Skip to main content

காஞ்சிபுரம் சென்றோம் ... Kanchipuram 2010

சென்ற ஞாயிறு (ஜூன் 6) நாங்கள் காஞ்சிபுரம் சென்றோம். நான், விஜயா, சுகவனம் ஆகிய மூவர் மட்டும் அர்விந்த் காரில் ஓட்டுனர் வைத்துக் கொண்டு சென்றோம். காலை 7-15 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றோம்.

எங்கள்  பெரியப்பாவின் கொள்ளுப் பேத்திக்கு காஞ்சியில் 7-ஆம் தேதி கல்யாணம். முதலில், சரோஜாவும், அத்திம்பேரும் வருவதாக இருந்தனர். சரோஜாவிற்கு காலில் அடி பட்டதால், அவர்கள் வரவில்லை.

பெரியப்பா சாம்பமூர்த்தியின் 4 பிள்ளைகளில் மூத்தவர் வீரராகவன; இவரது மூத்த மகன் சுப்ரமணியத்தின் (மணி) மகளுக்கு கல்யாணம்.

கல்யாணம் தவிர நிறைய கோயில்கள் பார்த்து தரிஸிப்பதுதான் எங்கள் காஞ்சி பயணத்தின் முக்கிய நோக்கம்.

6ஆம் தேதி காலை காஞ்சியில் இட்லி-பொங்கல்-வடை சாப்பிட்டு விட்டு, நேராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். பல்லவர்களால் 1053ல் கட்டப்பெற்ற புராதனக் கோயில் இது. பெருந்தேவி தாயாருடன் ஸ்ரீவரதராஜப் பெருமான் இருக்கிறார்.

மிகப் பெரிய கோயில். பல இடங்களில் நிறையப் படிகள் ஏறி, இறங்கவேண்டும். இங்குதான் தங்கப் பல்லி,  வெள்ளிப் பல்லி உள்ளன. ஸ்ரீவரதராஜப் பெருமாளின் கருட சேவை புகழ்பெற்றது; லக்ஷக் கணக்கில் பக்தர்கள் வந்து தரிஸிப்பார்கள். அவசியம் பார்க்க வேண்டிய கோயில்.

அடுத்து ஸ்ரீ கைலாஸநாதர் கோயிலுக்குச் சென்றோம். இதுவும் பல்லவர்களால் 8ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. கோயிலின் விமானமும், சிற்ப வேலைப்பாடுகளும் புகழ் பெற்றவை.

6ஆம் தேதி மாலை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம்; இது 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில். . பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான (பூமி) இது 5ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட புராதனக் கோயில். இதன் ராஜ கோபுரம் மிகவும் உயரமான ஒன்று; கிருஷ்ணதேவ ராயரால் கட்டப்பெற்றது

இந்தக் கோயிலில் அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது. கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் புகழ்பெற்றது. மண்டபத்தில் பல நடனச் சிற்பங்கள் உள்ளன. ஸ்தல வ்ருக்ஷமான மாமரம் 3500 வருஷங்கள் புராதனமானது. இதில் 4 வகை மாம்பழங்கள் பழுக்கின்றன. இவை நான்கு வேதங்களைக் குறிப்பிடுவன.

கோயிலின் நீண்ட நெடிய (அம்மாடி, எத்தனை நீளம்!) பிராகாரத்தில் ஒரு சன்னதியில் ஒரே சிவ லிங்கத்தில் 1008 சிவலிங்கங்கள் பதிப்பிக்க்ப் பட்டுள்ளன. கோயிலில் மொத்தம் 5 பிராகாரங்கள் இருக்கின்றன.

பின்னர் சங்கரமடம் சென்று இரண்டு ஸ்வாமிகளையும் தரிஸித்தோம்.

அடுத்து, குமரக்கோட்டம் என்று சொல்லப்படும் முருகன் கோயிலுக்குச் சென்றோம். 1000 வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கே முருகனுக்கு 5 தலை நாகம் குடைபிடிக்கிறது. கந்த சஷ்டி விழாவின் போது பல பக்தர்கள் கோயிலை 108 முறை சுற்றுவார்கள்.

அடுத்து, காமாக்ஷி அம்மன் கோயிலிற்குச் சென்றோம். உலகப் புகழ் பெற்ற கோயில் இது. 14ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பெற்ற அழகிய கோயில். பாரத தேசத்திலுள்ள ஏழு மோக்ஷபுரிகளில் காஞ்சியும் ஒன்று.
                             
நான்கு நுழைவாயில்கள் கோபுரங்கள் உள்ளன. பிரதான கோபுரம் வழியாக நுழைந்தால், இடது புறம் காலபைரவரும், வலது புறம் மகிஷாசுர மர்த்தனியும் இருக்கின்றனர். நடுவில் உயரமான த்வஜஸ்தம்பம்.

காமாக்ஷி அம்மனை சுற்றி வெளி பிராகாரத்தில், அய்யப்பன், சரஸ்வதி, அன்னபூரணி, ஆதி சங்கராச்சார்யா ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ”காயத்ரி மண்டபம்” என்று அழைக்கப்படும் உள்பிராகாரத்தில் அம்மனை சுற்றி வராஹி, அரூப லக்ஷ்மி, கள்வர்பெருமாள், ரூபலக்ஷ்மி, அர்த்த நாரீஸ்வரர் ஆகியோர் உள்ளனர். (கள்வர் பெருமாள் சன்னதி வைஷ்ணவர்களின் 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றாகும்.)
     
                                     காமாக்ஷி அம்மன்

அம்மனுக்கு எதிரில் ஸ்ரீசக்ர யந்திரம் எனப்படும் ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம் உள்ளது. இது ஆதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளால் ப்ரதிஷ்டை பண்ணப்பட்டது.

மேலும் பல பயனுள்ள விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.

கடைசியாக, 7ஆம் தேதி காலையில் உலகளந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. கோயிலின் உள்ளே இன்னும் மூன்று திவ்யதேசங்கள் (நீரகம், காரகம், காராவண்ணம்) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளந்த பெருமாள் என்றும் திரிவிக்ரமன் எனவும் பெருமாள் அழைக்கப்படுகிறார். தாயார் அமுதவல்லித் தாயார்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி”ய பிறகு 7ஆம் தேதி மதியம் சென்னை திரும்பினோம்.

இடையில், கல்யாணத்திலும் பங்குபெற்று, பல உறவினர்களை சந்தித்தோம். ஆக மொத்தம் இந்தப் பயணம் மிக இனிமையாக இருந்தது.

சென்ற 2009ஆம் வருஷம் இதே ஜூனில் 4ம் தேதி காஞ்சிபுரம் சென்றோம். விவரங்கள் இங்கே. கண்டிப்பாக படிக்கவும்.

ராஜப்பா
காலை 11 மணி
14 ஜூன் 2010

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011