Skip to main content

கல்யாண சமையல் சாதம் ...

நேற்று மாலை ஒரு கல்யாண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்னால் இன்னொரு வரவேற்பிற்கு.

இரண்டு விழாக்களிலும் பல ஒற்றுமைகள் கண்டேன். கல்யாணத்திற்கு முதல் நாள் மாலையே வரவேற்பு. கூட்டமான கூட்டம். உணவருந்தும் கூடம் மிகச்சிறியது. முதல் பந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு காத்திருந்த அடுத்த பந்தி! சாப்பிட்ட இலைகளை எடுப்பதற்கு முன்பே அடித்துப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டிய கட்டாயம். காலத்தின் கோலம்.

ஒருவழியாக பந்தியில் அமர்ந்து விட்டீர்களா? கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். இதோ - பரிமாற வந்துவிட்டார்கள்.

வரவேற்பு உணவு வகைகளும் வித்தியாசம் ஏதும் இல்லாமல் ஒரே மாதிரியாக ஆகிவிட்டன; பாதி அல்லது கால் (1/4) ருமாலி ரோட்டி (நாங்களெல்லாம் பஞ்சாபி உணவுதான் சாப்பிடுவோம், தெரியுமா?), ஒரு டேபிள்ஸ்பூன் குருமா, ஒரு டீஸ்பூன் பச்சடி (மன்னிக்கவும், ராய்த்தா).

ஒரு சிறிய ரசக் கரண்டி புலவ், இன்னொரு ரசக் கரண்டி சாம்பார் சாதம். கோஃப்தா ஒன்று, ஒரு ரசக் கரண்டி தயிர் சாதம்.

சாப்பிட்டாச்சா? எழுந்திருங்கள், அடுத்த இலையை எடுத்தாகி விட்டது, பேப்பர் ரோலும் வந்துவிட்டது.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் பரிமாறுகிறார்கள். உங்கள் இலையில் என்ன போட்டார்கள் என்பதை நீங்கள் உணரும்போது, பரிமாறுபவர் பத்து இலை தாண்டியிருப்பார். பின்னர் ஒரேயடியாக மாயமாக மறைந்தே விடுவார்.

இரண்டாவது முறையாக நீங்கள் ஏதேனும் விரும்பினால் ... அய்யோ பாவம் நீங்கள் ... கேட்க அங்கு ஒரு ஈ, காக்கா இருக்காது. (இலையை எடுக்க ஆள் வந்தாச்சு, எழுந்திருங்க)

கை அலம்பிக் கொண்டு வந்தால், ஒரு ராஜபாளையத்துக்காரனோ, ராசிபுரக்காரனோ ராஜஸ்தானி மாதிரி வேஷம் (முக்கியமாக அந்த தலைப்பாகை) போட்டுக்கொண்டு வெற்றிலை மடித்துக் கொடுப்பான். ஏன் அந்த வேஷம்? தமிழ் உடையில் வெற்றிலை கசக்குமோ?

பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் ஷெர்வானி-குர்த்தாதான். (ஷாருக், ஹ்ரிதிக் தோற்றார்கள்) உணவு தொடங்கி வெற்றிலை வரை எங்கும் வட இந்திய கலாச்சாரம்! அனைவரும் பேசுவது ஆங்கிலத்தில்.

இதுதான் சென்னையின் கல்யாண வரவேற்பு. வாழிய, வாழியவே.

முக்கியக் குறிப்பு:
வரவேற்பிற்கு போவதற்கு முன்பு, வீட்டில் தயிர்சாதம் தயாராக இருக்கட்டும்; அரை வயிற்றோடு திரும்பிய பின் சாப்பிட வசதியாக இருக்கும்.

ராஜப்பா
10:30 மணி
2-6-2010

Comments

Bangalore said…
Better it can buffet. Especially for reception. For marriage, it can be normal pandhi, since more people come for reception than marriage. It reduces the wastage and gives satisfaction.

Sir, because of expensive life, who's serving food like olden days. We need to adjust with the time.
Anonymous said…
correction : Better it can be buffet.
SA Narayanan said…
##who's serving food like olden days? ###

There are many caterers still who do serve "like olden days".

## Better it can be buffet ##

Buffet style needs much more space than a traditional Pandhi style. Moreover, for serving in buffet style, the caterers charge more.

Thirdly, in buffet style, one particular dish will be in much demand than others (example, if Sambhar Sadam is tasty, then people will eat thrice or four times the Sambhar Sadam). It won't be economical for the caterer.

Anyway, I too prefer buffet style than the traditional one.
Siva said…
# There are many caterers still who do serve "like olden days".

Then rate will be more. In the current scenario, I don't think so, it will be possible with nominal rates.

FYI, nowadays for buffet and Pandhi style more or like same. That too, for reception, it's same.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011