Skip to main content

Maiya's Restaurant

இன்று (4-3-2010) நான் Maiya's என்ற உணவகத்தைப் பற்றி எழுதப் போகிறேன்.

இது பெங்களூரில், ஜயநகர் 4th Blockல் பஸ் ஸ்டாண்ட் அருகில், கணேஷ் கோயிலுக்கு எதிரில் உள்ள 5-மாடி உணவகம். பெங்களூரின் “உணவு ஆலயமான” MTR Restaurant-ஐ சேர்ந்தது. ஏப்ரல் 2009-ல் இது BTM Layout-லிருந்து இங்கு மாற்றப்பட்டது. புகழ்பெற்ற MTR-ன் “வாரிசு” என்பதால், பெங்களூர் வாசிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பு.

விஜயா, நீரஜா, நீரஜாவின் அம்மா, அப்பா, அஷோக், மற்றும் நான் ஆறு பேர் நேற்றிரவு (மார்ச் 3) இங்கு உணவு உட்கொள்ள சென்றோம். ஒருவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கொஞ்சம் அசிரத்தையாகவே நான் நுழைந்தேன்.

2-வது மாடியில் உணவுக் கூடம். நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும், அங்கு அமைதி நிலவியது. முதல் ப்ளஸ் பாயிண்ட். பணிவுடனும், புன்சிரிப்போடும் எங்களை கூட்டிப் போய் உட்கார வைத்தார்கள். ப்ளஸ் பாயிண்ட் 2. கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போகாத குறைதான் !!

தட்டு வந்ததும் வராததுமாக, ஒரு வெள்ளி டம்ளரில் (ஆமாம், வெள்ளி டம்ளர்!) தேன் கலந்த appetizer கொடுத்தார்கள். (இது MTR வழக்கமாம்). மிக ருசியாக இருந்தது. பின்னர் அருமையான non-artificial சூப்.

வீட்டில் கூட நாம் பண்ண மறந்து விட்ட பயத்தம்பருப்பு கோசுமல்லி பழைய நினைவுகளை தூண்டியது. ஒரு கூட்டு (chow-chow), ஒரு குருமா, ஒரு உருளைக்கிழங்கு பொரியல் பரிமாறினார்கள்; எல்லாமே authentic north kanara கன்னட சமையலின் அருமை, அதிலும் அந்த உருளைக்கிழங்கு !! ஓ !!

MTR-ன் விசேஷமான சுடச்சுட பூரிகள் வந்தன.பூரியும் உருளைக்கிழங்கும் - விரல்களை நக்க வைக்கும் ருசி. தட்டு காலியாக, காலியாக பூரிகளும், உருளையும் வந்து கொண்டே இருந்தன. எங்கு நின்றிருந்தார்கள்  பரிமாறுபவர்கள்? Mind Blowing Service. கோசுமல்லியை நான் மூன்று முறை கேட்டு, சாப்பிட்டேன்.

அடுத்து வந்தது புலவ். Homemade மசாலா சாமான்கள், அதுவும் மிதமாக, போட்டு செய்தது. கூடவே வெள்ளரி போட்ட கெட்டித் தயிர் பச்சடி (Raitha). கப் கப்பாக குடிக்க வேண்டும் போல ஒரு சின்ன ஆசை! அட்க்கிக் கொண்டேன்.

ஸ்வீட்? ஜிலேபி (ஜாங்கிரி அல்ல) வந்தது. கூடவே “வீட்டில் செய்த” உருளை வறுவல், ஊறுகாய், பஜ்ஜி. அப்போதுதான் வெங்கலப் பானையிலிருந்து வடித்த வெள்ளை வெளேர் சாதம் கொண்டுவந்து பரிமாறினார்கள்.

ஏதோ இரண்டு பண்டங்களை பரிமாற வந்தார்கள். நானும், விஜயாவும் “வேண்டாம், வேண்டாம்,” என மறுதளித்தோம். ஆனால் அவ்ர்கள் விடவில்லை; நெருங்கிய சொந்தக்காரர் போல, “கொஞ்சமாக சாப்பிட்டுப் பாருங்கள், ஸார், நன்றாக இருக்கும்” என வற்புறுத்தி அவைகளை பரிமாறினார்கள். என்ன உபசரிப்பு ! அவை --

மோர்க்குழம்பு ஊற்றினார்கள். குடைமிளகாய் போட்டு காரமும் இனிப்புமாக gravy-like போல் ஒன்றும் ஊற்றினார்கள். கொஞ்சம் நாக்கில் தொட்டு சுவைத்தவுடன், மோர்க்குழம்பை நிறையவே ஊற்றி சாப்பிட்டேன். கன்னட நாட்டிற்கே உரித்தான தனி மணம், சுவை.

பப்படம் சூடாக வந்தது.பின்னர் சாம்பார், ரசம். சாம்பார் சாதத்தின் மேல் இரண்டு ஸ்பூன் நெய். பரிமாறுபவர்கள் எங்கிருந்துதான் பார்த்துக் கொண்டிருந்தார்களோ தெரியவில்லை, ஆனால் தட்டில் ஏதாவது ஒரு ஐட்டம் குறைந்தாலும், உடனே ஓடி வந்து பரிமாறி விடுகிறார்கள். எல்லாமே Unlimited !

அடுத்து, பால் பாயஸம் - நான் சாப்பிடாவிட்டாலும் இது மிக ருசியாக இருந்தது என மற்றவர்கள் சொன்னார்கள். கெட்டித் தயிர் வைத்தார்கள், நிஜமாலுமே கெட்டித்தயிர்!

ஒரு அருமையான கல்யாண விருந்து சாப்பாட்டை சாப்பிட்ட திருப்தியில், கை அலம்பிக் கொண்டு வந்தால், ஐஸ்க்ரீம்+Fruit salad காத்துக் கொண்டிருந்தது. கடைசியாக பீடா.

திருப்தியான, நல்ல சாப்பாடு. ரூ. 130.00 தான். அடுத்த முறை பெங்களூர் போனால், ஜயநகர் 4th Block செல்லுங்கள். Maiya's Highly Recommended.

கீழே தரை தளத்தில் பெரிய்...ய ஒரு இனிப்பகம். காரங்களும், இனிப்புகளும் நிரம்பி வழிகின்றன; வாங்கும் கூட்டமும்தான். 5-வது மாடியில் வட இந்திய உணவு வகைகள் கிடைக்கின்றன; 25-02-2010 முதல் GUJARATI SPECIAL THALI (130.00) பரிமாறுகிறார்கள். அடுத்த முறை இதை சாப்பிட்டு பார்க்க வேண்டும். 

Rajappa
2.00 PM
4 March 2010

Comments

Bangalore said…
You are real genius. You cover all the topics. Please keep on writing the blog. I am a real lover of your blog.
Your blog is informative, useful and moreover trustworthy.
கணேஷ் said…
I did read. At the end, I wondered why I read it – because I wanted to eat all those dishes right-away. If I ever go there, the credit should go to you because of the way you have written this piece!

Ganesh
சுந்தரேசன் said…
Me and Jayakrishna went through your blog. It is quite interesting & while reading it we felt as though we are sitting by the side of you tasting everything including that tasty
Morecozhambu , Payasam ,Pachadi & Pappadam
சுரேஷ் said…
Relished both

1. Menu
2. Style of writing
Prakash said…
I am going there, the next time I visit Bangalore. Simply loved the way you wrote.
santosh said…
Wonderful description.
Felt like i was in the restaurant with u (amma read the post for me!!!)
Unknown said…
Wah ! ! Enna rusi ! Romba taste !! thirumma vandu sapita venum pola irukku...oh ada naan sapidalaya...enakku naan saaptta pola oru feeling.....brilliant chithappa....

Srikanth/Jayashree
Srini said…
Dear Chittappa
Jollu vidaren. Wonderful informatic and enjoyable posting. Many can not express the feeling and not even understand the best thing available in front of us but your writing brought out the inner feeling.

More over, the comment from "Bangalore" -- TRUSTWORTH -- is the biggest achievement you did. It is not easy that others to trust someone else, you did it.

I am so happy to see this comment more than the post.

Vasu

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011