Skip to main content

குசேலோபாக்கியானம் - விஷாகா ஹரி Vishakha Hari

நேற்று (15-12-2009) மாலை 3-45 மணி சுமாருக்கு திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை. விஷாகா ஹரியின் கதாகாலட்சேபத்திற்கு எப்படி போவது?

மழை கொஞ்சம் விட்டதும், ஒரு ஆட்டோ பிடித்து, நானும் விஜயாவும் MRC நகரிலுள்ள குமாரராஜா முத்தையா செட்டியார் அரங்கத்திற்கு சென்றோம். மழையினால் கூட்டம் கொஞ்சம் குறையும் என எண்ணினோம். 6-30க்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு நுழைந்தால் .. அரங்கம் நிரம்பி வழிந்தது!! 6-30க்கு the hall was packed!

வழக்கம்போல சிரித்த முகத்துடன் ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் கதா காலட்சேபத்தை ஆரம்பித்தார்; சுதாமா என்கிற குசேலரைப் பற்றிய கதை – குழந்தைக்கும் தெரிந்த கதை.

“சேல” என்றால் வஸ்திரம், ஆடை; “கு_சேல” என்றால் கிழிந்த வஸ்திரம், கிழிந்த ஆடை. சுதாமா மிகவும் வறியவர், அவரது ஆடைகள் எப்போதும் கிழிந்தே காணப்படும் என்பதால், அவர் “குசேலர்” என அழைக்கப்பட்டார்.

சுதாமாவும், ஸ்ரீகிருஷ்ணனும் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள், சிறந்த நண்பர்கள். பிற்காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் த்வாரகாவின் மஹாராஜாவாக ஆனார்; சுதாமாபுரி (தற்போதைய போர்பந்தர்)என்னும் ஊரில் சுதாமா தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். மிகவும் வறியவராக இருந்த போதிலும், கிடைத்ததை சாப்பிட்டு மனத்திருப்தியோடு அவரும், அவர் குடும்பமும் இருந்தார்கள்.

பல வருஷங்கள் கடந்தபின், ஒருநாள் குசேலரின் மனைவி (கல்யாணி என விஷாகா குறிப்பிட்டார்) குசேலரை ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து வருமாறு சொன்னாள்; குசேலரைப் பார்க்க கிருஷ்ணர் விரும்புவதாக (சங்கல்பித்தார்) என்று அவள் சொல்ல, உடனே கிளம்பினார். கையில் கொண்டு செல்ல ஒன்றுமே இல்லாததால், அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து 4 பிடி அவலை வாங்கிவந்து கொடுத்தாள். குசேலரும் கிளம்பினார்; கிட்டத்தட்ட 150 கிமீ தூரம்; நடந்தே போனார்.

த்வாரகாவில் அவருக்கு தடபுடலான வரவேற்பு; ஸ்ரீகிருஷ்ணனே பணிவிடைகள் செய்தார். அவலையும் சாப்பிட்டார்; இங்கு அவர் அவல் சாப்பிட சாப்பிட அங்கு குசேலர் வீட்டில் செல்வம் குவியத்தொடங்கியது. திரும்பிய குசேலர் ஸ்ரீகிருஷ்ணனின் அன்பைக் கண்டு வியந்து போனார். ஆனால் குசேலர் செல்வம் வந்தபோதும் தன் பணிவையும், தெய்வ பக்தியையும், நற்குணங்களையும் விடாமல் பழைய வறிய குசேலர் போலவே வாழ்ந்து வந்தார்.

எந்தக் காலத்திலும், என்ன துன்பம் நேர்ந்தாலும் மனிதன் தன் நிலையிலிருந்து மாறக்கூடாது; அன்றலர்ந்த தாமரை போல என்றுமே இருக்க வேண்டும் என்பதே குசேலரின் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

ஹரி ஓம். ஹரி ஓம்

ராஜப்பா
16-12-2009, காலை 11 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை