Skip to main content

ஆண்டவனின் திருநாமங்கள்

மிக முக்கிய குறிப்பு (எச்சரிக்கையும் கூட ..)

இந்த போஸ்ட் ஆன்மிகம் பற்றியது. நீள ... ... மானதும் கூட. DRY யாக இருக்க மிகவும் வாய்ப்புள்ளது. படிக்க வேண்டாமென்றால் ... இத்தோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் அடுத்த வேலையைப் பார்க்கலாம்.

என்னுடைய சமீபத்திய பாகவதம் blog post-ல் குறிப்பிட்டுள்ளது போல ஸ்ரீமத் பாகவதத்தில் தற்போது 6-வது ஸ்கந்தத்தை ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபந்யாஸம் பண்ணி வருகிறார். 6-வது ஸ்கந்தம் (அத்தியாயம்) ஆண்டவனின் நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணுவதன் மஹிமைகளை விளக்குகிறது. எப்போதும், ஸதா ஸர்வகாலமும் பகவானின் நாமங்களை ஸ்மரித்துக் கொண்டு இருக்கவேண்டும் என சொல்கிறது.

நான்கு யுகங்களில் முதலாவதான் கிருத யுகத்தில் தியானத்தால் முக்தி அடையலாம் எனச் சொல்லப்பட்டது. அடுத்த யுகத்தில் (த்ரேதா யுகம்), யாகங்கள் செய்வதனால் (ஆராதனைகள்) மட்டுமே முக்தி கிட்டும் என சொல்லப்பட்டது. மூன்றாவது  (துவாபரம்) யுகத்தில் அர்ச்சனை பண்ணுவதாலேயே இது கிடைக்கும் எனப்பட்டது. தற்போது நடக்கும் கலி யுகத்தில் இதை விட சுலபமாக, கேசவன் நாமங்களை சங்கீர்த்தனம் மூலமாகவே அடையலாம் என சொல்லப்ப்டுகிறது (விஷ்ணுபுராணம், 6,2,17).

மஹாபாரதத்தின் மிக முக்கிய அத்தியாயமான “ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்” இதைத்தான் வலியுறுத்துகிறது.

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்து இருக்கிறார். அவரிடம் வந்த தர்மன் (யுதிஷ்டிரர் என்றே எழுதுகிறேன்) ,

எல்லா தர்மங்களையும், பாவங்களைப் போக்கும் எல்லா முறைகளையும் குறைவின்றி கேட்டுள்ளேன்”

ஷ்ருத்வா தர்மான சேஷேண பாவனானி ச ஸர்வஷ:”

எனக் கூறியவர்,

எல்லா புருஷார்த்தங்களையும் பெறச் செய்வதாயும், சிறு முயற்சியால் பெரும்பயன் அடையக் கூடியதாயுமுள்ள உபாயம் சொல்லப்படவில்லை” என அவர் எண்ணியதால், பீஷ்மரை அவர் மீண்டும் கேட்டார்.

“யுதிஷ்டிர சாந்தனவம் புனரே வாப்யஷத”

அவர் பீஷ்மரை ஆறு கேள்விகள் கேட்டார்:

1) உலகில் ஒன்றேயாகிய தெய்வம் எது?
2) ஒன்றேயாகிய புகலிடம் எது?

”கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்”
--- --- --- --- ---
3) எவனை துதித்து மனிதர்கள்  உயர்நலனை பெறுவார்கள்?
4) எவனை அர்ச்சித்து (உயர்நலனைப் பெறுவார்கள்)?

”ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயர்-மானவா: சுபம்”
--- --- --- --- ---
5) எந்த தருமமானது எல்லா தருமங்களிலும் தலையாய சிறந்த தருமமாக கருதப்படுகிறது?

“கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:”
 --- --- --- --- ---
6) (பிறவியடைந்த) ஜந்து எதை ஜபித்து பிறந்துழலும் தளையினின்று விடுபடும்?

“கிம் ஜபன் முச்யதே ஜந்துர்-ஜன்மஸம்ஸார-பந்தனாத்”
 --- --- --- --- ---
*** *** **** ***
யுதிஷ்டிரரின் கேள்விகள் முடிந்தன - பீஷ்மர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

உலக நாயகனும், தேவதேவனும், அளவு கடந்தவனும் ஆகிய புருஷோத்தமனை இடைவிடா முயற்சியுடன் ஆயிரம் நாமங்களால் ஒரு புருஷன் துதித்தும் ..” [கேள்வி - 6 க்கான பதில்]

“ஜகத்ப்ரபும் தேவதேவ-மனந்தம் புருஷோத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்திக”
--- --- --- --- --- ---

“மாறுபாடு அற்ற அந்தப் புருஷனையே பக்தியுடன் அர்ச்சித்தும், அவனையே மேலும் த்யானித்தும், புகழ்ந்தும், நமஸ்கரித்தும் வழிபடுபவன்” [கேள்வி - 4]

”தமேவ சார்ச்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவந் நமஸ்யம்ச்ச யஜமானஸ்-தமேவ ச”

--- --- --- --- --- ---
”ஆதியும் முடிவுமற்றவனும், எல்லா உலக நாயகர்க்கும் நாயகனும், உலகனைத்தையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவனும் ஆகிய விஷ்ணுவை எப்போதும் போற்றி எல்லா துன்பங்களையும் கடந்து செல்பவன் ஆவான்... “ [கேள்வி - 3 ]

