சென்ற நவ 16 வெள்ளிக்கிழமை (அதாவது நேற்று) நான் பல்லாவரம் சென்றேன். சென்னை மாநகரில் ஒரு புறப் பகுதியான இது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நகராட்சியாகும்.
இங்கு சுபாவும், மகேஷும் ஒரு FLAT வாங்கி, அதற்கான கிருஹப்பிரவேசம் செய்தனர். நானும் விஜயாவும் திருவான்மியூருக்கு அருண் வீட்டிற்கு முதல்நாள் (15th) இரவே வந்து விட்டோம். காலையில் 4-45 க்கு எழுந்து, குளித்து, ஸௌம்யாவை எழுப்பி, நாலு பேரும் அருணுடைய புதிய காரில் புறப்படும்போது மணி 6-15.
பல்லாவரம் கிராமத்தை (ஆமாம், கிராமம்தான்) அடைந்த போது 6-45 இருக்கும். ஊரில் நுழைந்த பின்னர்தான் ஆரம்பித்தது தலைவலி. வீட்டுக்கு செல்லும் சரியான வ்ழியே தெரியவில்லை. ஒருவிதமாக ஊரை சுற்றி சுற்றி வந்தபின், வீடு தென்பட்டது - அப்பாடா! (எல்லாருமே இந்த கஷ்டத்தை அனுபவித்தனர் !)
வீடு நன்றாக இருக்கிறது. மின்வசதி, தண்ணீர் வசதி இன்னும் வரவில்லை. கிருஹப் பிரவேச விழா மிக நல்ல முறையில் நடந்தது. (சந்திரன் சாஸ்திரிகள் இல்லை). நிறைய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தனர். நாங்கள், அருண், காயத்ரி, ஸௌம்யா, கிருத்திகா, அதிதி. கிருத்திகாவின் அப்பா, அம்மா, சரோஜா, அத்திம்பேர், சத்யா, ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, ஆவடியிலிருந்து குமார் ஆகியோர் நம் பக்கத்திலிருந்து போயிருந்தோம்.
காலை டிபன். அய்யப்பன் தான் caterer. டிபனுக்குப் பிறகு சில பேர் கிளம்பிவிட்டனர். அருண், கிருத்திகா, அதிதி ஆகியோரும் டிபனுக்கு பின்னர் கிளம்பினர். நாங்கள் அங்கேயே இருந்து, பகல் உணவை முடித்துக் கொண்டு, பகல் 12-15 க்கு சரோஜா - அத்திம்பேருடன் அவர்கள் காரில் கிளம்பினோம். காயத்ரி - ஸௌம்யா இருவரும் சுகவனத்துடன் 3 மணிக்கு கிளம்பினர்.
இப்படியாக, சுபா - மகேஷின் கிருஹப் பிரவேசம் நல்ல முறையில் நடந்தேறியது. அவர்களுக்கு என் ஆசிகள் பல.
ராஜப்பா
7-30 மாலை, 17-11-2007

Comments
It should be written as "gruha" and not "graha". Gruha refers to house/place. Graha refers to planet, among other things. So getting into a new house should be referred to as 'gruhappravEsam"
Good luck!
உங்கள் இயற்பெயர் தெரியாததால்,
நாரதர் என அழைக்கிறேன், மன்னிக்கவும்.
“கிரகப் பிரவேசம்” என்பது தவறு என சுட்டி எழுதியற்கு, பல நன்றிகள். தவற்றை திருத்திக்கொண்டேன், நன்றி.
rajappa41 @gmail.com
Chennai-600028, 22 Jan 2009