28 ஜுன் 2009 ஞாயிற்றுக்கிழமை (நாள் 3) இன்று நாங்கள் வழக்கத்தை விட 5 நிமிஷங்கள் தாமதமாக ஆஸ்திக ஸமாஜத்தை அடைந்தோம். வாசலில் குங்குமம், சந்தனம், சர்க்கரை, கல்கண்டு கொடுத்து "கல்யாண வரவேற்பு." வந்திருந்த பெண்மணிகள் அனைவருக்கும் மல்லிகைப் பூ கொடுத்தார்கள்! நிறையப் பேர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புஷ்பம் அடங்கிய தாம்பாளங்களை எடுத்துவந்தனர். 4 - 5 பேர் பருப்புத்தேங்காய் (ஜோடி)கொண்டுவந்து மேடையில் வைத்தனர். நாம் வந்திருப்பது உபன்யாஸத்திற்கா, இல்லை இடம் மாறி கல்யாண மண்டபத்திற்கு போய்விட்டோமா என ஒரு கணம் வியந்து போனோம். மதுரா திரும்பி வந்தது. பல அஸுரர்களை அனுப்பியும் கண்ணனை கொல்ல முடியாததால், கண்ணனை மதுராவிற்கே அழைத்து கொல்ல கம்ஸன் திட்டமிட்டான். அக்ரூரன் என்பவனை அழைத்து, பிருந்தாவனம் சென்று கண்ணனை அழைத்து வருமாறு உத்தரவிட்டான். அக்ரூரனும் கோகுலம் புறப்பட்டான். அவன் கிருஷ்ண பக்தன் என்பதால் அவனுக்கு கொள்ளை ஆனந்தம், கண்ணனை நேரில், அருகில் பார்க்க இயலும் என்பதால். தனுர்யாகம் என்று அக்ரூரன் பொய்க்காரணம் சொன்னாலும், கண்ணனுக்கு உண்மை தெரியும். கம்ஸ வதத்திற்கு வேளை வந்துவிட்டது. ஆயர்பாடி ச...