Skip to main content

ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத பூஜை

ஸ்ரீ ஸத்யநாராயணன் என்பது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இன்னொரு பெயர். இந்த வ்ரதத்தை அனுஷ்டித்து பூஜை செய்யும் முறைகளை ஸ்காந்த புராணம் விவரிக்கிறது.

எப்போது செய்யலாம்?

பௌர்ணமியன்று ஸாயங்காலம் இந்த வ்ரதத்தை அனுஷ்டிப்பது உசிதம் என்கிறது ஸ்காந்த புராணம். பௌர்ணமியன்று செய்ய இயலாவிட்டால், அமாவாஸை, அஷ்டமி, த்வாதஸி திதிகளிலும், ஞாயிறு, திங்கள், வெள்ளிக் கிழமைகளிலும், ஸங்க்ராந்தி, தீபாவளி தினங்களிலும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்யலாம்.

உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என நிறைய பேர்களை பூஜைக்கு அழைத்து உபசாரம் பண்ண வேண்டும்.

தேவையான சில முக்கிய ஸாமான்கள்.
  • ஸ்ரீ ஸத்யநாராயணன் படம் தேவை.
  • மூன்று கலஸங்கள் (அல்லது ஒரு குடம்)
  • நவக்ரஹ பூஜைக்கு வேண்டிய வஸ்திரங்கள், தானியங்கள்
  • பச்சைக் கற்பூரம், ஏலக்காய்
  • புஷ்பங்கள் (நிறைய தேவைப்படும்)
  • 9 கிண்ணங்கள்.
  • அரிசி
  • மற்ற, வழக்கமான பூஜை ஸாமான்கள்.
நிவேதனம்
  • சால்யன்னம் (வெள்ளை சாதம்)
  • க்ருதகுல பாயஸம் (பருப்பு பாயஸம்)
  • மாஷாபூபம் (உளுந்து வடை)
  • குடாபூபம் (அப்பம்)
  • லட்டுகம் (இட்லி)
  • சுண்டல்
  • மோதகம்
  • வாழை, இலந்தை, நாவல், கொய்யாப் பழங்கள்.
ரவா கேஸரியும் செய்யலாம்.

பூஜைகள்

முதலில் பூர்வாங்க பூஜையும், விக்னேஸ்வர பூஜையும் முடித்துக் கொண்டு,. அடுத்து ஸ்ரீ கணபதி முதல் பஞ்ச லோகபால பூஜையை முடித்து, பின்னர் நவக்ரஹ பூஜை தொடங்க வேண்டும். பின்பு இந்திரன் தொடங்கி அஷ்டதிக் பாலக பூஜை.

பின்னர் ஸ்ரீ ஸத்யநாராயண பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அங்க பூஜையும், ஸ்ரீ ஸத்யநாராயண அஷ்டோத்தரமும் செய்ய வேண்டும். அடுத்து, ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தரம். கடைசியாக ஸ்ரீமஹா விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளி சொல்லி புஷ்பங்களால் பூஜை செய்ய வேண்டும்.  தூபம், தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி, மந்திர புஷ்பம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், ப்ரார்த்தனை, ஆரத்தியுடன் பூஜை நிறைவு பெறும்.

இறுதியில், பூஜை செய்து வைத்த சாஸ்திரிகள் (அல்லது வேறு யாராவது) ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத மஹிமைகளைக் குறித்த கதைகளை சொல்லுவார்.

பூஜை முடிந்ததும் நைவேத்ய ப்ரஸாதங்களை பூஜை அனுஷ்டிப்பவர்கள் சாப்பிட்டு, பூஜைக்கு வந்திருக்கும் எல்லாருக்கும் அன்புடன் தரவேண்டும். காரணம், பகவான் அங்கு உள்ளவர்களில் யாராவது ஒருவராக அவதரித்து இருப்பார் என்பது நம்பிக்கை.

வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து சாப்பாடு அளிக்க வேண்டும்.

ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத பூஜை நிறைவு பெறுகிறது.

ஓம் ஸ்ரீ ஸத்யநாராயண நமோ நம:

வருஷந்தோறும் நீரஜா - அஷோக் இந்த பூஜையை செய்கின்றனர். நேற்று 29-மார்ச்-2010 (திங்கட்கிழமை) பண்ணினார்கள். வெகு விமரிசையாக நடந்தது. எல்லாருக்கும் நமஸ்காரங்கள் / ஆசிகள்

ராஜப்பா
11:20 காலை
30 மார்ச் 2010



You may visit  http://annavaramdevasthanam.nic.in/vratham.htm

**
**

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...