Skip to main content

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day3

28 ஜுன் 2009 ஞாயிற்றுக்கிழமை (நாள் 3)

இன்று நாங்கள் வழக்கத்தை விட 5 நிமிஷங்கள் தாமதமாக ஆஸ்திக ஸமாஜத்தை அடைந்தோம். வாசலில் குங்குமம், சந்தனம், சர்க்கரை, கல்கண்டு கொடுத்து "கல்யாண வரவேற்பு." வந்திருந்த பெண்மணிகள் அனைவருக்கும் மல்லிகைப் பூ கொடுத்தார்கள்! நிறையப் பேர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புஷ்பம் அடங்கிய தாம்பாளங்களை எடுத்துவந்தனர். 4 - 5 பேர் பருப்புத்தேங்காய் (ஜோடி)கொண்டுவந்து மேடையில் வைத்தனர். நாம் வந்திருப்பது உபன்யாஸத்திற்கா, இல்லை இடம் மாறி கல்யாண மண்டபத்திற்கு போய்விட்டோமா என ஒரு கணம் வியந்து போனோம்.

மதுரா திரும்பி வந்தது.

பல அஸுரர்களை அனுப்பியும் கண்ணனை கொல்ல முடியாததால், கண்ணனை மதுராவிற்கே அழைத்து கொல்ல கம்ஸன் திட்டமிட்டான். அக்ரூரன் என்பவனை அழைத்து, பிருந்தாவனம் சென்று கண்ணனை அழைத்து வருமாறு உத்தரவிட்டான். அக்ரூரனும் கோகுலம் புறப்பட்டான். அவன் கிருஷ்ண பக்தன் என்பதால் அவனுக்கு கொள்ளை ஆனந்தம், கண்ணனை நேரில், அருகில் பார்க்க இயலும் என்பதால்.

தனுர்யாகம் என்று அக்ரூரன் பொய்க்காரணம் சொன்னாலும், கண்ணனுக்கு உண்மை தெரியும். கம்ஸ வதத்திற்கு வேளை வந்துவிட்டது. ஆயர்பாடி சிறுவர்களிடத்தும், கோபிகளிடத்தும், நந்தகோபன், யஸோதையிடமும் பிரியாவிடை பெற்று மதுரா கிளம்பினான். பலராமனும் உடன் வந்தான். இதற்குப் பிறகு கண்ணன் கோகுலம் திரும்பவேயில்லை, சிறுவர்களையும், கோபிகளையும், நந்தன், யஸோதையையும் பார்க்கவே இல்லை.

மதுராவில் ஒரு வண்ணானிடம் புது வஸ்திரங்களையும், பூக்காரியிடம் மாலைகளையும், சந்தனக்காரியிடம் சந்தனத்தையும் பெற்று தன்னை அலங்கரித்துக் கொண்டு, கம்ஸனின் அரண்மனையை அடைந்தான்.

வாசலில் இருந்த குவாலியபீடம் என்னும் பெரிய யானையிடம் மோதி, அதை அழித்தான். பின்னர் வரிசையாக மல்லர்களுடன் போரிட்டு எல்லாரையும் கொன்றான். மல்லரை மாட்டிய தேவாதிதேவன் அவன். கடைசியில் கம்ஸனுடன் போரிட்டு, அவனை வதம் பண்ணினான்.

சிறையில் அடைபட்டிருந்த உக்ரஸேன மஹாராஜாவை விடுவித்து, பின்னர் தன் பெற்றோர் வஸுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டான். கண்ணன், பலராமனுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது.

ஸாந்தீபன் என்னும் நல்லாசிரியனிடம் வேத்ங்கள், பல கலைகள் ஆகியவற்றை கற்றறிந்தான்; இங்கு அவனது வகுப்புத் தோழனாக இருந்தவர் ஸூதாமா (குசேலர்). பின்பு, மதுராவிலிருந்து யாவரையும் அழைத்துக்கொண்டு த்வாரகை சென்று, கடலை நிலமாக்கி, அரண்மனை கட்டி வாழ்ந்தான்.

ருக்மிணி கல்யாணம்.

விதர்ப்ப தேசத்தின் ராஜாவான பீஷ்மகன் என்பவனுக்கு ருக்மீ முதலான் 5 பிள்ளைகளும், ருக்மிணி என்கிற ஒரு பெண்ணும் இருந்தனர். கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்ட ருக்மிணி, அவன்மீது மிகுந்த ஆசை கொண்டு, அவனையே கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவெடுத்தாள். இது பிடிக்காத அவள் அண்ணன் ருக்மீ அவளை தன் நண்பண் சிசுபாலனுக்கு கொடுக்க முடிவு பண்ணி, திருமண நாளும் குறிக்கப்பட்டது.

ஒரு உஞ்சவிருத்தி பிராமணர் மூலம் கண்ணனுக்கு தூது விட்டாள். திருமணத்தன்று காலை கௌரி பூஜைக்குப் போவதாக சொல்லிக் கோயிலுக்குச் சென்ற அவளை அங்கு காத்திருந்த கண்ணன் தூக்கிச் சென்று கல்யாணம் பண்ணிக் கொண்டான்.ருக்மீ, அவன் தோழர்கள் ஜராசந்தன், சிசுபாலன் ஆகியோரை பலராமன் அழித்தான்.

கிருஷ்ணன் - ருக்மிணிக்கு ப்ரத்யும்னன் என்ற மகன் பிறந்தான். ப்ரத்யும்னனுக்கு அநிருத்தன் பிறந்தான்.

இவ்வாறாக ஜூன் 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மாலைப் பொழுது பொன்னான இனிய பொழுதுகளாக கழிந்தன.

ராஜப்பா
29-06-2009
காலை 11 மணி

நாள் 1 ..... நாள் 2

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011