Skip to main content

Posts

Showing posts from October, 2010

The Lamps

சென்னையின் பல தெருவோரங்களிலும், கடற்கரைகளிலும், இன்னபிற இடங்களிலும் தள்ளுவண்டிகளில், இரவு நேரங்களில் பளிச்சென ஒளி வீசிக்கொண்டிருக்கும் மின் ட்யூப் விளக்குகளைப் பார்த்திருப்பீர்கள். (உங்கள் ஊர்களிலும் கூட இவை காணப்படும்) இந்த விளக்குகளுக்கு மின்இணைப்பு எங்கிருந்து கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு வியப்பான விஷயமாக இருந்து வந்தது. சென்ற மாதத்தில் ஒரு மாலைப் பொழுதில் தெருவில் நான் நடந்து கொண்டிருக்கையில் திடீரென எனது கவனம் ஒரு சைக்கிள்-ரிக்‌ஷா போன்ற ஒரு வண்டியின் மீது விழுந்தது. அந்த வண்டியில் ஒரு ஆள் கிட்டத்தட்ட 50-60 விளக்குகளை (பார்ப்பதற்கு பழைய பெட்ரோமாக்ஸ் விளக்குகளை போலிருக்கும்) ஏற்றி வந்து ஒவ்வொரு தள்ளுவண்டிக்கும் ஒன்று அல்லது இரண்டு விளக்குகள் வீதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் மர்மம் துலங்கியது - 100-200 விளக்குகளை வாங்கி தினமும் பகல் பொழுதில் அவற்றின் BATTERY களை Charge பண்ணி மாலை வேளையில் அவற்றை வாடகைக்குக் கொடுக்க வேண்டியது, ஒரு இரவுக்கு இத்தனை என பணம் வசூலித்துக் கொள்வது, பின்பு இரவு 9-30, 10 மணிக்கு திரும்ப வந்து விளக்குகளைப் பெற்றுச் செல்வது - இதுதா...

ஆண்டவனின் திருநாமங்கள்

மிக முக்கிய குறிப்பு (எச்சரிக்கையும் கூட ..) இந்த போஸ்ட் ஆன்மிகம் பற்றியது. நீள ... ... மானதும் கூட. DRY யாக இருக்க மிகவும் வாய்ப்புள்ளது. படிக்க வேண்டாமென்றால் ... இத்தோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் அடுத்த வேலையைப் பார்க்கலாம். என்னுடைய சமீபத்திய பாகவதம் blog post-ல் குறிப்பிட்டுள்ளது போல ஸ்ரீமத் பாகவதத்தில் தற்போது 6-வது ஸ்கந்தத்தை ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபந்யாஸம் பண்ணி வருகிறார். 6-வது ஸ்கந்தம் (அத்தியாயம்) ஆண்டவனின் நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணுவதன் மஹிமைகளை விளக்குகிறது. எப்போதும், ஸதா ஸர்வகாலமும் பகவானின் நாமங்களை ஸ்மரித்துக் கொண்டு இருக்கவேண்டும் என சொல்கிறது. நான்கு யுகங்களில் முதலாவதான் கிருத யுகத்தில் தியானத்தால் முக்தி அடையலாம் எனச் சொல்லப்பட்டது. அடுத்த யுகத்தில் ( த்ரேதா யுகம் ), யாகங்கள் செய்வதனால் ( ஆராதனைகள் ) மட்டுமே முக்தி கிட்டும் என சொல்லப்பட்டது. மூன்றாவது  ( துவாபரம் ) யுகத்தில் அர்ச்சனை பண்ணுவதாலேயே இது கிடைக்கும் எனப்பட்டது. தற்போது நடக்கும் கலி யுகத்தில் இதை விட சுலபமாக, கேசவன் நாமங்களை சங்கீர்த்தனம் மூலமாகவே அடையலாம் என சொல்லப்ப்டுகிறத...

ஸ்ரீமத் பாகவதம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

பாகவதம் 6-வது ஸ்கந்தம். ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத உபந்யாஸத்தை சென்ற வருஷம் (2009) நவம்பர் 9 ஆம் தேதியன்று ஆரம்பித்து, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-க்கு பொதிகை டீவியில் நிகழ்த்தி வருவது தெரிந்ததே. நேற்று (15 அக்டோபர் 2010) அன்று பாகவதத்தின் 5-வது ஸ்கந்தத்தை முடித்து, 6-வது ஸ்கந்தம் ஆரம்பித்தார். 5-வது ஸ்கந்தத்தில் பூகோளம் விவரிக்கப்பட்டது. ஸூர்ய மணடலத்திற்கு மேலே ஏழு லோகங்களும், பூமிக்கு கீழே அதலம் முதல் பாதாளம் வரை ஏழு லோகங்களும் விளக்கப்பட்டன. 6-வது ஸ்கந்தம் பகவானின் திருநாம சங்கீர்த்தனத்தின் மஹிமையை எடுத்துச் சொல்கிறது. “ நாராயண கவசத்”தை விவரிக்கிறது.  பொறுத்திருந்து வேளுக்குடி ஸ்வாமிகளை கேட்போம் - பகவானின் அருளைப் பெறுவோம். ராஜப்பா 16-10-2010 காலை 10:00 மணி

விடியல் நேரத்தில் ...

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவுகின்றனவோ இல்லையோ, புள்ளும் சிலம்பியதோ இல்லையோ, புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்கிறதோ இல்லையோ ... விடியற்காலை. பொழுது எப்போதுமே, எந்த ஊரிலுமே மிக இனிமையான பொழுது என்பது உண்மை. 6-45 மணி என்பதை சிற்றஞ் சிறுகாலை எனச் சொல்ல முடியாவிட்டாலும், ”விடியற்காலை” எனச் சொல்லலாமா? அந்த இனிமையான நேரத்தில் சென்னையில் என்ன நிகழ்கிறது? அதோ பாருங்கள் - புத்தம் புதிய, அச்சு மையின் நறுமணத்தோடு கூடிய செய்தித்தாள்கள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டுள்ளன! தமிழில்தான் எத்தனை எத்தனை நாளேடுகள், வார. மாத இதழ்கள் !! எல்லாம் வண்ண மயம். விற்பனை பரபரப்பு. எதிரிலே, வண்டியிலே சுடச்சுட (நிஜமாலுமே சூடாக) இட்லி, தோசை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - இட்லி மணமும், சாம்பார் மணமும் “வா வா” என அழைக்கின்றன. வண்டியைச் சுற்றி 5 - 6 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்குத்தான் வறட்டு கௌரவம் .... ரோடை கடக்க வேண்டுமா, பார்த்து கடக்கவும்; காலை 6-45 தானே என அலக்ஷியம் வேண்டாம். வேல், பனிமலர், வெங்கடேசா, செட்டிநாடு வித்யாக்ஷ்ரம், PS செகண்டரி ஸ்கூல...