இன்னா ​செய்வான்னு எதிர்பார்க்காம ​செஞ்சா அதுவும் பூ​சைதான். ஆத்தாவுக்கு பா​லைக் ​கொட்டி பூ​சை பண்ணினாலும் பூ​சைதான். பிரியுதா?

கீதை புஸ்தகம் வைத்திருப்போர், அத் 17 ஸ்லோகம் 18, 19, 20, 21, 22, ஆகியவற்றையும் படியுங்கள். ஜராசு எழுதி இருப்பதின் அர்த்தம் “பிரியும்” (!!!)

Rajappa
21-06-2017





Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011