Skip to main content

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day1

Day 1 : வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2009

கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான்.

ஜூன் 26, 27, 28 தேதிகளில் ஆஸ்திக ஸமாஜத்தில் ஸ்ரீமதி விஷாகா ஹரியின் “ஸ்ரீ கிருஷ்ண லீலா” உபன்யாஸம் நடைபெறும் என்ற அறிவிப்பைப் பார்த்து, நேற்று (26) மாலை 5 மணிக்கும் முன்னதாகவே நானும் விஜயாவும் ஆஸ்திக ஸமாஜத்தில் ஆஜர்.

வழக்கம்போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. சரியாக 6-30க்கு விஷாகா ஹரி உபன்யாஸத்தை ஆரம்பித்தார்.

பாரத தேசத்தில் யாருடைய புண்ய கதை அதிகமாக சொல்லப்படுகிறது, கேட்கப்படுகிறது, எழுதப்படுகிறது, படிக்கப்படுகிறது, பாட்டு எழுதப்படுகிறது, பாடப்படுகிறது என்று பார்த்தோமானால், அது ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியதாகத்தான் இருக்கும். சந்தேகமேயில்லை.

ஸ்ரீ கிருஷ்ணர் சரித்ரம் விஷ்ணுபுராணம், ஸ்ரீமத் பாகவதம் போன்று 4 நூல்களில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும், ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னும் விரிவாக் சொல்லப்பட்டிருப்பதால், தான் பாகவதத்தையே பின்பற்ற இருப்பதாக விஷாகா சொன்னார்.

ப்ரஹ்மா >> வஸிஷ்டர் >> சக்தி >> பராசரர் >> வ்யாஸர் இவர்கள் வம்சத்தில் வ்யாஸருக்கு மகனாகப் பிறந்தவர் ஸ்ரீசுகர். அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் மனைவி உத்தரை கர்ப்பமாக இருந்தபோது, பாண்டவர்கள் வம்சத்தையே அழிப்பதற்க்காக, அஸ்வத்தாமா அஸ்திரம் எய்தான். த்ரௌபதியும், உத்தரையும் கண்ணனை சரணடைய, கண்ணனும் கர்ப்பத்தில் தானும் புகுந்து காப்பாற்றினான். இந்தக் குழந்தைதான் பரீக்ஷித். ஸ்ரீசுகர் பரீக்ஷித்திற்கு ஏழு நாட்களில் சொன்னதுதான் ஸ்ரீமத் பாகவதம்.

இது 12 ஸ்கந்தங்கள் கொண்டது. ப்ரஹ்லாத சரித்ரம் 7வது ஸ்கந்தத்திலும், கஜேந்திர மோக்ஷம் 8-வதிலும், ஸ்ரீராமர் சரித்ரம் 9-வதிலும், பின்பு 10-வதில் கண்ணன் கதையும் சொல்லப்பட்டிருக்கின்றன.

விஸ்வாமித்திரர் >> நஹூஷன் >> யயாதி >> யது வம்சத்தில் விருஷ்ணி என்பவருக்கு தேவகரும், உக்ரஸேனரும் பிறந்தனர். தேவகருக்கு தேவகி என்ற பெண்ணும், உக்ரஸேனருக்கு கம்ஸனும் பிறந்தனர். எனவே தேவகி கம்ஸனின் ஒன்றுவிட்ட தங்கை. மதுரா நகரில் தேவகிக்கும், வஸூதேவருக்கும் கல்யாணம் நடந்தது.

இவர்கள் தேரில் வந்து கொண்டிருக்கும்போது (கம்ஸன் தேரை ஓட்டி வந்தான்), ஒரு அசரீரி குரல், “தேவகிக்கு பிறக்கும் 8-வது சிசு உன்னைக் கொல்வான்,” என்று சொல்ல, பயமடைந்த கம்ஸன், தேவகியையும் வஸூதேவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த முதல் 6 சிசுக்களையும் கொன்றான்.

ஏழாவது கர்ப்பத்தை கோகுலத்திற்கு கொண்டுபோய், அங்குள்ள வஸூதேவரின் இன்னொரு மனைவியான ரோஹிணியின் கர்ப்பத்தில் செலுத்த, இதுவே பலராமனாக பிறந்தது.

ஆவணி மாஸம் கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி திதி ரோஹிணி நக்ஷத்திரம் - இந்நன்னாளில் தேவகிக்கு மகனாக ஸ்ரீ பகவான் அவதரித்தார். பகவான் சொல்படியே, குழந்தையை கொண்டுபோய் கோகுலத்தில் நந்தகோபன் - யஸோதாவிடம் விட்டுவிட்டு, அவர்களுக்குப் பிறந்த பெண்குழந்தையை வஸூதேவர் மாற்றி எடுத்து வந்தார்.

இந்தப் பெண்குழந்தையையும் கம்ஸன் கொல்லத் துணிந்த போது, “உன்னை அழிக்க வந்திருக்கும் 8-வது சிசு நான் இல்லை; அது வேறு இடத்தில் வசித்து வருகிறது” எனச் சொல்லிவிட்டு, பெண்குழந்தையாக வந்த பத்ரகாளி (யோகமாயை) மறைந்தாள்.

ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளரும் இந்த சிசுவைக் கொல்ல கம்ஸன் பல அஸுரர்களை அனுப்பினான். பூதனை, சகடாஸுரன், த்ருணாவர்த்தன், தேனுகன், ப்ரலம்பன், அகாஸுரன், கேசி ஆகிய எல்லா அஸுரர்களியும் கண்ணன் அழித்தான். ”பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி! கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!”

கண்ணன் பிறப்பை விஷாகா ஹரி வர்ணித்த விதம் என்னால் எழுத்தில் கொண்டுவர முடியவில்லை. அரங்கத்திலிருந்த அத்தனை பேரும் நேரில் பார்ப்பது போன்ற பக்தி பரவசத்தில் ஆழ்ந்தோம்.

எல்லாருக்கும் ஒரு கர்ப்பம்தான் என்றால், கண்ணனுக்கு மட்டும் இரண்டாம், விஷாகா வர்ணித்தார். எப்படி இரண்டு? இதோ ஆண்டாள் :: “ஒருத்தி மகனாய்” பிறந்தானாம். பின்பு, “தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் (அதாவது, கம்ஸன்) வயிற்றில் நெருப்பென்ன” நின்றானாம். தேவகி வயிற்றில் சிசு, கம்ஸன் வயிற்றில் “நெருப்பு”. வெகுவாக ரசித்தோம்.

கண்ணனின் லீலைகள் தொடரும் (2-வது நாள்).

”வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” சென்றிறைஞ்சுவோம்.

ராஜப்பா
27-06-2009
பகல் 2 மணி

நாள் 2 ..... நாள் 3

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...