”அனாதி நிதனம் விஷ்ணும் ஸர்வலோக-மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வது:க்காதிகோ பவேத்”

”ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மஜ்ஞம் லோகானம் கீர்த்திவர்த்தனம்
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத-பவோத்பவம்”

--- --- --- --- --- ---
”புண்டரீகாக்ஷனான பகவானை எப்போதும் பக்தியுடன் ஒரு மனிதன் ஸ்தோத்திரத்தால் அர்ச்சித்து வழிபடுவானாயின், இந்த தருமமே எல்லா தருமங்களிலும் மிகச்சிறந்தது என்பது என் கொள்கை” [5-வது கேள்வி]

”ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோ-அ-திகதமோ மத:
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை-ரர்ச்சேந்-நர: ஸதா”
--- --- --- --- --- ---

“எது சிறந்ததும், பெரிதுமான ஒளியோ, எது சிறந்ததும் பெரிதுமான தவமே வடிவாகியதோ,  எது சிறந்ததும் பெரிதுமான ப்ரஹ்மமோ, எது சிறந்த புகலிடமோ (அதுவே ஒன்றேயாகிய புகலிடம்.” [ கேள்வி - 2]

“பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்”

--- --- --- --- --- ---
“பரிசுத்தமானவற்றுள் எவன் பரிசுத்தமாயும், மங்களமானவற்றுள் மங்களமாயும், தேவதைகளுக்குள் தேவதையாகவும், (உயிர் தரும்) அழிவற்ற பிதாவாயும் எவன் (உள்ளானோ, அவனே உலகில் ஒன்றாகிய தெய்வம்).” [கேள்வி - 1]

“பவித்ராணாம் பவித்ரம் யோ மங்கலானாஞ்ச மங்கலம்
தைவதம் தேவதானாஞ்ச பூதானாம் யோ-அ-வ்யய பிதா”

--- --- --- --- --- ---

யுதிஷ்டிரருடைய ஆறு கேள்விகளுக்கும் பதில் கூறிய பீஷ்மர், கடைசியாக கூறுகிறார் ::

”மஹாத்மாவான பகவானுக்கு எந்தெந்த நாமங்கள் குணங்களை பற்றியவையாய்ப் பிரசித்தமானதோ, ரிஷிகளால் நன்கு கீர்த்தனம் செய்யப் பெற்றவையோ, அவற்றைப் புருஷார்த்தங்களைப் பெற்று, மேன்மை அடைவதற்காக (உனக்குக் கூறுகிறேன்”

”யானி நாமானி கௌணாணி விக்யாதானி மஹாத்மன:
ருஷிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே.”

--- --- --- --- --- ---
பின்பு,

“விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேச்வரம்
அநேக-ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம்”

என்று விஷ்ணுவை நமஸ்கரித்துவிட்டு,

ஸ்ரீவிஷ்ணுவின் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரமாகிய மஹா மந்திரத்தை

ஓம் ஸ்ரீவிஸ்வஸ்மை நம:
ஓம் விஷ்ணவே நம:

என ஆரம்பித்து

ஓம் ஸர்வப்ரஹரணாயுதாய நம:

என்பது வரை 1000 நாமங்களை பீஷ்மர் உபதேசிக்கிறார்.

பகவானின் நாமங்களை அர்ச்சிப்பது மிக சிறந்தது என்பது பாகவதத்திலும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்திலும், மற்ற பல புராண இதிஹாசங்களிலும் கூறப்பட்டிருக்கிறது என்பதால், நாம் எல்லாரும் தினந்தோறும் சில நாமங்களையாவது சொல்வோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.


ராஜப்பா
21-10-2010
காலை 1000 மணி

இன்னொரு முக்கிய குறிப்பு ::

ஒவ்வொருவரின் வீட்டிலும் கீழ்க்கண்ட ஐந்து புஸ்தகங்களும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம் ---- ராமாயணம், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.

Comments

Siva said…
Hello Uncle,

How interestingly you have written! We cannot say it's a dry subject.
But, that caution makes people to read further.

Head off to your writing. It's an awesome way of telling opinion to the people.

Rgds,
Siva
SA Narayanan said…
Thank you Mr Siva for the nice words.
Srini said…
Dear Chittappa
Good to read. Will try to have(read) the books you mentioned below.

Based this, Thirumangai Aazhwar written the following pasuram in Tamil, easy to understand for common people.

குலந்தரும் செல்வந் தந்திடும்
அடியார் படுதுய ராயின வெல்லாம
நிலந்தரும் செய்யும் நீள்விசும்பருளும
அருளோடு பெருநில மளிக்கும
வளந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினு மாயின செய்யும
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன
நாராயணா வென்னும் நாமம்

So Narayana Namam will give anything and everything one wants.
Dear Chittappa

A very well written piece of information about the significance of Vishnu sahasranamam and the importance of chanting Lord's name.

Probably, that is one of the reason, when one is dying moments, people used to say "Narayana, Narayana" in their ears and it is believed one gets place at Vaikuntham

Our great MS version of Vishnu sahasranamam was ringing in ears when I read your blog

Thanks

Suresh
Sundaresan said…
Your blog on Aanmikam is interesting and even though I have read
these Q & A many a times before this, we read it again and we felt we are doing this for the first time . We are hearing Velugudi Krishnan daily in the morning and happens to be our first assignment. We request all youngsters to tune Podhigai T.V. atleast from 06-30 A.M.

Sundaresan, Pune
23 Oct 2010

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011