Skip to main content

HELPING Others

”பாமர கீதை”யில் கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்), பார்த்தனிடம் (அர்ஜுனன்) கூறுகிறான். நீ யாருக்கேனும் ஒரு சிறு உதவி செய்தால் கூட, அது ஸ்வாமிக்கு செய்யும் பூஜைக்கு நிகர். எனவே எப்போது முடிகிறதோ நீ சிறு உதவியாவது செய். காலத்தினால் செய்யும் சிறு உதவி, இந்த ஞாலத்தை விட மிகப் பெரிது என்பது வள்ளுவர் வாக்கு.

உனக்கு சென்னை குறித்த geography எவ்வளவு தெரியும் என்பது நான் அறியேன். இன்று காலை எங்கள் வீட்டிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் சித்தியும் நானும் இருந்தோம். வெயில் கடுமை - 38, 39 டிகிரி இருக்கும், பகல் 12 மணி. அப்போலோ கடையில் மருந்து வாங்க இதோ நுழைய போகிறோம்.


ஒரு எளியவர், வயதானவர் என் அருகில் வந்து, “பாம்பன் ஸ்வாமி கோயில் எப்படிங்க போகணும்?” என கேட்டார். 2 1/2 கிமீ தூரம் இருக்கும் அந்தக் கோயில்; அதற்கு அங்கிருந்து வழி எப்படி சொல்வது என இருவரும் முழித்தோம். "left, right, left, left ....." அந்த எளியவர்க்கு எப்படி சொல்வது??

“இங்கிருந்து ரொம்ப தூரம்,” என்று சொல்லி விட்டு, “எதற்கு இப்போது பாம்பன் ஸ்வாமி கோயில் ....?” என இழுத்தேன். மெல்லிய குரலில் பதில் வந்தது, “அங்கு சாப்பாடு போடுகிறார்களாம், காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை, அதுதான்”   Oh my God !!

"இங்கேயே ஒரு நிமிஷம் இருங்கள்; மருந்து வாங்கி வருகிறோம். எங்கள் வீடும் அந்த வழியில்தான் உள்ளது. கூட்டிப் போகிறோம்.” ஆட்டோவில் உட்கார்த்தி, நமது ரோட்டின் கடைசியில் அவரை இறக்கி விட்டு, “இங்கிருந்து கிட்டத்தான் கோயில் உள்ளது, போங்கள்”, என வழியை சொன்னேன். கையிலும் 20 ரூபாய் தாளை கொடுத்தேன்.

நன்றியும், அழுகையுமாக அவர் சென்றார். (திருப்பூர்க்காரர்).

இதுதான் இந்தியா. கோயில்கள் இருக்கும்வரை, கோயில்களில் இலவசமாக அன்னதானம் செய்யும் வழக்கம் இருக்கும்வரை நமது பண்பாடு, பாரம்பரியம் தமிழ் நாட்டில் ஓங்கி வளரும்.

Rajappa
23-06-2017

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...