Skip to main content

Posts

Showing posts from November, 2007

மாகாளிக் கிழங்கு

அது மாகாளியா, அல்லது மாகாணியா? பெயர் என்னவாயிருந்தால் என்ன, அது மலைப்பிரதேசங்களில் விளையும் ஒரு மரத்தின் வேர். கூகிளில் தேடியபோது, இந்தக் கிழங்கின் மருத்துவக் குணங்கள் தெரிய வந்தன. "The root of Sariva is used in the form of powder and infusion to treat wound, bronchial asthma, fever, intrinsic haemorrhage, kushtha, erysipelas, poisoning, paediatric rejuvinative/rasayana and during pregnancy." மருந்தோ, இல்லையோ, மாகாளிக் கிழங்கு என்னும் போதிலே, ஊறுகாய் என்றுதான் எதிரொலிக்கிறது, சரிதானே? கிழங்கை வாங்கிவந்து, தண்ணீரில் சுமார் 10-12 மணி நேரம் போட்டுவைத்து, பின்னர் தோல் சீவி, குறுக்காக வெட்டி, "நரம்பு" என சொல்லப்படும் பகுதியை நீக்கிவிட்டு (இதுதான் மிகவும் கடினமான வேலை), கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, எலுமிச்சம்பழ சாறு, மிளகாய்ப் பொடி, கடுகுப்பொடி, தயிர் சேர்த்து கலந்து வைக்கவேண்டும். ஒரு வாரம் (7-8 தினங்கள்) ஊற வேண்டும். ஊறிய பின்னர் மாகாளிக்கிழங்கு ஊறுகாய் தயார். எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய். ராஜப்பா 18:35 --- 21 நவம்பர் 2007 Magaali Kizhangu பி.கு:: நேற்று (2...

பல்லாவரத்தில் நான்

சென்ற நவ 16 வெள்ளிக்கிழமை (அதாவது நேற்று) நான் பல்லாவரம் சென்றேன். சென்னை மாநகரில் ஒரு புறப் பகுதியான இது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நகராட்சியாகும். இங்கு சுபாவும், மகேஷும் ஒரு FLAT வாங்கி, அதற்கான கிருஹப்பிரவேசம் செய்தனர். நானும் விஜயாவும் திருவான்மியூருக்கு அருண் வீட்டிற்கு முதல்நாள் (15th) இரவே வந்து விட்டோம். காலையில் 4-45 க்கு எழுந்து, குளித்து, ஸௌம்யாவை எழுப்பி, நாலு பேரும் அருணுடைய புதிய காரில் புறப்படும்போது மணி 6-15. பல்லாவரம் கிராமத்தை (ஆமாம், கிராமம்தான்) அடைந்த போது 6-45 இருக்கும். ஊரில் நுழைந்த பின்னர்தான் ஆரம்பித்தது தலைவலி. வீட்டுக்கு செல்லும் சரியான வ்ழியே தெரியவில்லை. ஒருவிதமாக ஊரை சுற்றி சுற்றி வந்தபின், வீடு தென்பட்டது - அப்பாடா! (எல்லாருமே இந்த கஷ்டத்தை அனுபவித்தனர் !) வீடு நன்றாக இருக்கிறது. மின்வசதி, தண்ணீர் வசதி இன்னும் வரவில்லை. கிருஹப் பிரவேச விழா மிக நல்ல முறையில் நடந்தது. (சந்திரன் சாஸ்திரிகள் இல்லை). நிறைய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தனர். நாங்கள், அருண், காயத்ரி, ஸௌம்யா, கிருத்திகா, அதிதி. கிருத்திகாவின் அப்பா, அம்மா, சரோஜா, அத்திம்பேர், சத்ய...

ஸௌம்யாவும் அரசலாறும்

விஷ்ணுபுரம் - இந்த சிறு கிராமம் கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ளது. அங்கு ஒரு பழைய அக்ரஹாரம் - நெறய ஓட்டு வீடுகள். திண்ணை, தாழ்வாரம், ரேழி, கூடம், முற்றம் என நம்முடைய பாபுராவ் தெரு வீட்டை நினைவுக்கு கொண்டு வரும் வீடுகள். வீட்டிற்குப் பின்னாலேயே, வீட்டைத் தொட்டுக்கொண்டு சலசலவென ஓடும் அரசலாறு. (கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் அதே அரசலாறு. கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால், வந்தியத்தேவனும், குந்தவையும் வந்து விடுவார்கள் ) மண் ரோடுதான்; ஆனாலும் சுத்தமான ஆற்று மணல். ஸௌம்யா வெறுங்காலுடன் மணலில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டே இருந்தாள். வீட்டிற்குள்ளே வர மறுத்து விட்டாள். மிக அருகில் ஆடு பார்த்து, அவள் வியப்பும், சந்தோஷமும் அடைந்தாள். தகதகவென ஓடி வரும் அரசலாற்று நீரின் மிகையைக் கண்டு, அவள் " பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும், புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம், துங்கமணி மின்போலும் வடிவத்தாள் ," என பாரதி வர்ணித்தானே, அந்த அழகுத்தெய்வத்தைப் போல காட்சி தந்தாள். ஆற்றில் உடனே குளிக்க வேண்டுமாம் - " தாத்தா, தண்ணி --- ஜோ ஜோ" எ...