விஷ்ணுபுரம் - இந்த சிறு கிராமம் கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தூரத்தில்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ளது. அங்கு ஒரு பழைய அக்ரஹாரம் - நெறய ஓட்டு வீடுகள். திண்ணை, தாழ்வாரம், ரேழி, கூடம், முற்றம் என நம்முடைய பாபுராவ் தெரு வீட்டை நினைவுக்கு கொண்டு வரும் வீடுகள்.
வீட்டிற்குப் பின்னாலேயே, வீட்டைத் தொட்டுக்கொண்டு சலசலவென ஓடும் அரசலாறு. (கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் அதே அரசலாறு. கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால், வந்தியத்தேவனும், குந்தவையும் வந்து விடுவார்கள்)
மண் ரோடுதான்; ஆனாலும் சுத்தமான ஆற்று மணல். ஸௌம்யா வெறுங்காலுடன் மணலில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டே இருந்தாள். வீட்டிற்குள்ளே வர மறுத்து விட்டாள். மிக அருகில் ஆடு பார்த்து, அவள் வியப்பும், சந்தோஷமும் அடைந்தாள்.
தகதகவென ஓடி வரும் அரசலாற்று நீரின் மிகையைக் கண்டு, அவள் "பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும், புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம், துங்கமணி மின்போலும் வடிவத்தாள்," என பாரதி வர்ணித்தானே, அந்த அழகுத்தெய்வத்தைப் போல காட்சி தந்தாள்.
ஆற்றில் உடனே குளிக்க வேண்டுமாம் - " தாத்தா, தண்ணி --- ஜோ ஜோ" என சொல்லிகொண்டே இருந்தாள். (மறுநாள், காவிரி ஆற்றில் ஸௌம்யா துலாஸ்நானம் செய்தாள்! ஒரே சந்தோஷம் முகத்தில்.)
ராஜப்பா
12:50 14 நவம்பர் 2007
Sowmya, Arasalaaru

Comments
ஒரே ஒரு எண்ணம், வேகமான நகர வாழ்க்கையில் பழகி விட்ட என்னை ஒரு மாதம் இங்கே விட்டு விட்டால் என்ன ஆவேனோ !!